மனையறம் துறவறம்

மனையறம் துறவறம் என்னும் துறைப் பாடல் புறநானூற்றுத் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. இது காஞ்சித்திணையில் வரும் துறை.

இல்லறம் பேணிக்கொண்டே இல்லறத்தார் துறவறம் மேற்கொள்வதன் பெருமையாக் கூறுவது ‘இல்லறம் துறவறம்’ என்னும் துறை.

இலக்கியம்

தொகு
புறநானூறு
சங்க காலப் புலவர் வான்மீகியார் இதன் பெருமையை விளக்குகிறார். சூரிய ஒளி பாயும் பரந்த உலகம் முழுவதும் ஒரு நாள் அல்லது ஒரு நாழிகைப் பொழுதில் ஏழு பேர் கைக்கு மாறுவது போன்றது செல்வம். எனவே உலகம் முழுவதுமான செல்வத்தையும், அதனை விட்ட தவத்தையும் சீர்தூக்கி நிறுத்துப் பார்த்தால், ஐயவி என்னும் கடுகின் எடை கொண்ட தவத்துக்கு உலகம் முழுவதும் சேர்ந்தாலும் சமநிறை ஆகாது.[1]
சீவகசிந்தாமணி
உலகம் இம்மி என்னும் எடை அளவினது என்னு எண்ணிச் சீவகன் துறவறம் மேற்கொண்டானாம். [2]
நம்மாழ்வார்
செல்வம் விரும்பாத துறவறத்தின் மேன்மையை நம்மாழ்வார் விளக்குகிறார். திருமால் தரும் செல்வம் வேண்டாமாம். திருமால்தான் வேண்டுமாம்.[3]

இலக்கணம்

தொகு
தொல்காப்பியம் பாடாண்திணைப் பகுதியில் வரும்

அமரர்கண் முடியும் அறு வகையானும்
புரை தீர் காமம் புல்லிய வகை [4]

என்னும் நூற்பாவுக்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இத் துறையின் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டுகிறார்.

அடிக்குறிப்பு

தொகு
  1. பரிதி சூழ்ந்த இப் பயம் கெழு மாநிலம்
    இருபகல் எழுவர் எய்தி அற்றே
    வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
    ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின்
    கை விட்டனரே காதலர் அதனால்
    விட்டோரை விடாஅள் திருவே
    விடாதோர் இவள் விடப்பட்டாரே (புறம் 358)
  2. ஏமநீர் உலகமோ இம்மிப் பாலென
    நாமவேல் நரபதி நீக்கி நன்கலம்
    தூமமார் மாலையும் துறக்கின்றான் அரோ (சீவகசிந்தாமணி 3027)
  3. நின்னையே தான்வேண்டி நின்செல்வம் வேண்டாதான்
    தன்னையே தான்வேண்டும் செல்வம் (புறநானூறு, பழைய உரை, உ.வே.சா. பதிப்பு, பாடல் 358 மேற்கோள்.)
  4. தொல்காப்பியம் புறத்திணையியல் சூற்பா 21
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனையறம்_துறவறம்&oldid=1269455" இலிருந்து மீள்விக்கப்பட்டது