துரூ வைசுமேன்
துரூ வைசுமேன் (Drew Weissman, பிறப்பு: 1959)[1] ஒரு அமெரிக்க மருத்துவர்-அறிவியலாளர் மற்றும் நோபல் பரிசு பெற்றவர் ஆவார். இரைபோ கருவமில உயிரியலில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக மிகவும் பிரபலமானவர். 2023ஆம் ஆண்டில் மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற இவரது பணி, தூதாறனை தடுப்பூசிகளை உருவாக்க உதவியது. இவற்றில் மிகவும் பிரபலமானவை பயோஎன்டெக் /பைசர் மற்றும் மாடர்னாவால் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரசுத்தொற்று-19 இற்கு எதிரான தடுப்பூசிகள் ஆகும்.[2] வெய்சுமேன், தடுப்பூசி ஆராய்ச்சியில் இராபர்ட்சு குழுப் பேராசிரியராகவும், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பெரல்மேன் மருத்துவப் பள்ளியில் மருத்துவப் பேராசிரியராகவும், இரைபோ கருவமில (ஆர்என்ஏ) கண்டுபிடிப்புக்கான பென் நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார். இவரும் இவரது ஆராய்ச்சி சகாவான கேதலின் கரிக்கோவும் மதிப்புமிக்க லசுகர் டீபேகேய் மருத்துவ மருத்துவ ஆராய்ச்சி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளனர். "கோவிட்-19-க்கு எதிராக பயனுள்ள தூதாறனை தடுப்பூசிகளை உருவாக்குவதற்கு உதவும் நியூக்கிளியோசைடு அடிப்படை மாற்றங்கள் தொடர்பான இவர்களின் கண்டுபிடிப்புகளுக்காக கேதலின் கரிக்கோ உடன் இணைந்து 2023ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.[3]
துரூ வைசுமேன் | |
---|---|
பிறப்பு | 1959 (அகவை 64–65) |
படித்த கல்வி நிறுவனங்கள் | பிரான்டீய்சு பல்கலைக்கழகம் (இளங்கலை., முதுகலை) பாஸ்டன் பல்கலைக்கழகம் (நோய் நாடலில் முதுகலைப் பட்டம்., முனைவர் பட்டம்) |
அமைப்பு(கள்) | பெரெல்மான் மருத்துவப் புலம் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | கோவிட்-19 தடுப்பு மருந்துகளில் பயன்படுத்தப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட mஆர்என்ஏ தொழில்நுட்பம் |
பட்டம் | மருத்துவப் பேராசிரியர் |
விருதுகள் | ரோசென்சுடியல் விருது (2020) இலசுகெர்-டீபேகேய் நோய் பரிசோதனையியல் மற்றும் மருத்துவ ஆய்வு விருது]] (2021) வின்ஃபியூச்சர் விருது (2022) உயிர் அறிவியலில் திருப்புமுனைப் பரிசு(2022) ஆர்வே பரிசு (2023 - 2021 ஆம் ஆண்டில் பணிக்காக வழங்கப்பட்டது) மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2023) |
கல்வி மற்றும் பயிற்சி
தொகுவைசுமேன் 1957 செப்டம்பர் 7ஆம் நாள்[1] மாசசூசெட்சின் லெக்சிங்டனில் யூத தந்தை ஒருவருக்கும் இத்தாலிய தாய்க்கு மகனாகப் பிறந்தார்.[4][5] லெக்சிங்டனில் வளர்ந்த இவர்,[6] 1981ஆம் ஆண்டில் பிராண்டீஸ் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். இங்கு இவர் உயிர்வேதியியல் மற்றும் நொதியியலில் தேர்ச்சி பெற்றார். மேலும், இவர் ஜெரால்ட் பாசுமனின் ஆய்வகத்தில் பணியாற்றினார்.[7] இவர் 1987ஆம் ஆண்டில் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் நோயெதிர்ப்பியலில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டத்தைப் பெறுவதற்காக நோயெதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியலில் ஆய்வினை மேற்கொண்டார்.[8] பின்னர், வைசுமேன், பெத் இசுரேல் டீக்கனசு மருத்துவ மையத்தில் பணிபுரிந்தார். இதைத் தொடர்ந்து அப்போதைய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குநரான அந்தோனி பாசியின் மேற்பார்வையில் தேசிய சுகாதார நிறுவனங்களில் ஆய்வினை நிதியுதவியுடன் மேற்கொண்டார்.[9]
