மரபணு வங்கி
மரபணு வங்கிகள் (Gene bank) என்பது மரபணு பொருளைப் பாதுகாக்கும் ஒரு வகை உயிரியக்கவியல் ஆகும். தாவரங்களைப் பொறுத்தவரை, இது ஆய்வக சேமிப்பு, தாவரப் பகுதிகளை அதிதீவிர குளிரூட்டல் அல்லது விதைகளைச் சேமித்தல் (எ.கா. விதை வங்கி). விலங்குகளைப் பொறுத்தவரை, தேவைப்படும் வரை விந்து மற்றும் முட்டைகளைக் குளிர்விப்பானின் செயலினை முடக்கிச் சேமித்தல் மூலம் செய்யப்படுகிறது. பவளப்பாறை மரபணு வங்கிகளைத் தோற்றுவிக்க, பவளப்பாறை துண்டுகளைக் கட்டுப்படுத்தப்பட்ட நீர்த் தொட்டிகளில் பாதுகாப்பாகச் சேமிப்பது.[1] 'மரபணு வங்கியில்' உள்ள மரபணு பொருள் -196 ° செல்சியஸில் திரவ நைட்ரஜனில் உறைதல், முறையில் அதிகுறைந்த வெப்பநிலையில் கட்டுப்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து ஊடகங்களில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது.
மரபணு வங்கியில் உள்ள தனிப்பட்ட இனத்திற்கு அல்லது ஒரு தனித்துவமான இனத்திற்கு பொதுவான அணுகல் அடையாளச் சொல் வழங்கப்படுகிறது.
தாவரங்களில், பொருளை உறையவைக்காமல் பரப்புவது சாத்தியமாகும். இருப்பினும், விலங்குகளில், செயற்கை கருவூட்டலுக்கு ஒரு உயிருள்ள பெண் தேவை. உறைந்த விலங்கு விந்து மற்றும் முட்டைகளைப் பயன்படுத்துவது பெரும்பாலும் கடினம் என்றாலும், வெற்றிகரமாகச் செய்யப்பட்டதற்கான பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
விவசாய பல்லுயிரிய வளத்தினைப் பாதுகாக்கும் முயற்சியாக, முக்கிய பயிர் தாவரங்கள் மற்றும் அவற்றின் காட்டுப் பயிர்களின் தாவர மரபணு வளங்களைச் சேமித்துப் பாதுகாக்க மரபணு வங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. உலகெங்கிலும் பல மரபணு வங்கிகள் உள்ளன. சுவால்பார்ட் உலக விதை பெட்டகம் மிகவும் பிரபலமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய மரபணு வங்கிகளின் தரவுத்தளத்தை பொதுவான வலைத்தளமான ஜெனெசிஸ் மூலம் அணுகலாம். பல உலகளாவிய மரபணு வங்கிகள் CGIAR ஜீன்பேங்க் தளத்தால் ஒருங்கிணைக்கப்படுகின்றன
மரபணு வங்கிகளின் வகைகள்
தொகுவிதை வங்கி
தொகுஒரு விதை வங்கியில் உலர்ந்த விதைகளை மிகக் குறைந்த வெப்பநிலையில் சேமிப்பதன் மூலம் பாதுகாக்கலாம். விதை வங்கிகளில் வித்துகளும் டெரிடோபைட்டுகளும் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் கிழங்கு பயிர்கள் போன்ற பிற விதை இல்லாத தாவரங்களை இந்த வழியில் பாதுகாக்க முடியாது. மில்லினியம் விதை வங்கி உலகின் மிகப்பெரிய விதை வங்கியாகும். இது இலண்டனில் மேற்கு சுசெக்ஸ் மாகாணத்தில் உள்ள வெல்கம் அறக்கட்டளை மில்லினியம் கட்டடத்தில் (WTMB) அமைந்துள்ளது.[2]
திசு வங்கி
தொகுஇந்த நுட்பத்தில், மொட்டுகள், புரோட்டோகார்ம் மற்றும் வலர்திசு உயிரணுக்கள் ஊட்டச்சத்து ஊடகம் ஒன்றில் குறிப்பிட்ட ஒளி மற்றும் வெப்பநிலை மூலம் பாதுகாக்கப்படுகின்றன. இந்த நுட்பம் மூலம் விதைகளற்ற தாவரங்களையும், பாலியல் ரீதியாக இனப்பெருக்கம் செய்யும் தாவரங்களையும் பாதுகாக்கலாம்.
