மர்லின் மன்றோ

அமெரிக்க நடிகை(1926–1962)
(மரிலின் மன்றோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மர்லின் மன்றோ Marilyn Monroe, ஜூன் 1, 1926ஆகஸ்ட் 5, 1962), அமெரிக்க நடிகையும் பாடகியும் திரைப்பட இயக்குநரும் ஆவார்.   அவர் 1950 களில் மிகவும் பிரபலமான பாலின அடையாளங்களில் ஒன்றாகவும், பாலியல் தொடர்பான காலகட்ட மனப்பான்மையின் அடையாளமாகவும் இருந்தார். ஒரு தசாப்தத்திற்கு சிறந்த நடிகையாக இருந்தார் என்றாலும், அவரது திரைப்படங்கள் 1962 ஆம் ஆண்டில் எதிர்பாராத அவரது மரணத்தால் $ 200 மில்லியனை வசூலித்தன.[1]  இவர் இறந்தபின்னும் ஒரு பிரபலமான கலாச்சாரச் சின்னமாக தொடர்ந்து கருதப்படுகிறார்.[2]

மர்லின் மன்றோ
Marilyn Monroe

த பிரின்ஸ் அண்ட் த ஷோகேர்ல் (1957) திரைப்படத்தில்
இயற் பெயர் நோர்மா ஜீன் மோர்ட்டென்சன்
பிறப்பு (1926-06-01)சூன் 1, 1926
லொஸ் ஏஞ்சலீஸ், கலிபோர்னியா  ஐக்கிய அமெரிக்கா
இறப்பு ஆகத்து 5, 1962(1962-08-05) (அகவை 36)
லொஸ் ஏஞ்சலீஸ், கலிபோர்னியா,  ஐக்கிய அமெரிக்கா
வேறு பெயர் நோர்மா ஜீன் பேக்கர்
தொழில் நடிகை, மாடல், ஒப்பனையாளர், இயக்குநர்
நடிப்புக் காலம் 1947–1962
துணைவர் ஜேம்ஸ் டொகேர்ட்டி (1942-1946)

ஜோ டிமாகியோ (1954)
ஆர்தர் மில்லர் (1956-1961)

இணையத்தளம் http://www.marilynmonroe.com/

இவர் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்து வளர்ந்தார், மன்றோ தனது குழந்தைப் பருவத்தை வளர்ப்பு வீடுகளில் மற்றும் ஒரு அனாதை இல்லத்தில் கழித்தார், பதினாறு வயதில் திருமணம் செய்து கொண்டார். போர் காலகட்டமான 1944 இல் இவர் ஒரு ரேடியோபேன் தொழிற்சாலை வேலை செய்யும் போது, தற்செயலாக ஃபர்ஸ்ட் மோஷன் பிக்சர் யூனிட்டிலிருந்து வந்த ஒரு ஒளிப்படக் கலைஞர் எடுத்த ஒளிப்படத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமான வடிவழகி தொழிலைத் தொடங்கினார். இது 20ஆம் சென்சுரி பாக்ஸ் (1946-1947) மற்றும் கொலம்பியா பிக்சர்ஸ் (1948) ஆகிய திரைப்பட நிறுவனங்களுடன் குறுகிய கால திரைப்பட ஒப்பந்தங்கள் ஏற்பட வழிவகுத்தது. திரைப்படங்களில் தொடர்ச்சியாக சிறு பாத்திரங்களில் நடித்துவந்த நிலையில், 1951 இல் பாக்ஸ் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் தொடர்ச்சியாக அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவர் பல நகைச்சுவை பாத்திரங்களை ஏற்று பிரபலமான நடிகை ஆனார். இக்காலகட்டத்தில் மர்லின் மன்றோ திரைப்பட நடிகையாவதற்கு முன்னர் அவரைக் கொண்டு எடுக்கப்பட்ட நிர்வாண ஒளிப்படங்கள் வெளிவந்து குழப்பத்தை ஏற்படுத்தின,  ஆனால் இந்த நிர்வாண ஒளிப்படங்கள் அவரது தொழிலைப் பாதிக்காமல், மேலும் அவரது படங்களை அதிகம் பிரபலமாக்கியது.

