மனித சுவாசநுண்குழல் அழற்சி வைரசு

பலவணு வைரசு
மனித சுவாசநுண்குழல் அழற்சி வைரசு நோய்
மூச்சுநுண்குழல் அழற்சி வைரசின் எலக்ட்ரான் நுண்ணோக்கி வரைபடம்
உயிரியல் வகைப்பாடு
தொகுதி:
நெகார்னாவிரிகோட்டா
துணைத்தொகுதி:
ஏப்லோவிரிகோட்டினா
வகுப்பு:
மாஞ்சிவிரிசெட்டிசு
வரிசை:
மோனோனெகாவிரேல்கள்
குடும்பம்:
நிமோவிரிடே
பேரினம்:
ஆர்த்தோநிமோவைரசு
இனம்:
மனித ஆர்த்தோநிமோவைரசு

மனித சுவாசநுண்குழல் அழற்சி வைரசு (human respiratory syncytial virus) என்பது சுவாசப் பாதையில் தொற்று நோயை உருவாக்கும் ஒரு பலவணு வைரசு ஆகும். கீழ்சுவாசப் பாதையில் பாதிப்பை உண்டாக்கும் இவ்வைரசு குழந்தைகளையும் சிறுவர்களையும் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி மருத்துவமனைக்கு கொண்டுவந்து வந்துவிடுகிறது. 35 வாரங்களுக்குக் குறைவான காலம் கருவிலிருந்துவிட்டு குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இந்நோய்த் தொற்று தாக்காமல் இருக்க முற்காப்பு மருத்துவமாக பாலிவிசுமாப் என்ற ஒரு செல்நோய் எதிரணு கொடுத்து சிகிச்சையளிக்கப்படுகிறது. பிறவி இதய குறைபாடுகள் அல்லது நுரையீரல் பாதிப்புகள் உடைய குழந்தைகள் மற்றும் பொருத்தமற்ற அல்லது குறையுடன் கூடிய மூச்சுக்குழாய் உள்ளவர்களுக்கும் உடலில் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்களுக்கும் சுவாச நுண்குழல் அழற்சி நோய்கள் ஏற்படலாம். நோய் பாதிப்பைக் குணப்படுத்தும் மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் நோய் அறிகுறிகளை கட்டுப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுவாச மண்டலத்தை இந்த வைரசு தாக்கும் என்பதால் செயற்கை ஆக்சிசன் கொடுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

பெரும்பாலும் குளிர் மற்றும் மழைக்காலத்தில்தான் இந்த வைரசு பாதிப்பு ஏற்படுகிறது.

அமெரிக்காவில் 60% குழந்தைகள் அவர்களது முதல் சுவாச நுண்குழல் அழற்சி வைரசு தொற்றுப் பருவத்திலேயே பாதிக்கப்படுகின்றனர் [1]. கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் இந்த வைரசால் பெரும்பாலும் தாக்கப்படுகிறார்கள் [1]. இவ்வாறு பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளில் 2 முதல் மூன்று சதவீதக் குழந்தைகளுக்கு இந்நோய் தீவிரமடைந்து மூச்சு நுண்குழலற்சி நோயாக மாறுகிறது [2]. இவ்வைரசு பாதிப்பு தனியாகவோ அல்லது பிற வைரசு பாதிப்புகளுடன் சேர்ந்தோ பாதுகாப்பளிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி அடிக்கடியும் பலமுறையும் பாதிப்பை உண்டாக்கும். சில குழந்தைகளுக்கு ஒருமுறை வைரசு தொற்று ஏற்பட்ட காலத்திலேயே விட்டுவிட்டு பலமுறை இந்நோய் பாதிப்பு ஏற்படலாம். சிலருக்கு சுவாசநுண்குழல்கள் சுருங்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு அபாயநிலையை அடையும் நிலையும் ஏற்படலாம். ஒவ்வொரு ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறுவர்கள் இந்நோய் பாதிப்புக்கு உள்ளாவதும் உண்டு.

நோய் அறிகுறிகள்

தொகு
மனித சுவாசநுண்குழல் அழற்சி
வைரசு நோய்
 
இந்நோய பாதிப்பு குழந்தையின் எக்சு கதிர் வரைபடம்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புகுழந்தை நோயியல்

தொற்று பாதிக்கப்பட்டு அறிகுறிகள் தோன்ற 4 முதல் 5 நாட்கள் வரை ஆகலாம். பெரியவர்களுக்கு தோன்றும் அறிகுறிகள் மிகக் குறைவாகவே வெளிப்படுகிறது. அவை சாதாரண சலதோசம் முதல் இலேசான காய்ச்சல் வரை வேறுபடுகிறது. உடலுக்குள் புகுந்த வைரசு நேரடியாக நுரையீரலைச் சென்றடைகிறது. அங்குள்ள சுவாச நுண்குழல்களுக்குள் சென்று அழற்சியை, வீக்கத்தை உண்டாக்குகிறது. இதனால் காய்ச்சல் மூக்கு ஒழுகல், சளி, இருமல் போன்றவை இருக்கும். சில அமெரிக்க்க் குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சல் வரைகூட ஏற்படுத்துகிறது[3]. அரிதாக மரணம் கூட ஏற்படுவதுண்டு. நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவர்கள் மற்றும் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள் ஆகியோருக்கு இத்தகைய மரணம் சம்பவிக்கலாம். பசியின்மையும் காய்ச்சலும் பொதுவான அறிகுறிகளாகும்.

