மரண வரி (Marâla அல்லது Maral) அல்லது இறப்பு வரி என்பது போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்ட காலத்தில் இருந்த வரி முறையாகும்.[1][2] போர்த்துக்கேயரின் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் கரையோரப்பிரதேசத்தில் வாழ்ந்த ஒருவர் இறந்தாராயின் அவரது சொத்துக்கள் போர்த்துக்கேயருக்கு சேர வேண்டும் என்பதே இவ்வரியாகும்.[3] இறப்பின் பின்னர் இறந்தவருக்கு ஆண் வாரிசு இருந்தால், மூன்றில் ஒரு பங்கு அரசுக்கு சென்றடையும், ஆண் வாரிசு எவரும் இல்லை எனில் சொத்து முழுவதும் அரசுக்குச் சென்றடையும்.[4] இந்த வரி காரணமாக மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளானார்கள். போர்த்துக்கேயர் தமது சமயமான கிறிஸ்தவத்தை பரப்பும் முகமாக கிறிஸ்தவ சமயத்திற்கு மாறுவோருக்கு இவ்வரி விலக்கு அளித்தனர். இதன் காரணமாக பல இலங்கை மக்கள் மதம் மாறினர்.

கண்டி இராச்சியத்தில் இவ்வரியில் இருந்து பெண்களுக்கு விலக்களிக்கப்பட்டது.[4] இங்கு இவ்வரி 18ம் நூற்றாண்டின் மத்தியில் முற்றாக ஒழிக்கப்பட்டது. ஆனாலும், கண்டியின் கடைசி அரசர் விக்கிரம ராஜசிங்கன் (1798-1815) இவ்வரியை மீண்டும் மிகக் கடுமையான முறையில் அறிமுகப்படுத்தினார்.[5]

உசாத்துணை

தொகு
  1. "Tax System in Ancient Sri Lanka". Department of Inland Revenue, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 10 மே 2014.
  2. "Portuguese influence in Sri Lanka". பார்க்கப்பட்ட நாள் 10 மே 2014.
  3. சேனக வீரரத்தின. "Sri Lanka's Claims for Reparations from Portugal". Archived from the original on 2013-10-20. பார்க்கப்பட்ட நாள் 10 மே 2014.
  4. 4.0 4.1 Codrington, H. W. (1 சனவரி 1994). "Short History of Ceylon". Asian Educational Services. பார்க்கப்பட்ட நாள் 10 மே 2014.
  5. Mendis, G.C. (1 சனவரி 2005). "Ceylon Under the British". Asian Educational Services. பார்க்கப்பட்ட நாள் 10 மே 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரண_வரி&oldid=3566550" இலிருந்து மீள்விக்கப்பட்டது