மருங்கப்பள்ளம் ஔஷதபுரீசுவரர் கோயில்

மருங்கப்பள்ளம் ஔஷதபுரீசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

தொகு

இக்கோயில் பேராவூரணிக்குக் கிழக்கில் 8 கிமீ தொலைவில் குருவிக்கரம்பை அருகில் உள்ளது. ஔஷதபுரி என்றும், மருந்துப்பள்ளம் என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர் தற்போது மருங்கப்பள்ளம் என்றழைக்கப்படுகிறது.[1]

இறைவன், இறைவி

தொகு

அருமருந்துடையார் என்று இறைவனும், அருமருந்து நாயகி என்று இறைவியும் அழைக்கப்படும் பல சிவன் கோயில்கள் உள்ளன. இங்குள்ள இறைவன் மருந்தீசுவரர் என்ற பெயரில் ஔஷதீசுவரர் என்கின்ற வடமொழிப்பெயரைக் கொண்டு காணப்படுகிறார். இறைவி அருமருந்துடைய நாயகி ஆவார். நோய்வாய்ப்பட்டவர்கள் இங்குள்ள குளத்தில் குளித்துவிட்டு இறைவனையும், இறைவியையும் வணங்கி உடல் நலம் குணம் பெறுகின்றனர்.[1]

வரலாறு

தொகு

தஞ்சாவூரை ஆண்ட இரண்டாம் சரபோஜி இக்கோயிலின் பெருமையை அறிந்து மருந்துப்பள்ளம் எனப்பட்ட கிராமத்தை இக்கோயிலுக்குத் தானமாகத் தந்துள்ளார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014