பணி
தொகு1997ஆம் ஆண்டில், வைசுமேன் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திற்குச் சென்று இரைபோ கருவமிலம் மற்றும் உள்ளார்ந்த நோயெதிர்ப்பு அமைப்பு உயிரியலில் தனது ஆய்வகத்தைத் தொடங்கினார். இவர் இப்போது இப்பல்கலைக்கழகத்தில் தடுப்பூசி ஆராய்ச்சியில் ராபர்ட்சு குழுமப் பேராசிரியராக உள்ளார்.[10]
பல்கலைக்கழகத்தில், தடுப்பூசிகளைப் படிக்கும் நோயெதிர்ப்பு நிபுணரான வைசுமேன், ஒரு ஒளி நகலெடுக்கும் போது தனது வருங்கால சக ஊழியரும் ஒத்துழைப்பாளருமான கதலின் கரிக்கோவைச் சந்தித்தார். இங்கு இவர்கள் ஆர்என்ஏ ஆராய்ச்சிக்கான நிதி பற்றாக்குறை குறித்து தமது கவலைகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்நேரத்தில், கரிக்கோ பெருமூளை நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றில் இரைபோ கருவமில சிகிச்சையை மேற்கொண்டிருந்தார்.[11] வெய்சுமேன் கரிக்கோவுடன் கூட்டாக ஆய்வினை மேற்கொள்ளத் தொடங்கினார். பின்னர் வைசுமேன் தடுப்பூசிகளுக்கு இரைபோ கருவமில தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் தனது கவனத்தை மாற்றினார். இவர்கள் எதிர்கொண்ட முக்கியத் தடையாக ஆர்.என்.ஏ வினால் உருவாக்கப்பட்ட தேவையற்ற நோயெதிர்ப்பு சக்தி மற்றும் அழற்சி எதிர்வினைகள் அமைந்தன. 2005ஆம் ஆண்டில், இவர்கள் ஒரு முக்கிய ஆய்வு முடிவுகளை வெளியிட்டனர். இது செயற்கையான நியூக்ளியோசைடுகளைப் பயன்படுத்தும் போது ஆர்என்ஏ உடலால் சிதைக்கப்படுவது தடுக்கப்பட்டது குறித்ததாகும்.[12] இந்த முன்னேற்றம் ஆர்என்ஏ சிகிச்சை முறைகளைப் பயன்படுத்துவதற்கான அடித்தளத்தை அமைத்தது. 2006ஆம் ஆண்டில், இவரும் கரிக்கோவும் இணைந்து ஆர்.என். ஏ. ஆரெக்சு (RNARx) நிறுவனத்தினை நிறுவினர். புதுமையான ஆர்என்ஏ சிகிச்சைகளை உருவாக்குவதே இவர்களின் நோக்கமாக இருந்தது. 2020ஆம் ஆண்டில், இவர்களின் மாற்றியமைக்கப்பட்ட ஆர்என்ஏ தொழில்நுட்பமானது பைசர்/பயோஎன்டெக் மற்றும் மாடர்னா கோவிட்-19 தடுப்பூசிகளின் முக்கிய அடிப்படை அங்கமாக மாறியது. இவை கோவிட்-19 தொற்றுநோய்க்கு[13] எதிராக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டன. இன்ஃபுளுவென்சா, அக்கி மற்றும் எச்.ஐ.வி.க்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்க இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும் என்று வைசுமேன் நம்புகிறார்.[6]
தாய்லாந்தின் சுலாலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வாளர்களுடன் வெய்சுமேன் கூட்டாகபபணியாற்றி, கோவிட்-19 தடுப்பூசிகளை உடனடியாகத் தயாரிக்க முடியாத நாடு மற்றும் அருகில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவிவருகிறார்.[2]
அங்கீகாரம்
தொகுஎம்ஆர்என்ஏ தொடர்பான பணிக்காக, வைசுமேன் மற்றும் கரிகோ ஆகியோருக்கு 2023ஆம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு, 2020ஆம் ஆண்டில் ரோசென்ஸ்டீல் விருது,[14] லூயிசா கிராஸ் ஹார்விட்ஸ் பரிசு,[15] அல்பானி மருத்துவ நிறுவனப் பரிசு[16] வழங்கப்பட்டது. இலாசுகர்-திபேக்கி மருத்துவமைய மருத்துவ ஆய்வு விருது,[17] பிபிவிஏ அறக்கட்டளை அறிவின் முன்னோடி விருது[18] ( ராபர்ட் எஸ். லாங்கருடன் கூட) முதலியன வழங்கப்பட்டன.
