மரிலின் பாப்டிஸ்ட்டு

கனடிய சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

மரிலின் பாப்டிஸ்ட்டு (Marilyn Baptiste) கனடாவின் பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள ஜெனி குவெட்டின் முதல் தேசத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.

மரிலின் பாப்டிஸ்ட்டு
Marilyn Baptiste
தேசியம்கனடியர்
பணிஜெனி குவெட்டின் முதல் தேசத்தின் தலைவர்
ஆலோசகர்
விருதுகள்யூகின் ரோகர்சு விருது
கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது

தங்கம் மற்றும் செப்பு சுரங்கங்களை வெட்டும் திட்டத்தினால் அழிய இருந்த டெஸ்டான் பினி என்ற மீன்களுக்கான ஏரியைக் காப்பாற்றுவதற்கான இயக்கத்தில் இவர் போராடியதற்காக 2011 ஆம் ஆண்டில் இவருக்கு யூகின் ரோகர்சு விருது வழங்கப்பட்டது. [1][2]மேலும் இதே காரணத்திற்காக இவருக்கு 2015 ஆம் ஆண்டுக்கான கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதும் வழங்கப்பட்டது. [3][4]

மேற்கோள்கள் தொகு