மனுவந்தரம்
மனுவந்தரம் (Manvantara அல்லது Manuvantara) என்பது இந்துக்களின் காலக் கணக்கின் படி ஒரு மனுவின் ஆட்சிக்காலம். ஒரு மனுவந்திரம் கொண்டது ஒரு இந்திரனின் ஆட்சிக்காலம். பதினான்கு இந்திரர்களும் அதே சமயத்தில் பதினான்கு மனுக்களும் தோன்றி மறைந்த கால அளவு பிரம்மனுக்கு ஒருநாள். பிரம்மனின் ஒரு பகல் ஒரு 'கல்பம்' எனப்படும். பிரம்மனுடைய இரவில் ஒருவித வியவஹாரமும் கிடையாது. ஆகையால் அவருடைய பகலையே அவருடைய நாள் என்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. இவ்வாறு முன்னூற்றறுபது நாட்கள் (கல்பங்கள், பகல்கள்) கொண்டது பிரம்மனுக்கு ஓர் ஆண்டு. பிரம்மனுடைய ஒவ்வொரு பகலுக்கும் அதற்கு சமமான ஓர் இரவு உண்டு. இரவில் காலம் தான் கணக்கிடப்படுமே ஒழிய வேறு விவகாரம் கிடையாது.
காலக் கணக்கு
தொகு- 1 சதுர்யுகம் = 43,20,000 ஆண்டுகள்
- 1 மனுவந்தரம் = 71 சதுர்யுகங்கள்
- நிலைமாற்ற காலம் = 6 சதுர்யுகங்கள்
- 14 மனுவந்தரம் (994 சதுர்யுகங்கள்) + நிலைமாற்ற காலம் (6 சதுர்யுகங்கள்) = 1 கற்பம்.
- 1 கற்பம் = 432 கோடி ஆண்டுகள் = 1,000 சதுர்யுகங்கள்.
- 360 கற்பங்கள் (=பகல்கள், பேச்சு வழக்கில் 'நாட்கள்') = பிரம்மனின் ஓர் ஆண்டு.
- பிரம்மனின் 100 ஆண்டுகள் = பிரம்மனின் ஆயுள்.
14 மனுவந்தரங்கள்
தொகுஇவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- வானியல் மூலம் வரலாறு காண்போம், , 2002, பீ.ராமதுரை, வர்த்தமானன் பதிப்பகம், 15, சரோசினி வீதி, தியாகராசன் நகர், சென்னை-17.
- Shrimad Bhagavata, Tr. Swami Tapasyananda, Ramakrishna Math, Madras, 2003.