மரிட்சா அரங்கோ பியூட்ராகோ

மரிட்சா அரங்கோ பியூட்ராகோ (Maritza Arango Buitrago) (பிறப்பு: 1978 மார்ச் 19) இவர் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு நடுத்தர தூர இணை ஒலிம்பிக் விளையாட்டு தடகள விளையாட்டு வீரராவார் . இவர் டி 11 பிரிவில் முக்கியமாக நடுத்தர தூர போட்டிகளில் போட்டியிடுகிறார். [1] இலண்டனில் நடந்த 2012 கோடைகால இணை ஒலிம்பிக்கில் கொலம்பியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய இவர், தொடர்ச்சியாக இரண்டு சர்வதேச இணை தடகளப் போட்டிகளில் 800 மீ. பிரிவில் வெள்ளி வென்றார். இரியோ டி செனீரோவில் நடைபெற்ற 2016 கோடைகால இணை ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றார்.

மரிட்சா அரங்கோ பியூட்ராகோ
தனது வழிகாட்டியான ஜொனாதன் சான்செஸ் கோன்சலசுடன் மரிட்சா அரங்கோ பியூட்ராகோ 2013 இல்
தனித் தகவல்கள்
பிறந்த நாள்19 மார்ச்சு 1978 (1978-03-19) (அகவை 46)
பிறந்த இடம்ஆண்டிகுவா, கொலம்பியா
உயரம்1.66 m (5 அடி 5+12 அங்)
எடை55 kg (121 lb)
விளையாட்டு
நாடு கொலம்பியா
விளையாட்டுமகளிர் தடகளம்
நிகழ்வு(கள்)400மீ
800மீ
1,500மீ

சுயசரிதை தொகு

இவர் கொலம்பியாவின் அந்தியோக்வியா மாவட்டத்தில் 1978 இல் குஸ்டாவோ, ரொமேலியா ஆகிய இருவருக்கும் பிறந்தார். [1] [2] எட்டு குழந்தைகளில் மூன்றாவது குழந்தையான, இவர் சாண்டா மார்டா ஆன்டிகுவியா நகரத்தின் புறநகரில் வளர்க்கப்பட்டார். இவர் மார்கோ பிடல் சுரேசு பள்ளியில் கல்வி பயின்றார். [3] பின்னர், இவர் ஒரு மழலையர் பள்ளி ஆசிரியரானார். 1999 இல் ஜுவான் என்ற மகனுக்குத் தாயானார். 2003 ஆம் ஆண்டில், இவருக்கு பார்வைக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. நோய் முற்றி, அடுத்த ஆண்டுகளில் தனது பார்வையை இழந்தார்.. ஆரம்பத்தில் இவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, தனது வீட்டை விட்டு வெளியேற விரும்பாமல் இரண்டு ஆண்டுகளை கழித்தார். தனது இயலாமையைக் கட்டுப்படுத்தவும், அதனுடன் வாழ கற்றுக்கொள்ளவும் முடிவு செய்தபோது இவர் மன அழுத்தத்தை உடைத்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இவர் பிரெயில் எழுத்து முறையைக் கற்றுக் கொண்டார். பின்னர் மருத்துவமனை கையுறைகளை அடைக்கும் ஒரு பணியில் சேர்ந்தார். தனது ஓய்வு நேரத்தில் இவர் நீச்சலைக் கற்றுக் கொண்டார். ஆனால் ஓட்டபந்தயப் பயிற்சியாளர் ஜுவான் "சோப்" கில்லர்மோ ரோட்ரிகசு என்பவருடனான ஒரு சந்திப்பு இவரை தடகளத்தை எடுக்க வழிவகுத்தது.

வாழ்க்கை வரலாறு தொகு

சோப்பை சந்தித்த ஒரு வருடத்திற்குப் பிறகு இவர் முதலில் எஸ்டாடியோ அல்போன்சோ கால்விஸ் டியூக்கில் பார்வையற்றவராக ஓட முயன்றார். அதிலிருந்து இவர் தனது விளையாட்டில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். [3] 2011 இல், சர்வதேச இணை ஒலிம்பிக் தடகள உலகப் போட்டியில் கொலம்பியா தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இவர் 400 மீ, 800 மீ பந்தயங்களில் இரண்டு போட்டிகளில் பங்கேற்றார். 400 மீ தகுதிப் போட்டிகளில் இவர் கடைசியாக இடம்பிடித்தார். இவர் பிரிட்டனின் டிரேசி ஹிண்டனுக்குப் பின்னால் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தாலும், இவரது நேரம் 1: 07.94 . மேலும் இவர் இறுதிப்போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்தார். [4] இறுதிப் போட்டியில், 1: 05.88 என்று அப்பருவத்தின் சிறந்த ஓட்டமாக இருந்த போதிலும், இவர் நான்காவது இடத்தில் இருந்தார். 800 மீ தகுதிப் போட்டிகளில், 2: 31.31 என்ற நேரத்தை பதிவிட்டு, முதல் இடத்தைப் பிடித்தார். இறுதிப் போட்டியில் இவர் குறைவான நேரத்தில் ஓடினார். ஆனால் செக் குடியரசின் மிரோஸ்லாவா செட்லகோவாவுக்குப் பின்னால் இரண்டாவது இடத்தைப் பிடித்து, வெள்ளிப் பதக்கத்தை சேகரித்தார்.

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "Arango Buitrago, Maritza". ipc.infostradasports.com. Archived from the original on 19 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 17 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Castro, Rosovelt (5 March 2011). "Maritza, atleta sin límites" (in Spanish). elmundo.com. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. 3.0 3.1 Atehortúa Taborda, Adrian. "Correr en la oscuridad" (in Spanish). bacanika.com.co. Archived from the original on 19 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 17 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  4. "Athletics World Championships Results" (PDF). paralympic.org. Archived from the original (PDF) on 4 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 18 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு