மரக்கால் நடவடிக்கை

மரக்கால் நடவடிக்கை (Operation Wooden Leg, எபிரேயம்: מבצע רגל עץ‎) துனீசியாவின் தலைநகரிலிருந்து 12 மைல் தொலைவிலுள்ள ஹமம் அல்-சாட் எனுமிடத்தில் அமைந்திருந்த பலஸ்தீன விடுதலை இயக்க தலைமையகம் மீது இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டது. அக்டோபர் 1, 1985 அன்று மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை உகாண்டாவில் 1976ல் மேற்கொள்ளப்பட்ட என்டபே நடவடிக்கையின் பின் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட தொலை தூர நடவடிக்கையாகும். இஸ்ரேலில் இருந்து 1,280 மைல்களுக்கு (2060 கிமி) அப்பால் இது நடைபெற்றது. துனீசியா ஆதாரங்கள் இத்தாக்குதல் அமெரிக்காவிற்குத் தெரிந்து அல்லது அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டதென நம்புகின்றன.[1]

மரக்கால் நடவடிக்கை
பகுதி: அரபு-இசுரேல் முரண்பாடு

துனீசியா வரைபடம்
நடவடிக்கையின் நோக்கம் தந்திரோபாயம்
திட்டமிடல் இசுரேலிய விமானப்படை
இலக்கு துனீசியாவின் அமைத்திருந்த பலஸ்தீன விடுதலை இயக்க தலைமையகம் அழிக்கப்பட்டது
திகதி அக்டோபர் 1, 1985
செயற்படுத்தியோர் 8 எப்-15 ஈகிள்
விளைவு வெற்றி
பாதிக்கப்பட்டோர் ~100 கொல்லப்படல்


குறிப்புக்கள்

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரக்கால்_நடவடிக்கை&oldid=3253367" இலிருந்து மீள்விக்கப்பட்டது