மரியான் ஆல்பெர்த்தோவிச் கோவல்சுகி

மரியான் ஆல்பெர்த்தோவிச் கோவல்சுகி (Marian Albertovich Kowalski) (உருசியம்: Мариан Альбертович Ковальский) (ஆகத்து 15, 1821 அல்லது அக்தோபர் 15, 1821 - மே 28, 1884 அல்லது ஜூலை 9, 1884) ஒரு போலந்து உருசிய வானியலாளர் ஆவார். அறிவியல் இதழ்களில் இவரது பெயர் Kowalski அல்லது Kowalsky என ஆங்கிலத்தில் தரப்படுகிறது.

மரியான் ஆல்பெர்தோவிச் கோவல்சுகி.

இவர் தோப்ரசின் நாத் விசுலா Dobrzyń nad Wisłą (உருசியத்தில் Добжинь )எனும் இடத்தில் பிறந்தார். இது அப்போது உருசியப் பேரரசில் இருந்த பேராயம் போலந்து பகுதியில் இருந்த இடமாகும்.இவரது தந்தை பெயரொட்டாக Voytekhovich அல்லது Voytsekhovich (Войтехович அல்லது Войцехович)என ஆங்கிலத்தில் தரப்படுகிறது. இதனால் இவரின் தந்தையார் பெயர் வோய்சீச் (Wojciech) ஆக இருக்கலாம் எனத் தெரிகிறது.

இவர் 1845 இல் புனித பீட்டர்சுபர்கு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவருக்கு 1852 இல் நெப்டியூனின் வட்டணை சார்ந்த கோட்பாட்டு ஆய்வுக்காக முனைவர் பட்டம் தரப்பட்ட்து.[1] இவர் 1852 இல் இருந்து கசான் வான்காணகத்தின் இயக்குநராக இருந்தார். இவர் கசானில் இயற்பியல், கணிதவியல் புலமுதல்வராகவும் இருந்துள்ளார்.

இவர் ஜேம்சு பிராட்லே விண்மீன் அட்டவணையில் இருந்த 3,136 விண்மீன்களின் சரியான இயக்கத்தை பகுப்பாய்வு செய்தார். இம்முறை தான் முதன்முதலில் பால்வழிப் பால்வெளியின் சுழற்சியைக் கண்க்கிட்டு அறிய உதவியது. இந்த ஆய்வை அடைப்படையில், பால்வெளியின் நடுவண் பொருள்தான் அதிலுள்ல விண்மீன்களின் சுழற்சிக்குக் காரணம் என்பதைப் பொய்ப்பித்தார்.

இவர் வான் இயக்கவியலில், நோக்கீடுகளில் இருந்து கோள்களின் வட்டணையைக் கணக்கிடும் மேம்பட்ட முறைகளைக் கண்டறிந்தார். இவர் கோளியக்கங்களின் குற்றலைவுகளைக் கணக்கிடும் கணிதவியல் முறையை உருவாக்கினார். குறிப்பாக நெப்டியூனின் வட்டணையைத் துல்லியமாகத் தீர்மானித்தார். இவர் மேலும் இரும விண்மீன்களின் வட்டணைகளைக் கணக்கிடும் மேம்பட்ட முறையையும் கண்டறிந்தார்.

இவரது முதன்மையான ஆய்வுகள் 1859 இல் Recherches astronomiques de l'observatoire de Kasan எனும் நூலில் வெளியிடப்பட்டன.

இவர் கசானில் இறந்தார். அங்கிருந்த கத்தோலிக்க கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். [1] பரணிடப்பட்டது 2000-08-23 at Archive.today. இவர் புல்கொவோ வான்காணகத்தில் பணி செய்த அலெக்சாந்தர் மரியனோவிச் கோவல்சுகியின் தந்தையார் ஆவார். பின்னவர் தன் 44 ஆம் அகவையில் 1902 ஜூலை 6 இல் இறந்தார். [2] [3]

நிலாவில் ஒரு குழிப்பள்ளமும் செவ்வாயில் ஒரு குழிப்பள்ளமும் கோவல்ச்கிய் குழிப்பள்ளம் என இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளன.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

நினைவேந்தல் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Marian Albertovich Kowalski
என்பதில் ஊடகங்கள் உள்ளன.