மரியா எல்சா தா ரோச்சா

மரியா எல்சா தா ரோச்சா (1924-2007) இந்தியாவின் கோவாவைச் சேர்ந்தவரும் போர்த்துகீசிய பூர்விகத்தைக் கொண்டவருமான சிறுகதை எழுத்தாளரும் போர்த்துகீசிய மொழி கவிஞருமாவார்.

மரியா எல்சா கெர்ட்ரூட்ஸ் தா ரோச்சா
பிறப்பு1924
அல்டோனா, கோவா
இறப்பு2007
தொழில்சிறுகதை எழுத்தாளர், கவிஞர்

வாழ்க்கை தொகு

மரியா, ஒரு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். வேலையின் காரணமாக கோவா மற்றும் தமன் பகுதி முழுவதும் சென்றுள்ள இவரின் அனுபவங்கள்,செவிவழி கதைகள் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளை  அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கதைகளை எழுதியுள்ளார்.

படைப்புகள் தொகு

1960 ஆண்டு முழுவதும், மரியா, கோவாவின் மட்காவ் நகரை மையமாகக் கொண்ட போர்த்துகீசிய மொழி செய்தித்தாளுக்கு வாழ்க்கை (A Vida) என்ற தலைப்பில் சிறுகதைகளை எழுதியதோடு அந்த செய்தித்தாளின் இணை ஆசிரியராக இருந்து, அதன் கலாச்சார பக்கத்தை வடிவமைத்துள்ளார். அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பப்பட்ட போர்த்துகீசிய மொழி நிகழ்ச்சியான 'மறுமலர்ச்சி (Renascenza)'யிலும் பணியாற்றியுள்ளார். [1]

2005 ஆம் ஆண்டில் இவரது சிறுகதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு பகிரப்பட்ட அனுபவங்கள்(Vivências Partilhadas) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. [2]

பகிரப்பட்ட அனுபவங்கள் தொகு

பகிரப்பட்ட அனுபவங்கள், 1961 ஆம் ஆண்டுக்கு பிந்தைய கோவாவின் போர்த்துகீசிய மொழி இலக்கியத்தில்,  கோவாவின் கீழ்நிலையில் இருந்த பெண்களின் அனுபவங்களில் கவனம் செலுத்தி எழுதப்பட்டுள்ளது, [3] ஆழமான அனுதாபம் தொனிக்கும் இந்த கதைகளில் ஒரு குறிப்பிட்ட சமூக பழமைவாதத்தின் குறுக்கு நோக்கம் சித்தரிக்கப்பட்டுள்ளது.[4] மரியாவின் எழுத்துக்களில், குறிப்பாக கோவாவில் ஊடுருவியுள்ள போர்த்துகீசிய கலாச்சாரம் மற்றும் அதன் தாக்கமும், கொங்கனியின் பாரம்பரிய பயன்பாடுகளும் கணிசமாக காணப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Cielo G. Festino "Sharing Lives in Maria Elsa Da Rocha's Vivências Partilhadas" in Muse India. போர்த்துகீசிய மொழியில் கோவா இலக்கியம். இதழ் 70. நவம்பர்-டிசம்பர், 2016.
  2. Panjim, Goa: Third Millennium, 2006.
  3. Paul Melo e Castro, 'How the Other Half Live: The Goan Subaltern in the Stories of Vimala Devi, Maria Elsa da Rocha and Epitácio Pais', in Portuguese Language and Literature in Goa: Past, Present and Future, Carmo D'Souza (ed.), Margão, India: CinnamonTeal, 2014, pp.26-32.
  4. Hélder Garmes and Paul Melo e Castro 'Lirismo e Conservadorismo na Arena Política: o conto "Shivá, brincando..." da escritora goesa Maria Elsa da Rocha'. Revista Abril, 4.6 (2011), pp.77-87
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_எல்சா_தா_ரோச்சா&oldid=3684307" இலிருந்து மீள்விக்கப்பட்டது