மராத்தி விசுவகோசு
மராத்தி விசுவகோசு (Marathi Vishwakosh)(மராத்தி கலைக்களஞ்சியம்) என்பது மராத்தி மொழியில் உள்ள ஒரு இணையவழி இலவச கலைக்களஞ்சியம் ஆகும். இது இந்தியாவின் மகாராட்டிரா அரசாங்கத்தால் நிதியளிக்கப்படுகிறது.[1][2]
வரலாறு
தொகுமராத்தி மொழிக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் திட்டமானது 1960-ல் அச்சுத் திட்டமாகத் தொடங்கப்பட்டு தொடங்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் முதல் தலைவராக இலட்சுமண் சாத்திரி ஜோசி நியமிக்கப்பட்டார். கலைக்களஞ்சிய முதல் தொகுதி 1976-ல் வெளியிடப்பட்டது. 2010-ல் 18 தொகுதிகள் வெளியிடப்பட்டன.[3][4] மகாராட்டிர முதல்வர் மும்பையில் அறிவித்தபடி, அக்டோபர் 25, 2011 அன்று கலைக்களஞ்சியத்தின் தொகுதிகள் இணையத்தில் வெளியிடத் தொடங்கப்பட்டது.[5] தற்போது மராத்தி கலைக்களஞ்சிய பத்தொன்பது தொகுதிகளும் இணையத்தில் கிடைக்கின்றன.
மராத்தி விசுவகோசு தொகுப்பாசிரியர்
தொகுவிசுவகோசு பத்திரிகையின் தலைமையாசிரியர்கள் பின்வருமாறு [6]
வ. எண். | தொகுப்பாசிரியர் | பதவிக்காலம் |
---|---|---|
1. | தர்கதீர்த்த லக்ஷ்மன் சாஸ்திரி ஜோஷி | நவம்பர் 19, 1960 முதல் மே 27, 1994 வரை |
2. | பேராசிரியர். எம்.பி ரேஜ் | சூன் 4, 1994 முதல் திசம்பர் 28, 2000 வரை |
3. | சிறீ ஆர்ஜி ஜாதவ் | சனவரி 16, 2001 முதல் பிப்ரவரி 10, 2003 வரை |
4. | டாக்டர் சிறீகாந்த் ஜிச்கர் | சூலை 21, 2003 முதல் சூன் 2, 2004 வரை |
5. | விஜய வாட் | திசம்பர் 9, 2005 முதல் திசம்பர் 8, 2008 வரை மற்றும் சூன் 9, 2009 முதல் சூன் 30, 2015 வரை |
6. | திலீப் கரம்பெல்கர் | ஆகத்து 10, 2015 முதல் சனவரி 2, 2020 வரை |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ (2 December 2011). 2nd volume of Marathi encyclopedia released, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
- ↑ Gole, Swati Shinde (16 November 2011). Marathi encyclopaedia goes online, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
- ↑ Kolhatkar, M.R. Vishwakosh or Marathi Encyclopedia: An Innovative Project of the New State of Maharashtra, in Innovations in Public Administration (S.S. Gadkari & M.R. Kolhatkar, eds.) (2000)
- ↑ Gokhale, Madhav (14 September 2003). The Great Marathi, இந்தியன் எக்சுபிரசு (2003 report on status of the print version, with 16 volumes published at that time)
- ↑ (1 November 2011). Marathi Vishwakosh, Centre for Development of Advanced Computing (Government press release about online release of first volume)
- ↑ "पूर्व अध्यक्ष तथा प्रमुख संपादक" [Former Chairs and Chief Editors]. Marathi Vishwakosh (in Marathi). பார்க்கப்பட்ட நாள் May 8, 2021.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)