வைசுமேன் இட்ரெக்சல் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் கௌரவப் பட்டம் பெற்றார்.[6] 2021ஆம் ஆண்டில், "அறிவியல் ஆராய்ச்சி" பிரிவில் இவருக்கு இளவரசி அசுடூரியாசு விருது வழங்கப்பட்டது.[19] மேலும் 2021ஆம் ஆண்டில் இவரும் கரிகோவும் 2022ஆம் ஆண்டிற்கான உயிர் அறிவியலுக்கான திருப்புமுனைப் பரிசு, ஜெஸ்ஸி ஸ்டீவன்சன் கோவலென்கோ பதக்கம்[20] ஜப்பான் விருது[21] முதலியவற்றினைப் பெற்றனர். மேலும் 2022ஆம் ஆண்டில் இராபர்ட் கோர் பரிசினையும் பெற்றார்.[22] உயிரி மருந்து அறிவியலுக்கான தாங் பரிசு, அமெரிக்க சாதனையாளர் அகாதயின் தங்கத் தட்டு விருது,[23] தேசிய மருத்துவ அகாதமியின் உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.[24][25] 2023ஆம் ஆண்டில் இவர் இசுரேலில் உள்ள டெக்னியனின் ஆர்வே பரிசைப் பெற்றார் (2021 ஆம் ஆண்டிற்கான விருது).[26]
தி வாசிங்டன் போஸ்ட்டின் அறிக்கை ஒன்றின்படி, உலகெங்கிலும் உள்ள மக்களிடமிருந்து வைசுமேன் இரசிகளை கொண்டுள்ளார். இவர்கள் எழுதும் கடிதங்கள் பலவற்றினை தினமும் பெறுகிறார். கோவிட் -19 தடுப்பூசியை சாத்தியமாக்கிய இவரது பணிக்கு நன்றி என்று தெரிவித்தும் "நீங்கள் மீண்டும் அரவணைப்பையும் நெருக்கத்தையும் சாத்தியமாக்கிவிட்டீர்கள்" என்று கூறும் கடிதங்களும் பெறப்படுகின்றன. இவரது நிழற்படம் அல்லது கையெழுத்துக்காக நிறைய மக்கள் இவரைத் தொடர்பு கொள்கின்றனர்.[6]
காப்புரிமைகள்
தொகுவைசுமேன் US8278036B2[27] மற்றும் US8748089B2[28] உட்பட பல காப்புரிமைகளுக்கு உரியவர் ஆவார். இவை தடுப்பூசிகள் மற்றும் பிற சிகிச்சைகளுக்கு ஆர்என்ஏவை ஏற்றதாக மாற்றுவதற்குத் தேவையான மாற்றங்களை விவரிக்கிறது. இந்த காப்புரிமைகள் செல்ஸ்கிரிப்ட்டின் நிறுவனர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர் கேரி டால் என்பவரின் பேரில் உரிமம் வழங்கப்பட்டது. பின்னர் இவர் இத்தொழில்நுட்பத்தை மாடர்னா மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகளில் பயன்படுத்த உரிமம் வழங்கினார்.[29]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Drew Weissman". nobelprize.org. October 2, 2023. பார்க்கப்பட்ட நாள் October 2, 2023.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ 2.0 2.1 "This Philly Scientist's Technology Helped Make the Pfizer COVID-19 Vaccine Possible". November 12, 2020. Archived from the original on November 13, 2020.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2023". பார்க்கப்பட்ட நாள் 2023-10-02.
