மனதோடு மழைக்காலம்

மனதோடு மழைக்காலம் திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] அற்புதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திரைப்பட நடிகை நித்யதாஸ் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

மனதோடு மழைக்காலம்
இயக்கம்அற்புதன்
தயாரிப்புஇ. எல். கே ஆண்ட்டனி
கதைஅற்புதன்
இசைகார்த்திக் ராஜா
நடிப்புஷாம்
நித்யதாஸ்
ஷமிக்ஷா
ஜெய் சூர்யா
வெளியீடுசெப்டம்பர் 15, 2006
ஓட்டம்145 நிமிடங்கள்
மொழிதமிழ்

வகை தொகு

நாடகப்படம் / மசாலாப்படம்

கதை தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

வயது போனவரென்ற காரணத்தினால் அவமானப் பேச்சுக்களுக்கு ஆளாகும் சிவா (ஷாம்) தன்னுடைய பழமை நினைவுகளை அலைமோதச் சிந்திக்கின்றார். தனது கல்லூரியில் படித்த சத்யாவிடம் (நித்யதாஸ்) நெருங்கிய தோழனாக இருந்ததனையும் பின்னைய காலங்களில் சத்யாவின் பெற்றோர் அவர்கள் காதலர்கள் என்ற தவறான கூற்றினை தெரிவிக்கும் போது கோபம் கொள்கின்றார் சிவா. இவர்களிடையே இருப்பது காதல் அதனால் தனக்கு மணமாக இருந்த காதலியைச் சிவாவிற்காக விட்டிக் கொடுக்க நினைக்கின்றார் கார்த்திக் (ஜெய் சூர்யா) ஆனால் அவர்கள் வெறும் நண்பர்களே என அறிந்து அனைவரும் புரிந்தும் கொள்கின்றனர். இதற்கிடையில் சிவாவைக் காதலித்த பெண்ணான ஸ்ருதியையே சிவா திருமணமும் செய்து கொள்கின்றார். ஆனால் குழந்தையொன்றினைப் பெற்றெடுத்த பின்னர் அவர் இறக்கவே நொந்து போகின்றார் சிவா. பின்னர் அவர் வயதானபின்னர் சத்யா நோய்வாய்ப்பட்டு இறக்கவே சத்யாவின் கணவரான கார்த்திக்கிற்கு ஆறுதல் கூறுகின்றார் சிவா. சிவாவின் மகனோ சிவாவை வெளியில் விரட்டுவதற்காக தனக்கு வேலை மாற்றம் வந்திருப்பதாக பொய்யொன்றினையும் கூறுகின்றான். இதனால் வருத்தப்படும் சிவாவுக்கு ஆறுதலாக அவரின் உயிரினும் மேலாக மதித்த தோழியான சத்யாவின் கணவர் விளங்குகின்றார்.

சான்றுகள் தொகு"https://ta.wikipedia.org/w/index.php?title=மனதோடு_மழைக்காலம்&oldid=2706664" இலிருந்து மீள்விக்கப்பட்டது