1953 வாக்கில், மிகச் சிறந்த ஹாலிவுட் நட்சத்திரங்களான மூன்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து முதன்மைப் பாத்திரங்களில் நடித்தார்: நூர், நயாகரா ஆகிய படங்கள் இவரை பாலியல் குறியீடாக்கின, மற்றும் ஜென்டில்மென் ப்லோண்டேஸ் மற்றும் ஹவ் டு மேரி மில்லியனர் ஆகிய நகைச்சுவைப் படங்களின் வழியாக நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

திரைப்பட நிறுவனத்துக்கும் மன்றோவுக்கும் திரைப்பட ஒப்பந்த விசயமாக முறுகள் நிலை தோன்றியபோது, மன்ரோ 1954 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தானே ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார்; திரைப்பட நிறுவனத்துக்கு மர்லின் மன்றோ புரொடக்சன்ஸ் (MMP) என்று பெயரிட்டார். 1955 ஆம் ஆண்டு தனது திரைப்பட நிறுவனத்தை உருவாக்கி, நடிகர்கள் திரைப்பட நிறுவனங்கள் செயல்படும் முறைகள் போன்றவற்றைக் கற்கத் தொடங்கினார். 1955 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், பாக்ஸ் திரைப்பட நிறுவனம் மன்றோவுடன் புதிய திரைப்பட ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது, இது மன்றோவுக்கு அதிக கட்டுப்பாடு மற்றும் பெரிய ஊதியத்தைக் கொண்டதாக இருந்தது. பஸ் ஸ்டாப் (1956), பிரின்ஸ் அண்ட் தி ஷோர்கர் (1957), படத்தில் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டார், சம் லைக் இட் ஹாட் (1959) படத்திற்காக சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதைப் பெற்றார். இவரது இறுதித் திரைப்படம் தி மிஸ்ஃபிட்ஸ் (1961).

மன்றோவின் சொந்த வாழ்க்கை மிகவும் துன்பமயமானதாக இருந்தது. பொருள் இழப்பு, மனச்சோர்வு, கவலை ஆகியவற்றால் அவர் போராடினார். ஓய்வு பெற்ற பேஸ்பால் நட்சத்திரமான ஜோ டிமாஜியோ மற்றும் நாடக ஆசிரியரான ஆர்தர் மில்லர் ஆகிய இருவருடனான அடுத்தடுத்த திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிவடைந்தது. 1962 ஆகத்து 5 அன்று, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் அதிகமான பார்பிகுரேட்டட்ஸின் மருந்தை உட்கொண்டதால் 36 வயதில் இறந்தார்.   மன்றோவின் மரணம் ஒரு தற்கொலை எனக் கருதப்பட்டாலும், அவரின் தற்கொலையைப் பற்றி பல கருத்துகள் அவருடைய இறப்புக்குப் பிறகு பல தசாப்தங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன.

1999 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் (AFI) மன்றோவை அனைத்துக் காலத்துக்குமான சிறந்த நடிகை (greatest female star of all time) என்ற விருது வழங்கிச் சிறப்பித்தது. உலகில் ஏற்பட்ட கலாசார மாற்றம் அல்லது புதிய கலாச்சாரத்திற்குக் காரணமான நடிகையாகவும் இவர் காணப்படுகின்றார்.

வாழ்க்கை

தொகு
 
குழந்தைப் பருவ மன்றோ

மன்றோ ஜான் 1 ஜூன் 1926 இல் லாஸ் ஏஞ்சல்ஸ்சில் உள்ள கவுண்டி மருத்துவமனையில் கிளாடிஸ் பெர்ல் பேக்கரின் (1902-1984) [3] மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது இயற்பெயர், நார்மா ஜெனி மார்டென்சன். மன்றோவின் தாயாரான கிளாடிஸ் மத்திய மேற்கிலிருந்து கலிபோர்னியாவுக்குக் குடியேறிய இரண்டு ஏழைகளின் மகள் ஆவார், கிளாடிஸ் திரைப்படத் தொழில்துறையின் ஒருங்கிணைந்த வேலைகளில் ஒன்றான எதிர் படச்சுருளை வெட்டும் வேலையைச் செய்து வந்தார். [4] கிளாடிசின் பதினைந்தாவது வயதில் அவரைவிட வயதில் ஒன்பது ஆண்டுகள் மூத்தவரான ஜோன் நியூட்டன் பேக்கரைத் திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ராபர்ட் (1917-1933) [5] மற்றும் பெர்னீஸ் (1919 ஆம் ஆண்டு பிறந்தார்) [6] ஆகிய இரு குழந்தைகள் பிறந்தனர். இதன்பிறகு 1921 ஆம் ஆண்டில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார், இதன்பிறகு பேக்கர் தன் குழந்தைகளுடன் தன் சொந்த ஊருக்குச் சென்றார். [7] 1924 இல், கிளாடிஸ் தனது இரண்டாவது கணவர்-மார்ட்டின் எட்வர்ட் மோர்டன்ஸனை திருமணம் செய்தார்-ஆனால் அப்போது அவர் வேறு ஒரு மனிதரால் கர்ப்பமாக இருந்தார்; அவர்கள் 1928 இல் விவாகரத்து பெற்றனர். [8] மன்றோவின் தந்தை யார் என்று அடையாளம் தெரியவில்லை. [9] மேலும் பேக்கர் என்ற பெயர் பெரும்பாலும் அவரது குடும்பப் பெயராகப் பயன்படுத்தப்பட்டது.[10]

