மரியா அந்தோனெல்லா பரூச்சி

கண்டுபிடித்தசிறுகோள்கள்: 3 [1]
3362 குபூ 30 ஆகத்து 1984 வார்ப்புரு:LoMP
3752 காமில்லோ 15 ஆகத்து 1985 வார்ப்புரு:LoMP
(15692) 1984 RA{{{2}}} 1 செப்டம்பர் 1984 வார்ப்புரு:LoMP

மரியா அந்தோனெல்லா பரூச்சி (Maria Antonella Barucci) ஓர் இத்தாலிய வானியலாளர் ஆவார். இவர் பாரீசு மியூடன் வான்காணகத்தில் பணிபுரிகிறார்.[2] இவர் 1984 இலும் 1985 இலும் மூன்று சிறுகோள்களைக் கண்டுபிடித்ததாக சிறுகோள் மையம் கூறுகிறது.[1] இவர் ஆர். சுகாட் தன்பாருடன் இணைந்து பலோமார் வான்காணகத்தில் கண்டுபிடித்த புவியண்மைப் பொருளாகிய ஆட்டன் சிறுகோள் 3362 குபூ வும்[3] இவரது மற்றோர் இணைகண்டுபிடிப்பாகிய அப்பொல்லோ சிறுகோள் 3752 காமில்லோவும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.[4]

இவர் சுப்பிரிங்கர்-வெரிலாகு 2003 இல் வெளியிட்ட சூரியக் குடும்பம் எனும் வானியல், கோள் அறிவியல் பாடநூலின் இணையாசிரியர் ஆவார்.[5] அமெரிக்க வானியலாளர் எட்வர்டு போவெல் கண்டுபிடித்த முதன்மைப் பட்டைச் சிறுகோளாகிய 3485 பரூச்சி இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 4 September 2016. பார்க்கப்பட்ட நாள் 7 September 2016.
  2. retrieved VITIS Rosetta Virtis பரணிடப்பட்டது 2012-04-05 at the வந்தவழி இயந்திரம் 12:05 11.10.11
  3. "3362 Khufu (1984 QA)". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
  4. "3752 Camillo (1985 PA)". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
  5. Encrenaz, Thérèse; et al., The Solar System (3rd ed.), Springer, p. 4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-00241-3
  6. Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (3485) Barucci. Springer Berlin Heidelberg. p. 292. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.

வெளி இணைப்புகள்

தொகு