மரிகிட்டா (நடனக் கலைஞர்)

மரிகிட்டா (Mariquita) (1838-1922) அடிக்கடி மேடம் மரிகிட்டா என குறிப்பிடப்படும் இவர் அல்சீரியாவில் பிறந்த நடனக் கலைஞராவார். 1870 களில் இருந்து 1920 வரை பாரிஸில் உள்ள பல்வேறு அரங்குகளில் வெற்றிகரமான நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்திய நடன இயக்குனரும் மற்றும் பாலே நடன ஆசிரியரும் ஆவார்.

சுயசரிதைதொகு

அல்சீரியாவின் ஆமலே அருகே ஒரு நீரூற்றுக்கு அருகில் ஒரு சிறு குழந்தையாக ஒரு பெண் நடனக் கலைஞரால் மரிகிட்டா கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர் படிப்பதற்கு முன்பே நடனமாடக் கற்றுக்கொண்டார். [1] இவர் 1840களில் பாரிஸுக்கு வந்தார். பின்னர் தீட்ரே டி லா கைதே, போலீஸ் பெர்கெர் மற்றும் ஓபரா காமிக் ஆகியவற்றில் நடன இயக்குனராகவும் மற்றும் பாலே ஆசிரியராகவும் ஆனார். லியான் தி பூகி, எமிலீன் தி அலெனான், ரெஜினா பேடெட் மற்றும் லா பெல்லி ஓடெரோ உள்ளிட்ட பல நிகழ்ச்சி நடனக் கலைஞர்களுக்கு இவர் பயிற்சி அளித்துள்ளார். [2] 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாரிஸின் மிகவும் பிரபலமான நடன பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான இவர் 1845 ஆம் ஆண்டில் தீட்ரே தெஸ் பனாம்புலஸில் தனது முதல் நடன நிகழ்ச்சியில் அறிமுகமானார். [3]

பயிற்சிதொகு

1898ஆம் ஆண்டில் ஓபரா காமிக்கில் பாலே ஆசிரியரான ஆல்பர்ட் கேரி என்பவரிடம் பயிற்சியில் மரிகிட்டா தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அங்கு இவர் 1920 வரை இருந்தார். 60 நடன நிகழ்ச்சிகளை உருவாக்கினார். அதே நேரத்தில் போலிஸ் பெர்கேரில் நடன இயக்குநராகவும் தனது பங்கைத் தொடர்ந்தார். "ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் நடனங்கள் அவருக்குத் தெரியும்" என்று இவரது பயிற்சியாளர் கேரி தெரிவித்தார். பிரெஞ்சு நடனக் கலைஞரான கிளியோ டி மெரோட்டின் என்பவரின் கூற்றுப்படி, இவரது உருவம் சிறிய அளவாக இருந்தபோதிலும், இவர் ஒரு பிரமாண்டமான மற்றும் தோற்றத்தில் ஈர்க்கக்கூடிய உருவமாக இருந்தார். எப்போதும் தனது உயரத்தைக் குறைக்காதபடி நேராக நிற்கிறார். இவர் எங்கு சென்றாலும், தன்னுடன் அவரது ஒரு கைப்பிடி கொண்ட ஒரு ஜோடி கண்ணாடியான லோர்னெட்டையும் விசிறியையும் வைத்திருந்தார். இவர் எப்போதும் விசிறியை தனது வலது கையில் வைத்திருந்தார். அதை ஒரு நடத்துனரின் தடியாகப் பயன்படுத்தினார். [1]

நடன இயக்குநர்தொகு

 
நடாலியா ட்ரூஹனோவா, மார்த் லென்க்ளட் மற்றும் ரெஜினா பேடெட் ஆகியோருடன் மரிக்விடா (உட்கார்ந்திருப்பவர்)

1900 நவம்பர் 12 வரை நடைபெற்ற எக்ஸ்போசிஷன் யுனிவர்செல் என்ற உலக கண்காட்சியில் உள்ள பாலிஸ் தி லா நடனத்தில் நடன இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவர் 1920 ஏப்ரல் 16, அன்று தனது நடன நிகழ்ச்சிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அந்தக் காலத்தின் முன்னணி கலைஞர்கள் கலந்து கொண்ட ஒரு மாலை வேளைக்குப் பிறகு, 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நிகழ்த்தி வந்த நடனத் தொழிலை முடித்துக் கொண்டார். இவரது திறமை பொதுவாக கவர்ச்சியான மற்றும் கற்பனையானது. ஆனால் இவரது வாழ்க்கையின் முடிவில் இவர் பாஸ்க் மற்றும் கிரேக்க நடனங்கள் உட்பட மிகவும் சிக்கலான நடைமுறைகளை அறிமுகப்படுத்தினார். [4]

நடன அமைப்புதொகு

மரிகிட்டா பின்வரும் நிகழ்ச்சிகளை நடனமாடியதாக பதிவுகள் உள்ளன: [5] தனது நீண்ட நடன வாழ்க்கையில் இவர் பல்வேறு திரைப்பட தயாரிப்புகளில் பங்கேற்றார். இருப்பினும் இவரது சிறப்பு நேரடி செயல்திறன் 1941 ஆம் ஆண்டில், பிளாஸ்கோ இபீஸின் புதினத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படமான பிளட் அண்ட் சாண்ட் என்பதில் நடனமாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். [6]

குறிப்புகள்தொகு

  1. 1.0 1.1 "Du 19ème au 21ème siècle..." (in French). Folies Bergère. 26 ஏப்ரல் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 April 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)CS1 maint: unrecognized language (link) பிழை காட்டு: Invalid <ref> tag; name "folies" defined multiple times with different content
  2. "La Belle Otero, emblème de la Belle Époque" (in French). Histoire par l'image. 21 April 2014 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unrecognized language (link)
  3. "Henri de Toulouse-Lautrec: Dress rehearsal at the Folies Bergère - Emilienne d'Alençon and Mariquita". National Gallery of Australia. 23 ஏப்ரல் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 April 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. La Belle Epoque des femmes ?: 1889-1914. Editions L'Harmattan. https://books.google.com/books?id=QvFy6pBiLhkC&pg=PA79. 
  5. "Mariquita (1840?-1922) - Chorégraphe" (in French). Bibliothèque Nationale de France. 22 ஏப்ரல் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 April 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)CS1 maint: unrecognized language (link)
  6. https://www.deflamenco.com/revista/noticias/mariquita-flores-her-passing-marks-the-end-of-an-era-1.html