மன்றோவின் குழந்தைப் பருவம் நிலையானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருந்தது. [11] கிளாடிஸ் குழந்தையை வளர்க்க மன ரீதியாகவும், நிதி ரீதியிலும் தயாராக இல்லாத நிலையால், பிறந்த கொஞ்ச காலத்திலேயே மன்றோ ஹொத்தொர்ன என்ற கிராமப்புற சிறு நகரத்தில் உள்ள வளர்ப்புப் பெற்றோர்களான ஆல்பர்ட் மற்றும் ஈடா பொலென்டர் ஆகியோரின் பராமரிப்பில் இருந்தார். [12] சுவிசேஷ கிறிஸ்தவத்தின் கோட்பாடுகளின்படி அவர்கள் வளர்ப்புக் குழந்தைகளை வளர்த்தார்கள். [12] ஆரம்பத்தில், கிளாடிஸ் பொல்லேண்டர்ஸ் என்பவருடன் வாழ்ந்து லாஸ் ஏஞ்சல்ஸில் பணிபுரிந்தார், பல வேலை மாற்றங்களின் முடிவில் 1927 [13] ஆம் ஆண்டின் முற்பகுதியில் நகரத்திற்கு இடம் பெயர்ந்தார். அதன் பின்னர் அவர் தன் மகளை வார இறுதி நாட்களில்தான் சந்தித்தார், அப்போது பெரும்பாலும் அவளை லாஸ் ஏஞ்சர்சில் சினிமாவிற்கு அழைத்துச் சென்று வந்தார். [11] மன்றோவை பொல்லேண்டஸ் மீண்டும் தன் பொறுப்பில் ஏற்றுக்கொள்ள விரும்பினார், 1933 ஆம் ஆண்டு கோடை காலத்தில் கிளாடிஸ் ஹாலிவுட்டில் ஒரு சிறிய வீடு வாங்கி,[14] மன்றோவையும் தங்களுடன் அழைத்துச் சென்றனர்.  அல்கே அவர்கள் அந்த வீட்டை தங்கும் விடுதிபோல, நடிகர்கள் ஜார்ஜ், மேட் அட்கின்சன் மற்றும் அவர்களின் மகள் நெல்லி ஆகியோருடன் பகிர்ந்து கொண்டனர். [15] சில மாதங்களுக்குப் பிறகு, ஜனவரி 1934 இல், கிளாடிசுக்கு மனநிலை முறிவு ஏற்பட்டதுடன், பரனோய்ட் ஸ்கிசோஃப்ரினியா பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. [16] பல மாதங்கள் இவர் ஓய்வு இல்லத்தில் இருக்க வேண்டி இருந்தது,மேலும் மெட்ரோபொலிட்டன் ஸ்டேட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். [17] அவர் தனது வாழ்நாளின் பிற்காலத்தில் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றினார், பின் மன்றோவுடன் தொடர்பில் இருந்தார். [18]


மன்றோ தன் 16 வயதில் முதல் மணம் முடித்தார் . இந்த முதல் திருமணம் மகிழ்ச்சியானதாக இல்லை., வளர்ப்புப் பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட அவசரத் திருமணம் அது. 1944 இல் டேவிட் கொனோவர் என்ற ஒளிப்படக் கலைஞர் யாங்க் என்ற இதழுக்காக இவரை ஒளிப்படம் எடுத்தார். கவர்ந்திழுக்கும் இவரது அழகை முதன்முதலாக வெளி உலகுக்குக் கொண்டு வந்தது அவர்தான். இதன்பிறகு 1944 இல் இவர் விளம்பரப் படங்களில் ஓர் வடிவழகியாகத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். திரைப்படத்தில் நடிக்கும் ஆசை பிறந்து, தொடர்ந்து முயற்சி செய்தார். 1946 இல் தனது பெயரை மர்லின் மன்றோ என்று மாற்றிக்கொண்டார். 1947 ஆம் ஆண்டில் இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் சிறிய பாத்திரங்களில் தோன்றினார். 1950 இல் The Asphalt Jungle மற்றும் All About Eve என்ற படங்கள் இவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தன. நகைச்சுவைப் பாத்திரங்களில் இவரது நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது. அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்தார். இவரது நடை, உடையழகு மிகவும் பிரபலமானது. தங்க நிற முடி, புன்னகை பூத்த முகம், தங்கச் சிலை போன்ற உடல் என்று பலராலும் வர்ணிக்கப்பட்டார்.

