மம்மியூர் சிவன் கோயில்

கேரளத்தில் உள்ள ஒரு சிவன் கோயில்
(மம்மியூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மம்மியூர் கோவில் (Mammiyoor Temple) அல்லது மம்மியூர் மகாதேவ க்ஷேத்ரம் என்பது தென் இந்தியாவில் உள்ள கேரளத்தில் அமைந்துள்ள குருவாயூர் கோவிலின் அருகாமையில் உள்ள ஒரு சிவபெருமானின் (பரமசிவன்) கோவிலாகும். குருவாயூரப்பனை வழிபட வரும் பக்தர்கள் மம்மியூர் சிவன் கோவில் தர்சனம் பெறவேண்டும் என்பதே ஐதீகம், அப்படி செய்வதால் குருவாயூர் கோவிலுக்கு சென்றதன் முழு புண்ணிய பலமும் அந்த பக்தருக்கு கிடைக்கப்பெறும் என்பதே இந்துக்களின் நம்பிக்கையாகும்.[1][2][3]

மம்மியூர் சிவன் கோயில்
பெயர்
பெயர்:மம்மியூர் மகாதேவன் திருக்கோயில் (മമ്മിയൂർ മഹാദേവക്ഷേത്രം)
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:திருச்சூர்
அமைவு:குருவாயூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரளா

குருவாயூர் கோயிலும் மம்மியூர் கோயிலும்

தொகு

வாயுவின் உதவியோடு பிரகஸ்பதி (குரு) உலகம் முழுவதும் அலைந்து கிருஷ்ணரின் பாதள அஞ்சன விக்ரகத்தை செய்ய மிகவும் புனிதமான மற்றும் பொருத்தமான தலத்தைத் தேடினார். அப்போது பரசுராமரின் வேண்டுகோள்படி வாயுவும் குருவும் கேரளா வந்தனர். அப்போது ருத்ர தீர்த்தத்தில் நீருக்குள் சிவபெருமான் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் வெளியே வந்து தாம் தவம் செய்து கொண்டிருந்த இடம் மிகப்புனிதமானது என்றும் அங்கே ஆயிரம் ஆண்டுகளாகத் தாம் தவம் செய்து வருதலையும், தாம் ருத்ர கீதையை உபதேசம் செய்த தலமும் அதுவே என்று கூறி, கிருஷ்ணரின் விக்கிரகத்தை அங்கேயே வைக்கலாம் என்று உறுதி செய்து அருளினார். [4]

அனைவரையும் ஆசிர்வதித்து விட்டு சிவபெருமான் மம்மியூருக்குச் சென்றுவிட்டார். எனவே குருவாயூர் குருவாயூரப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மம்மியூர் சிவபெருமானையும் வழிபட்ட பின்னரே வழிபாடு பூரணமாகின்றது.[4]

மம்மியூர் கோவிலை கால்நடையாக பத்தே நிமிடங்களில் குருவாயூர் கோவிலில் இருந்து அடையலாம்.

மம்மியூர் தேவஸ்தானக் கட்டுப்பாடுகள்

தொகு
  • கோவிலுக்கு உள்ளே செல்வதற்கு இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
  • மம்மியூர் திருக்கோயிலில் ஆடைக்கட்டுப்பாடுகள் புராதனமானவை. பாரம்பரிய தென்னிந்திய உடையணிந்தோர் மட்டுமே இறைவழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுவர்.

அமைவிடம்

தொகு

இந்தக் கோவிலானது குருவாயூரில் இருந்து புன்னத்தூர் கோட்டைக்கு செல்லும் வழியில் கொட்டபடிக்கு அருகே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மிகவும் அருகாமையில் காணப்படும் நகரங்கள்: குருவாயூர், குன்னம்குளம், சாவக்காடு போன்றவையாகும்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Mammiyoor Temple Thrissur - Mammiyur Shiva Temple Trichur Kerala". www.kerala-tourism.org. பார்க்கப்பட்ட நாள் 2023-12-28.
  2. brb in thedeckofhellMaps of India பரணிடப்பட்டது 2010-02-06 at the வந்தவழி இயந்திரம்
  3. "Mammiyoor Temple Thrissur". www.tourmyindia.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-27.
  4. 4.0 4.1 குருவாயூர் பூலோகவைகுண்டம்; குருவாயூர் தேவஸ்தான வெளியீடு;2003
"https://ta.wikipedia.org/w/index.php?title=மம்மியூர்_சிவன்_கோயில்&oldid=4101714" இலிருந்து மீள்விக்கப்பட்டது