தச்சு வேலைக்கருவிகள்
(மரவேலைக் கருவிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அறுத்தெடுக்கப்பட்ட மரத்தைக் கொண்டு நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடிய மரச்சாமன்களை செய்யப் பயன்படும் கருவிகளை தச்சு வேலைக்கருவிகள் என்பர்.
தச்சு வேலைக் கருவிகள்
தொகுசுத்தி, உளி, வாள், அரம், ஆணி, ஆப்பு, இழைக்கும் கருவி (இழைப்புளி), கிராம் (இணைப்பி), முள்ளரம், துளைக் கருவி ஆகியவை ஆகும்.
தச்சு வேலைக் கருவிகளின் பயன்கள்
தொகு- சுத்தியல் - ஆணி, ஆப்பு முதலியவற்றை அடித்து உட்செலுத்துவதற்குப் பயன்படுவது.
- உளி - மரத்தைச் செதுக்கிக் கூர்மையாக்கவும், துளையிடவும் பயன்படுகிறது.
- இரம்பம்/ஈர்வாள் - மரக்குற்றியைப் பலகைகளாக அறுப்பதற்கும், மரத்தை வேண்டிய அளவுக்கு வெட்டிக் கொள்வதற்குமான கருவி.
- அரம் - உளி, வாள் போன்ற கருவிகளை கூர்மையாக்கப் பயன்படுகிறது.
- முள்ளரம் - மரத்தின் மூலைகளை மட்டுப் படுத்தப் பயன்படுகிறது.
- ஆணி - மரத்தை இணைக்கப் பயன்படுகிறது.
- ஆப்பு - மரத்தை இணைக்கவும், இணைப்பை வலுபடுத்தவும் பயன்படுகிறது.
- சீவுளி (இழைப்புளி) - மரத்தின் மேற்பரப்பை சீவி மழு மழுவென மாற்றப் பயன்படுகிறது.
- கிராம் - துளையிடப்பட்ட மரங்களை இணைத்து ஆணி, ஆப்பு வைக்கப் பயன்படுகிறது,
- துறப்பணம் - மரத்தில் துளையிடுவதற்காக கருவி
- மின் துளைகருவி (drill)
- அளத்தல் மற்றும் குறித்தல் கருவிகள்
- அளக்கும் நாடா
- அடிமட்டம்
- Caliper
- இணைப்பு மூலைமட்டம் - Combination square
- வரைகம்பு - gauge
- திருப்புளி - Screw Driver
- திருகாணி - Screw
- இடுக்கி
- தட்டுப்பொல்லு
- பிடிகருவி - Clamp
- திருகாணிச்சாவி - Wrench
- அரத்தாள், அரத்தாளி
- கோடாலி
- அரிவுக்குதிரை
- வாய்ச்சி - Adze
- சுருட்டுறப்பணம் - Auger
- அரம் - File
- பிணையல் - hinge
- பொளி - Mortise
- சுரை (கருவி) - Nut