அதிகுளிர்வங்கி
தொகுஇந்த நுட்பத்தில், ஒரு விதை அல்லது கரு மிகக் குறைந்த வெப்பநிலையில் பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக இத்தகைய பொருட்கள் -196 பாகை சென்டிகிரேடில் திரவ நைட்ரஜனில் பாதுகாக்கப்படுகிறது . அழிவை எதிர்கொள்ளும் உயிரினங்களின் பாதுகாப்பில் இம்முறை பேருதவியாக உள்ளது.[3] விலங்குகளின் மரபணு வளங்களைப் பாதுகாக்க அதிகுளிர் பதனம் பயன்படுத்தப்படுகின்றன [4]
மகரந்த சேமிப்பு
தொகுஇம்முறையில் மலர்களிலிருந்து மகரந்தம் சேகரிக்கப்பட்டுச் சேமிக்கப்படுகிறது. இந்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒற்றைத் தொகுப்பு குரோமோசோம்களைக் கொண்ட தாவரங்களை உருவாக்க முடியும். மகரந்தம் திரவ நைட்ரஜனில் சேமிக்கப்படுகிறது. இந்த முறை குறுக்கு கலப்பிற்குப் பயனுள்ளதாக இருக்கும்.
கள மரபணு வங்கி
தொகுஇம்முறையில் மரபணுக்களைப் பாதுகாப்பதற்காகத் தாவரங்களை நடும் முறையாகும். இந்நோக்கத்திற்காக, சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று செயற்கையாக உருவாக்கப்படுகிறது. இம்முறையின் மூலம், ஒருவர் வெவ்வேறு இனங்களின் தாவரங்களுக்கிடையிலான வேறுபாடுகளை ஒப்பிட்டு அவற்றை விரிவாக ஆய்வு செய்யலாம். இதற்கு அதிக நிலம், போதுமான மண், வானிலை போன்றவை தேவை. முக்கியமான பயிர்களின் வளர் பிளாஸ்மா இந்த முறை மூலம் பாதுகாக்கப்படுகிறது. ஒரிசாவில் உள்ள மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 42,000 வகையான நெல் வகைகள் பாதுகாக்கப்படுகிறது.
மேலும் காண்க
தொகு- விந்து வங்கி
- கருமுட்டை வங்கி
- பயோபேங்க்
- உயிரியல் தரவுத்தளம்
- ஜெர்ம்ப்ளாசம்
- விதை வங்கி
- தாவர மரபணு வளங்கள்
வெளி இணைப்புகள்
தொகு- AEGIS ஒரு ஐரோப்பிய ஜீன்பேங்க் ஒருங்கிணைந்த அமைப்பு
- பயிர் ஜீன்பேங்க் அறிவுத் தளம்
- ஜீன்பேங்க்ஸ்
- ஜெனீசிஸ்
- இஸ்ரேல் மரபணு வங்கி
- DAD-IS: உள்நாட்டு விலங்கு பன்முகத்தன்மை தகவல் அமைப்பு
பல்லூடகம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "青汁と口臭とサプリメントと運動". www.cdnn.info. பார்க்கப்பட்ட நாள் 2017-03-01.
- ↑ Drori, Jonathan (posted May 2009, filmed February 2009). "Why we're storing billions of seeds". TED2009. TED. Archived from the original on 2011-12-08. பார்க்கப்பட்ட நாள் 2011-12-11.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Cryo bank". CGIAR Genetic Resources Systems: Phase 2. Collective Action for the Rehabilitation of Global Public Goods. பார்க்கப்பட்ட நாள் 23 January 2012.
- ↑ ’’Cryoconservation of Animal Genetic Resources.’ ‘Rep. Rome: Food and Agriculture Organization of the United Nations, 2012. FAO Animal Production and Health Guidelines No. 12. Print.
- Handbook of Seed Technology for Genebanks Vol. II: Compendium of Specific Germination Information and Test Recommendations. IBPGR (now Bioversity International). Rome, Italy. Archived from the original on 2008-12-11. பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.
- A Guide to Effective Management of Germplasm Collections. CABI, IFPRI, IPGRI, SGRP. Archived from the original on 2007-05-25. பார்க்கப்பட்ட நாள் 2021-01-10. 174 p.
- Manual of Seed Handling in Genebanks. Bioversity International, CTA (Technical Center for Agricultural and Rural Cooperation), FAO, ILRI. Archived from the original on 2008-01-21. பார்க்கப்பட்ட நாள் 2021-01-10. 147 p.
- Saving Seeds. CABI, IFPRI, IPGRI, SGRP. Archived from the original on 2008-12-11. பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.