அதிகம் பேசப்பட்ட படம்

தொகு

சற்று மேலே பறக்கும் மேலாடையுடன் The Seven Year Itch திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட மன்றோவின் ஒளிப்படம் சிறப்பாக அமைய 14 முறை ரீடேக் எடுக்கப்பட்டதாகவும், இரவு 1.00 மணிக்கு எடுக்கப்பட்ட அக்காட்சி நிறைவுற மூன்று மணி நேரம் ஆனதாகவும் புகைப்படக்கலைஞர் ஜார்ஜ் எஸ்.ஸிம்பல் தெரிவித்துள்ளார்.[19]

இறப்பு

தொகு
 
நோர்மா டொகேர்ட்டி, யாங்க் இதழ், 1945

மன்றோவின் கடைசி நாட்களில் போதைப் பொருள், குடும்பப் பிரச்சினையால் அல்லலுற்றார். 1962 இல் நடந்த இவரது இறப்பு இன்னமும் ஒரு தீர்க்கப்படாத ஒரு புதிராகவே உள்ளது.[1] தற்கொலை செய்து கொண்டதாகவே அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் போதைப் பொருள் அதிகம் உட்கொண்டு இறந்திருக்கலாம் என்ற கருத்தும் மறுக்கப்படவில்லை[20]. கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இவரது தனிப்பட்ட வாழ்க்கை ஜோன் எஃப். கென்னடி, மற்றும் ரொபேர்ட் கென்னடி ஆகியோருடன் இணைத்துப் பேசப்பட்டது[21].

சிலை

தொகு

காற்றில் தனது ஆடை பறக்காமல் இவர் பிடித்துக்கொள்ளும் காட்சி மிகப் பிரபலமானது. அது 1955 இல் வெளியான ‘தி செவன் இயர் இட்ச்’ என்ற படத்தில் வருவதாகும். அதுபோன்ற உலோகச் சிலையை 26 அடி உயரம், 15 டன் எடையில் செவார்ட் ஜான்சன் என்ற சிற்பி வடித்தார். அது, மர்லின் பிறந்த ஊர் அருகே வைக்கப்பட்டுள்ளது.[22]

படத்தொகுப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Hertel, Howard; Heff, Don (August 6, 1962). "Marilyn Monroe Dies; Pills Blamed". Los Angeles Times (Tribune Publishing). http://www.latimes.com/local/obituaries/archives/la-me-marilyn-monroe-19620806-story.html. பார்த்த நாள்: 23 September 2015. 
  2. Chapman 2001, pp. 542–543; Hall 2006, p. 468.
  3. Spoto 2001, pp. 3, 13–14; Banner 2012, p. 13.
  4. Spoto 2001, pp. 9–10; Rollyson 2014, pp. 26–29.
  5. Miracle & Miracle 1994, p. see family tree.
  6. Spoto 2001, pp. 7–9; Banner 2012, p. 19.
  7. Spoto 2001, ப. 7–9.
  8. Churchwell 2004, p. 150, citing Spoto and Summers; Banner 2012, pp. 24–25.
  9. Churchwell 2004, pp. 149–152; Banner 2012, p. 26; Spoto 2001, p. 13.
  10. Spoto 2001, ப. 17, 57.
  11. 11.0 11.1 Spoto 2001, pp. 17–26; Banner 2012, pp. 32–35.
  12. 12.0 12.1 Spoto 2001, pp. 16–17; Churchwell 2004, p. 164; Banner 2012, pp. 22–32.
  13. Banner 2012, ப. 32–33.
  14. Banner 2012, ப. 35.
  15. Spoto 2001, pp. 26–28; Banner 2012, pp. 35–39.
  16. Churchwell 2004, ப. 155–156.
  17. Churchwell 2004, pp. 155–156; Banner 2012, pp. 39–40.
  18. Spoto 2001, pp. 100–101, 106–107, 215–216; Banner 2012, pp. 39–42, 45–47, 62, 72, 91, 205.
  19. "Monroe took 14 retakes for iconic scene". The Hindu. 17 September 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/monroe-took-14-retakes-for-iconic-scene/article6417357.ece. பார்த்த நாள்: 19 September 2014. 
  20. Wolfe, Donald H. The Last Days of Marilyn Monroe. (1998) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0787118079
  21. Engelberg, Morris. DiMaggio, Setting the record straight, page 281, (2003), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7603-1482-9
  22. ராஜலட்சுமி சிவலிங்கம் (1 சூன் 2015). "மர்லின் மன்றோ 10". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2017.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்லின்_மன்றோ&oldid=3590834" இலிருந்து மீள்விக்கப்பட்டது