மூச்சுத் திணறலும் ஆத்துமாவும் இந்நோய்த்தாக்கத்தின் முதல் ஐந்து மாதங்களில் ஏற்படும் பொதுவான விளைவுகளாகும் [4]. இந்நோய் பாதிப்பதால் ஆத்துமா நோய் உண்டாகிறதா அல்லது ஆத்துமா நோய் முன்னெடுக்கப்பின்னர்தான் ஆத்துமா நோய் திவிரமடைகிறதா என்பது தீர்மானிக்கப்படவில்லை.

நோய் பரவுதல்

தொகு

உடலுக்குள் புகுந்த வைரசின் அடைகாக்கும் காலம் 2-8 நாட்கள் ஆகும், ஆனால் வழக்கமாக இது 4-6 நாட்கள் வரை இருக்கும். ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நேரடித் தொடர்பு மூலம் அல்லது பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருள்களின் மூலம் இவ்வைரசு எளிதில் பரவுகிறது, புகும் இடத்தைப்பொறுத்து அரைமணி நேரம் முதல் ஐந்துமணி நேரம் வரை வாழும் தகைமையைப் பெற்றுள்ளது [5]. சிறுவர் பராமரிப்பு வசதியில்லாத இடங்களில் குறுகிய காலத்திற்குள் குழந்தைக்கு குழந்தை விரைவாக தொற்றுகிறது [6].

சுவாச நுண்குழல் அழற்சி வைரசு சிம்பான்சி கோரிசா வைரசு போன்ற வைரசாகும் குரங்குகளிடமிருந்து இது மனிதர்களுக்குப் பரவுகிறது. எனினும் மனிதர்களிடம் இருந்து குரங்குகளுக்கு அனுப்பப்படுவது மிகவும் பொதுவானது ஆகும்[7]. மாடுகள், செம்மறி மற்றும் ஆடுகளிலிருந்தும் இந்த வைரசு மீட்டெடுக்கப்பட்டுள்ளது, ஆனால் இவை பரவலாக்கத்தின் முக்கிய திசையாக கருதப்படுவதில்லை, வைரசு எந்த விலங்கினிட்த்தும் தேங்கியிருப்பதாக அறியப்படவில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Glezen, WP; Taber, LH; Frank, AL; Kasel, JA (1986). "Risk of primary infection and reinfection with respiratory syncytial virus". American Journal of Diseases of Children 140 (6): 543–6. doi:10.1001/archpedi.1986.02140200053026. பப்மெட்:3706232. 
  2. Hall, Caroline Breese; Weinberg, Geoffrey A.; Iwane, Marika K.; Blumkin, Aaron K.; Edwards, Kathryn M.; Staat, Mary A.; Auinger, Peggy; Griffin, Marie R. et al. (2009). "The Burden of Respiratory Syncytial Virus Infection in Young Children". New England Journal of Medicine 360 (6): 588–98. doi:10.1056/NEJMoa0804877. பப்மெட்:19196675. 
  3. "Respiratory Syncytial Virus". Center for Disease Control, Respiratory and Enteric Viruses Branch. October 17, 2008. பார்க்கப்பட்ட நாள் October 2, 2009.
  4. Wu, P.; Dupont, W. D.; Griffin, M. R.; Carroll, K. N.; Mitchel, E. F.; Gebretsadik, T.; Hartert, T. V. (2008). "Evidence of a Causal Role of Winter Virus Infection during Infancy in Early Childhood Asthma". American Journal of Respiratory and Critical Care Medicine 178 (11): 1123–9. doi:10.1164/rccm.200804-579OC. பப்மெட்:18776151. 
  5. "Respiratory syncytial virus (RSV)". A.D.A.M. Medical Encyclopedia, PubMed Health. National Center for Biotechnology Information, U.S. National Library of Medicine. January 2011. Archived from the original on February 4, 2011.
  6. Chu, H. Y.; Kuypers, J.; Renaud, C.; Wald, A.; Martin, E.; Fairchok, M.; Magaret, A.; Sarancino, M. et al. (2013). "Molecular epidemiology of respiratory syncytial virus transmission in childcare". Journal of Clinical Virology 57 (4): 343–350. doi:10.1016/j.jcv.2013.04.011. பப்மெட்:23684816. 
  7. http://c.ymcdn.com/sites/www.aazv.org/resource/resmgr/IDM/IDM_Respiratory_Syncytial_Vi.pdf American Association of Zoo Veterinarians Infectious Disease Committee Manual 2013, CHIMPANZEE CORYZA/RESPIRATORY SYNCYTIAL VIRUS (RSV), Allison Wack, December 26, 2010, updated March 19, 2013.

புற இணைப்புகள்

தொகு
வகைப்பாடு
வெளி இணைப்புகள்