- ↑ "Drew Weissman, Katalin Karikó win Nobel in medicine for enabling mRNA COVID vaccines". www.timesofisrael.com.
- ↑ "Jewish American scientist wins Nobel Prize in Medicine for COVID vaccine". The Jerusalem Post | JPost.com. October 2, 2023.
- ↑ 6.0 6.1 6.2 6.3 Johnson, Carolyn Y. (October 1, 2021). "A scientific hunch. Then silence. Until the world needed a lifesaving vaccine.". The Washington Post. https://www.washingtonpost.com/science/2021/10/01/drew-weissman-mrna-vaccine/.
- ↑ "The Brandeis alum whose research may lead to a COVID-19 vaccine". BrandeisNOW (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் January 8, 2021.
- ↑ "Drew Weissman | Faculty | About Us | Perelman School of Medicine | Perelman School of Medicine at the University of Pennsylvania". www.med.upenn.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் January 8, 2021.
- ↑ Johnson, Carolyn Y.. "A gamble pays off in 'spectacular success': How the leading coronavirus vaccines made it to the finish line" (in en-US). Washington Post. https://www.washingtonpost.com/health/2020/12/06/covid-vaccine-messenger-rna/.
- ↑ "Drew Weissman, MD, PhD profile". பார்க்கப்பட்ட நாள் January 8, 2021.
- ↑ "Drew Weissman, l'architecte des vaccins contre le Covid-19". LEFIGARO (in பிரெஞ்சு). December 24, 2020. பார்க்கப்பட்ட நாள் January 8, 2021.
- ↑ Katalin Karikó; Michael Buckstein; Houping Ni; Drew Weissman (August 2005). "Suppression of RNA recognition by Toll-like receptors: the impact of nucleoside modification and the evolutionary origin of RNA". Immunity. 23 (2): 165–75. doi:10.1016/J.IMMUNI.2005.06.008. ISSN 1074-7613. PMID 16111635. Wikidata Q24316383.
- ↑ "Understanding mRNA COVID-19 Vaccines". Center for Disease Control and Prevention. March 4, 2021. பார்க்கப்பட்ட நாள் October 2, 2021.
- ↑ "Lewis S. Rosenstiel Award for Distinguished Work in Basic Medical Research" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் January 23, 2021.
- ↑ "The Louisa Gross Horwitz Prize". பார்க்கப்பட்ட நாள் December 13, 2021.
- ↑ Albany Medical Center Prize 2021
- ↑ "Modified mRNA vaccines". பார்க்கப்பட்ட நாள் December 13, 2021.
- ↑ BBVA Foundation Frontiers of Knowledge Awards 2021
- ↑ IT, Developed with webControl CMS by Intermark. "Katalin Karikó, Drew Weissman, Philip Felgner, Uğur Şahin, Özlem Türeci, Derrick Rossi and Sarah Gilbert – Laureates – Princess of Asturias Awards". The Princess of Asturias Foundation. பார்க்கப்பட்ட நாள் December 13, 2021.
- ↑ "Jessie Stevenson Kovalenko Medal". www.nasonline.org.
- ↑ "The Japan Prize Foundation". The Japan Prize Foundation.
- ↑ Robert Koch Prize 2022
- ↑ "Golden Plate Awardees of the American Academy of Achievement".
- ↑ Tang Prize 2022
- ↑ "Awards and Accolades".
- ↑ Harvey Prize 2021
- ↑ "Espacenet – search results". worldwide.espacenet.com. Archived from the original on ஜூன் 16, 2023. பார்க்கப்பட்ட நாள் January 8, 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Espacenet – search results". worldwide.espacenet.com. Archived from the original on ஜூன் 16, 2023. பார்க்கப்பட்ட நாள் January 8, 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Elie Dolgin (June 1, 2015). "Business: The billion-dollar biotech". Nature. 522 (7554): 26–28. Bibcode:2015Natur.522...26D. doi:10.1038/522026A. ISSN 1476-4687. PMID 26040878. S2CID 4450181. Wikidata Q85290452.
வெளி இணைப்புகள்
தொகு- துரூ வைசுமேன் on Nobelprize.org