மரிச்ஜாப்பி படுகொலைகள்

மரிச்ஜாப்பி படுகொலைகள் (Marichjhapi Massacre) என்பது மேற்கு வங்கம் மாநில சுந்தரவனக் காட்டிலுள்ள மரிச்ஜாப்பி தீவில் வசித்து வந்த வங்கதேசத்து தலித் அகதிகள் மீது 1979 ஆண்டு வாக்கில் நடந்த படுகொலையாகும்.[1] ஜோதி பாசு முதல்வராக இருந்த போது நடந்த இந்த நிகழ்வில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிலும், பசிபட்டிணியிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து போனார்கள்.

பின்னணி

தொகு

பாக்கிஸ்தானிலிருந்து கிழக்குப் பாக்கிஸ்தான் பிரிந்த பின்னர் இந்துக்கள் பலர் அகதிகளாக இந்தியா வந்தனர். உயர் மற்றும் நடுத்தர மக்கள் மேற்கு வங்காளத்தில் எளிதில் குடிபுகுந்தனர். ஆனால் பின்னர் அதிகமாக வந்த நாமசூத்திரர் என்றழைக்கப்படும் ஏழை தலித் மக்கள் வங்காளத்தில் குடிபுக முடியவில்லை.[2] பின்னர் தண்டகாரண்யம் (ஒடிசா மற்றும் மத்தியப் பிரதேசம்) பகுதிகளுக்குக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.[3][4]

நிகழ்வு

தொகு

1978 ஆம் ஆண்டு வாக்கில் அதிகமாக அகதிகள் மேற்கு வங்க மாநிலத்திற்குள் வருகிறார்கள். அப்போது இருந்த ஜோதி பாசு தலைமையிலான இடது முன்னணி அரசு அகதிகளைச் சுமையாகக் கருதி கொள்கை முடிவை எடுக்கிறது.[3] நாட்டுக்குள் வந்த சுமார் 150,000 அகதிகளில் (பெரும்பாலானோர் திருப்பி அனுப்பப்பட்டனர்) சுமார் 40,000 அகதிகள் தெற்கு நோக்கி சென்று பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியான மரிச்ஜாப்பி தீவில் குடிபுகுகிறார்கள்.[4][5] இது பாதுகாக்கப்பட்ட சுந்தர வனப்பகுதி என்பதால் அரசானது அவர்களை அப்புறப்படுத்த முனைகிறது. 24 ஜனவரி 1979 ஆம் நாள் இத்தீவில் 144 தடையுத்தரவை இட்டு, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இங்கே பொருளாதாரப் போக்குவரத்தைத் தடைசெய்தனர். தீவிற்குள் 30 காவல்துறையினருடன் அணிவகுப்பு நடத்தப்பட்டது.[5] மேலும் அங்கு வசிப்பவர்களுக்கு பிறர் உணவு மற்றும் நீர் கொடுப்பதையும் தடுத்தனர். 31 ஜனவரி அன்று அங்கே வசிப்பர்கள் நாட்டு ஆயுதங்களுடன் காவல்துறையை தாக்கிய போது காவ்ல்துறை துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியது.[6] 15 நாட்கள் கழித்து கல்கத்தா உயர் நீதிமன்றம் தலையிட்டு உணவு, நீர், மருத்துவ வசதிகளை அனுமதித்து ஆணை வெளியிட்டது.[7]

பொருளாதாரப் போக்குவரத்தைத் தடைசெய்தபின்னும் பலனில்லாததால் கட்டாயமாக அகதிகளை வெளியேற்றினர்.[8] ஊடகங்கள் அன்றைக்கு உள்ளே நுழையத் தடையும் விதிக்கப்பட்டது. இறந்தவர்களைக் காவல்துறையினர் நீரில் இட்டதாகவும், தப்பிக்க முயலும் போது நீரில் மூழ்கி இறந்ததாகவும் கூறுகின்றனர்.[6] மிறிப் பிழைத்தவர்கள் தண்டகாரண்யம் பகுதிக்கு அனுப்பப்பட்டனர், சிலர் மரிச்ஜாப்பி குடியிருப்பு என்ற பெயரில் பாராசாத் அருகிலும், சீல்டாவின் இரயில்வே தண்டவாளம் அருகேயும் மறுகுடி பெயர்ந்தனர்.[9] இன்னும் சிலர் ஹிங்கால்கஞ்ச் மற்றும் கன்னிங் பகுதியருகே குடிபுகுந்தனர்.[10]

