மரியா கிரேசியா கதூலி

மரியா கிரேசியா கதூலி (Maria Grazia Cutuli அக்டோபர் 26, 1962 – நவம்பர் 19, 2001) ஓர் இத்தாலிய பத்திரிகையாளர் ஆவார், அவர் தினசரி செய்தித்தாளான கொரியர் டெல்லா செராவில் நிருபராக பணியாற்றினார். ஆப்கானித்தானில் பணி நியமனத்தின் போது அவர் கொல்லப்பட்டார், அங்கு அவர் 11 செப்டம்பர் 2001 பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து அமெரிக்க இராணுவப் படையெடுப்பை படமெடுத்தார். ஜலாலாபாத் மற்றும் காபூலுக்கு இடையில் அவர் மற்ற மூன்று பத்திரிகையாளர்களுடன் படுகொலை செய்யப்பட்டார். [1] [2] 2001 இல் ஆப்கானித்தானில் நடந்த போரின் போது கொல்லப்பட்ட முதல் பெண் மற்றும் முதல் இத்தாலிய பத்திரிகையாளர் கதூலி ஆவார். [3]

தனிப்பட்ட

தொகு

மரியா கிரேசியா கதூலி கேடேநிய, சிசிலி, இத்தாலியில் பிறந்து வளர்ந்தார், பின்னர் ஒரு தொழில்முறை செய்தியாளராக மிலனில் அவர் வசித்து வந்தார் . [3] [4] அவர் தத்துவம் பயின்றார் மற்றும் கேடேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். [4] 1990 ஆம் ஆண்டு வரை அவர் மிலனில் வசித்து வந்தார். [4]

தொழில்

தொகு

மரியா கிரேசியா கதூலி 11 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகையாளராகப் பணியாற்றினார். அவர் முதலில் லா சிசிலியா செய்தித்தாளில் பணிபுரிந்தார், முதலில் நாடகத் திரைப்பட விமர்சனங்களை எழுதினார். அவர் எபோகா மற்றும் பனோரமா போன்ற பத்திரிகைகளுக்கு எழுதினார். அவர் இஸ்ரேல், கம்போடியா, சூடான், ருவாண்டா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார் மற்றும் வெளிநாட்டு நிருபராக தனது நற்சான்றுகளை உருவாக்க சார்பிலா கட்டுரைகளை எழுதினார். [4][5]அவர் 1997 ஆம் ஆண்டு முதல் கொரியர் டெல்லா செராவில் சிறப்பு நிருபராக பணியாற்றினார். [6] [7]

இறப்பு

தொகு

மரியா கிரேசியா காதூலி இசுப்பானிய பத்திரிகையாளர் ஜூலியோ ஃபுயண்டெஸ் இன் எல் முண்டோ, மற்றும் ஆஸ்திரேலிய ஹாரி பர்டன் மற்றும் ஆப்கான் அசிசுல்லா ஐதரி ஆகியோருடன் கொலை செய்யப்பட்டார்.இருவரும் ராய்ட்டர்சாகப் பணிபுரிந்தனர் . [1] ஜலலாபாத் மற்றும் காபூலுக்கு இடையில் பத்திரிகையாளார் குழுவினர் பயணம் செய்தபோது, நங்கர்கார் மாகாணத்தில் அமைந்துள்ள சாருபிக்கு அருகிலுள்ள காபூலில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் அவர்கள் கொல்லப்பட்டனர். [7] [8] அவரது பிரேத பரிசோதனையில் அவர் முதுகில் 4 துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்தது தெரியவந்தது மற்றும் நகைக்காக அவரது காது மடல் துண்டிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

ஊடகவியலாளர்கள் குழு ஜலாலாபாத்தில் இருந்து சுமார் 8 மகுழுந்து கொண்ட ஒரு சிறிய பரிவாரத்துடன் புறப்பட்டு காபூலுக்குச் சென்று கொண்டிருந்தது. தலிபான்கள் என அடையாளம் காணப்பட்ட ஆயுதங்கள் ஏந்திய, பஷ்தூ மொழி பேசும் ஆண்கள் ஒரு பாலம் அருகே இவர்கள் வந்த மகிழுந்துவினை நிறுத்தினர். கற்களை வீசுதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடந்தபோது, பின்புறத்தில் இருந்த 4 மகிழுந்து திரும்பி தப்பின.[9] இவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு, தண்டனை பெற்ற கொலைகாரன் ரெசா கானால் வன்கலவி செய்யப்பட்டாள். [10]

அவர் இறந்த அதே நாளில், கொரியர் டெல்லா செராவில் அவரது கடைசி கட்டுரை வெளியிடப்பட்டது, இது "எ டெபாசிட் ஆஃப் நர்வ் கேஸ் இன் தெ பேஸ் ஆஃப் ஒசாமா" என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை வெளியானது. [11] அந்தக் கட்டுரை முன்னரே வழங்கப்பட்டது. ஆனால் போரின் போது அச்சுறுத்தலாக இருந்த ஒரு இரசாயன தொழிற்சாலை பின்னர் தான் கண்டுபிடிக்கப்பட்டது.

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 Rory Carroll (November 21, 2001). "Transformed by death in Afghanistan". The Guardian (UK). பார்க்கப்பட்ட நாள் 2014-12-11.
  2. "Maria Grazia Cutuli". CPJ.org. November 19, 2001. பார்க்கப்பட்ட நாள் 2014-12-11.
  3. 3.0 3.1 Henneberger (November 24, 2001). "Riveted by War and Grief, Italy Mourns Slain Writer". New York Times. https://www.nytimes.com/2001/11/24/world/riveted-by-war-and-grief-italy-mourns-slain-writer.html. பார்த்த நாள்: 2014-12-12. 
  4. 4.0 4.1 4.2 4.3 "Maria Grazia Cutuli". The Times (London). November 21, 2001. 
  5. "Italy mourns murdered journalist". CNN. November 24, 2001 இம் மூலத்தில் இருந்து டிசம்பர் 12, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20141212130350/http://www-cgi.cnn.com/2001/WORLD/europe/11/24/journalists.burial/index.html. பார்த்த நாள்: 2014-12-12. 
  6. . 
  7. 7.0 7.1 "Fondazione Maria Grazia Cutuli". fondazionecutuli.it. Archived from the original on 2014-09-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-11.
  8. "la Repubblica/mondo: Uccisa in un agguato l'inviata del Corriere". repubblica.it.
  9. Weiner, Tim (November 20, 2001). "A Nation Challenged: News Media; 4 Foreign Journalists Are Shot And Possibly Killed in Ambush". New York Times. https://www.nytimes.com/2001/11/20/world/nation-challenged-media-4-foreign-journalists-are-shot-possibly-killed-ambush.html. பார்த்த நாள்: 2014-12-11. 
  10. "BBC NEWS - South Asia - Death penalty for Afghan killer". bbc.co.uk. November 20, 2004. பார்க்கப்பட்ட நாள் 2014-12-11.
  11. Cutuli Maria Grazia. "Un deposito di gas nervino nella base di Osama". corriere.it.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_கிரேசியா_கதூலி&oldid=3351066" இலிருந்து மீள்விக்கப்பட்டது