மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு, 2023
உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு, 2023 (2023 Nobel Prize in Physiology or Medicine) கோவிட்-19 தொற்றுக்கு எதிராகப் பயனுள்ள தூதாறனை தடுப்பூசிகளை உருவாக்க உதவும் நியூக்ளியோசைடு அடிப்படை மாற்றங்கள் தொடர்பான கதலின் கரிக்கோ(பிறப்பு 1955) மற்றும் துரூ வைச்சுமேன் (பிறப்பு 1959) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.[2]
மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு The 2023 Nobel Prize in Physiology or Medicine | |
---|---|
தேதி | 2 அக்டோபர் 2023 |
இடம் | ஸ்டாக்ஹோம் |
நாடு | சுவீடன் |
வழங்குபவர் | கரோலின்சுகா நிறுவன நோபல் பேரவை |
தொகுத்து வழங்கினார் | தாமசு பெர்ல்மேன் |
வெகுமதி(கள்) | 11 மில்லியன் சுவீடிய குரோனா (2023)[1] |
முதலில் வழங்கப்பட்டது | 1901 |
இணையதளம் | 2023 Nobel Prize in Physiology or Medicine |
பரிசு பெற்றவர்கள்
தொகுகதலின் கரிக்கோ
தொகுகதலின் கரிக்கோ சனவரி 17, 1955 அன்று அங்கேரியின் சோல்னோக்கில் பிறந்தார்.[3] சஜெட் பல்கலைக்கழகத்தில் கரிக்கோ உயிர்வேதியியலில் 1982ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.[4] 2013 முதல் 2022 வரை, இவர் பயோஎண்டெக் ஆர்.என்.ஏ. மருந்துகள் நிறுவனத்துடன் தொடர்புடையவராக இருந்தார். இந்நிறுவனத்தில், முதலில் துணைத் தலைவராகவும், 2019-ல் மூத்த துணைத் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார். இந்த நிறுவனம் உலக அளவில் தூதாறனை தடுப்பூசிகளை வணிகமயமாக்கியது.
துரூ வைசுமேன்
தொகுதுரூ வைசுமேன் செப்டம்பர் 7, 1959-ல் மாசசூசெட்ஸில் உள்ள லெக்சிங்டனில் பிறந்தார் 1987ஆம் ஆண்டு முனைவர் பட்டத்தினைப் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
முக்கிய வெளியீடுகள்
தொகுகரோலின்ஸ்கா மையத்தின் நோபல் பேரவை கரிக்கோ மற்றும் வைசுமேன் ஆகியோருக்கு 2023 பரிசை வழங்குவதற்கு பின்வரும் ஆய்வு வெளியீடுகள் அடிப்படை காரணங்களாகும்.[5]
- Karikó, K., Buckstein, M., Ni, H. and Weissman, D. Suppression of RNA Recognition by Toll-like Receptors: The impact of nucleoside modification and the evolutionary origin of RNA. Immunity 23, 165–175 (2005).
- Karikó, K., Muramatsu, H., Welsh, F.A., Ludwig, J., Kato, H., Akira, S. and Weissman, D. Incorporation of pseudouridine into mRNA yields superior nonimmunogenic vector with increased translational capacity and biological stability. Mol Ther 16, 1833–1840 (2008).
- Anderson, B.R., Muramatsu, H., Nallagatla, S.R., Bevilacqua, P.C., Sansing, L.H., Weissman, D. and Karikó, K. Incorporation of pseudouridine into mRNA enhances translation by diminishing PKR activation. Nucleic Acids Res. 38, 5884–5892 (2010).
மேற்கோள்கள்
தொகு- ↑ Burger, Ludwig; Pollard, Niklas (2 October 2023). "Nobel Prize for Medicine goes to Kariko and Weissman, pioneers of COVID vaccine". Reuters.com. https://www.reuters.com/business/healthcare-pharmaceuticals/kariko-weissman-win-medicine-nobel-covid-19-vaccine-work-2023-10-02/.
- ↑ . 2023-10-02.
- ↑ "Scientists behind mRNA COVID Vaccines Win 2023 Nobel Prize in Physiology or Medicine". பார்க்கப்பட்ட நாள் 2023-10-03.
- ↑ Hargittai, Istvan; Hargittai, Magdolna (25 May 2021). "Our science and the Covid-19 pandemic—Katalin Karikó's research idea and her perseverance". Structural Chemistry 32 (4): 1353–1356. doi:10.1007/s11224-021-01797-9. பப்மெட்:34054260.
- ↑ Press release: The Nobel Prize in Physiology or Medicine 2023 nobelprize.org