இறப்பு எண்ணிக்கையை உறுதி செய்யவில்லை. அதிகாரப்பூர்வமாக இருவர் இறந்தனர் என்கிற போதும் இதர தரவுகளின் படி ஆயிரக்கணக்காக உள்ளது.[11] இந்த மக்களின் வழி வந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்கு வங்கம் பற்றிய ஆய்வு செய்த ராஸ் மாலிக் என்பவர் எழுதிய மரிச்ஜாப்பி நூலில் 17 ஆயிரம் பேர் இறந்ததாகக் குறிப்பிடுகிறார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "மரிச்ஜாப்பி". ஜூனியர் விகடன். https://www.vikatan.com/juniorvikatan/2014-mar-26/sensation/93307.html. பார்த்த நாள்: 31 January 2019. 
  2. Pramanik, Asim (23 Mar 2014). "1979 Marichjhapi killings revisited". thestatesman.net. http://www.thestatesman.net/news/45845-1979-marichjhapi-killings-revisited.html?page=1. பார்த்த நாள்: 4 October 2014. 
  3. 3.0 3.1 Chowdhury, Debdatta (2011). "Space, identity, territory: Marichjhapi Massacre, 1979". The International Journal of Human Rights 15 (5): 664–682. doi:10.1080/13642987.2011.569333. 
  4. 4.0 4.1 Mallick, Ross (2007). Development Policy of a Communist Government: West Bengal Since 1977. Cambridge University Press. p. 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521047852.
  5. 5.0 5.1 Mallick, Ross (February 1999). "Refugee Resettlement in Forest Reserves: West Bengal Policy Reversal and the Marichjhapi Massacre". The Journal of Asian Studies (The Association for Asian Studies) 58 (1): 108. doi:10.2307/2658391. https://www.jstor.org/pss/2658391. பார்த்த நாள்: 3 April 2009. 
  6. 6.0 6.1 "Controversies that dogged the pragmatic chief minister". The Telegraph. 18 January 2010 இம் மூலத்தில் இருந்து 22 பிப்ரவரி 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100222094102/http://www.telegraphindia.com/1100118/jsp/frontpage/story_11996337.jsp. பார்த்த நாள்: 29 January 2012. 
  7. "The Tale of Marichjhapi :Review of the book "Marichjhapi chhinna desh, chhinna itihaash"". radicalsocialist.in. பார்க்கப்பட்ட நாள் 4 October 2014.
  8. Jalais, Annu (23 April 2005). "Dwelling on Morichjhanpi". Economic and Political Weekly: 1757–1962. http://www.epw.in/special-articles/dwelling-morichjhanpi.html. 
  9. Mitra, Sukumar (6 July 2011). "গণহত্যার সুবিচার হবে!". The Sunday Indian இம் மூலத்தில் இருந்து 23 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130623102857/http://www.thesundayindian.com/bn/story/%E0%A6%97%E0%A6%A3%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87/2/505/. பார்த்த நாள்: 29 May 2012. 
  10. Mitra, Shyamalendu (3 August 2011). "তিন দশক পরে মরিচঝাঁপির ফাইল ফের খুলল রাজ্য". Anandabazar Patrika இம் மூலத்தில் இருந்து 16 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130116213007/http://www.anandabazar.com/archive/1110803/3pgn5.html. பார்த்த நாள்: 29 May 2012. 
  11. Bhattacharya,, Snigdhendu (25 April 2011). "Ghost of Marichjhapi returns to haunt". The Hindustan Times. http://www.hindustantimes.com/kolkata/ghost-of-marichjhapi-returns-to-haunt/story-4v78MhnW2IZVCQMPfDObqO.html. பார்த்த நாள்: 5 August 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரிச்ஜாப்பி_படுகொலைகள்&oldid=3791795" இலிருந்து மீள்விக்கப்பட்டது