மனிங்-டெவொன்சயர் அரசியல் சீர்திருத்தம்

(மனிங் - டெவொங்சாயர் அரசியல் அமைப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மனிங்-டெவொன்சயர் அரசியல் சீர்திருத்தம் (Manning-Devonshire Reforms) என்பது இலங்கையில் 1924 முதல் 1931ம் ஆண்டு வரை வழக்கிலிருந்த அரசியலமைப்பு. பிரித்தானியரால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நான்காவது அரசியலமைப்பும் இதுவே. 1921ம் ஆண்டு முதல் 1924ம் ஆண்டு வரை தற்காலிக மெனிங் அரசியலமைப்பு இலங்கையில் அமுலிலிருந்த காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமது நலவுரிமைகளுக்காக குரல்கொடுத்ததன் விளைவாகவும் இலங்கையில் உருவாக்கப்பட்டிருந்த தேசிய காங்கிரசின் அழுத்தங்கள் காரணமாகவும் உள்நாட்டுப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முகமாக இந்த அரசியலமைப்பு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

சட்ட நிரூபண சபையின் கட்டமைப்பு

தொகு

மனிங்-டெவொன்சயர் அரசியலமைப்பின் கீழ் சட்டநிரூபண சபை எண்ணிக்கை 49 ஆக அதிகரிக்கப்பட்டது. இதில் உத்தியோக சார்புள்ளோர் எண்ணிக்கை 12 ஆகும். அதேநேரம், உத்தியோக சார்பற்றோர் எண்ணிக்கை 37 ஆக உயர்த்தப்பட்டது.

உத்தியோக சார்புள்ளோர் 12

தொகு

மனிங் - டெவொங்சாயர் அரசியலமைப்பின் கீழ் உத்தியோக சார்புள்ளோர் எண்ணிக்கை 12 ஆகக் குறைக்கப்பட்டது. இதில்

பதவிவழி காரணமாக 5

பிரித்தானிய அரசாங்கத்தின் ஊதியம் பெறும் பின்வருவோர் பதவிவழி காரணமாக சட்ட நிரூபண சபையில் அங்கத்துவம் பெற்றனர்.

  • உயர் இராணுவ அதிகாரி
  • குடியேற்ற நாட்டுக் காரியதரிசி
  • சட்டத்துறை நாயகம்
  • வரிக்கட்டுப்பாட்டாளர்
  • பொருளாளர்

நியமன அதிகாரிகள் 7

சட்டநிரூபண சபையில் இடம்பெறக்கூடிய மீதமான ஏழு உத்தியோக சார்புள்ளோர்களும் தேசாதிபதியால் நியமிக்கப்பட்டனர். அச்சமயம் இலங்கையில் பணியாற்றி வந்த பிரித்தானிய அதிகாரிகளே இவ்வாறு நியமிக்கப்பட்டனர்.

உத்தியோக சார்பற்றோர் 37

தொகு

மனிங்-டெவொங்சாயர் அரசியலமைப்புக்கு முன்னைய அரசியலமைப்புகளை விட முதல் தடவையாக உத்தியோகசார்பற்றோர் எண்ணிக்கை உத்தியோக சார்புள்ளோர் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகரிக்கப்பட்டது. இதில் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர் எண்ணிக்கை 29 ஆக இருந்தது. இதில் பதவிவழி காரணமான பிரதிநிதிகளுள் பிரதேச ரீதியாக 23 அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்

தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர் எண்ணிக்கை 29

பிரதேச ரீதியாக 23

  • மேல்மாகாணம் - 5
  • மத்திய மாகாணம் - 2
  • தென் மாகாணம் - 3
  • வடமாகாணம் - 3
  • வடமேல் மாகாணம் - 2
  • கிழக்கு மாகாணம் - 2
  • வடமத்திய மாகாணம் - 1
  • ஊவா மாகாணம் - 1
  • சப்ரகமுவ மாகாணம் - 2
  • கொழும்பு நகரம் - 2

இனரீதியாக 6

இனரீதியாக 6 பேர் தெரிவு செய்யப்பட்டனர்

  • நாட்டுப்புற ஐரோப்பியர் - 1
  • நகர்ப்புற ஐரோப்பியர் - 1
  • வர்த்தக ஐரோப்பியர் - 1
  • பறங்கியர் - 2
  • மேல்மாகாணத் தமிழர் - 1

நியமனமாக இடம் பெற்றோர் -08

  • முஸ்லிம் - 3
  • இந்தியர் - 2
  • சிறப்பு - 3

முக்கிய அம்சங்கள்

தொகு
  • நிதித்துறையொன்று அமைக்கப்பட்டமை. இதன் மூலம் உத்தியோகசார்பற்ற அங்கத்தவர்கள் நிதித்துறையில் தாக்கம் செலுத்தக்கூடிய நிலை தோன்றியது
  • 1824ல் மொத்தம் 204 996 பேர் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை பெற்றிருந்தனர்.

உசாத்துணை

தொகு
  • மெண்டிஸ், ஜீ. ஸி - நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி, 1969
  • புன்னியாமீன் பீ. எம்., - வரலாறு ஆண்டு 11 கண்டி சிந்தனை வட்டம், 1998