மனோரமா இயர்புக்

மனோரமா இயர்புக் என்பது ஆண்டுக்கொரு முறை வெளியாகும் பொதுப்பயன் வெளியீடாகும். ஆண்டுக்கொரு முறை பல்துறையிலும் நிகழும் உலக நடப்புகள் யாவையும் அறிவார்ந்த ஒரு தொகுப்பாகத் தரும் ஒரு வெளியீடு. இது உலகளாவிய அறிவியல், அரசியல், மருத்துவம், விளையாட்டுக்கள், மக்கள் வாழ்வியல், மாணவர்களுக்குத் தேவையான பொது அறிவுச் செய்திகள், பன்னாட்டுப் புள்ளிவிவரங்கள் என பல பயனுடைய கருத்துக்களையும் செய்தி, மற்றும் குறிப்பக்களையும் தாங்கி வரும் ஒரு வெளியீடு. 1990 இல் இருந்து தொடர்ந்து வெளியிடப்படுகின்றது. இந்த ஆண்டுநூலை மலையாள மனோரமா பதிப்பகம், கோட்டயம், சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் வெளியிடுகின்றது. மலையாள மனோரமா பதிப்பகம், தமிழைத் தவிர ஆங்கிலத்திலும் மலையாளம், இந்தி, வங்காளி மொழிகளிலும் அவ்வவ் மொழிகளுக்கான சிறப்புப் பகுதிகளுடன் வெளியிடுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோரமா_இயர்புக்&oldid=1880790" இருந்து மீள்விக்கப்பட்டது