கொரோனாவைரசுத் தொற்று 2019 தடுப்பூசி ஆய்வு

கோவிட்-19 தடுப்பூசி 2019–20 கொரோனாவைரசுத் தொற்று இதுவரை கண்டுபிடிக்ப்படவில்லை ஆனால் தடுப்பூசி உருவாக்க பல முயற்சிகள் வேகமாக நடந்து வருகின்றன.[1]

தடுப்பூசிக்கு ஒப்புதல் கொடுத்த நாடுகளின் வரைபடம்
  பொது பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது, பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுதல் நடந்து வருகிறது
  EUA ஒப்புதல் அளிக்கப்பட்டது, பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுதல் நடந்து வருகிறது
  EUA ஒப்புதல் அளிக்கப்பட்டது, குறைந்தபட்டச தடுப்பூசிகளுக்கு மட்டும்
  பொது பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது
  EUAஒப்புதல் அளிக்கப்பட்டது, பொதுமக்களுக்கு தடுப்பூசிக்கான திட்டமிடுதல்
  EUA நிலுவையில் உள்ளது

முந்தைய கொரோனா வைரசுத் தடுப்பூசி முயற்சிகள் தொகு

இதுவரை பல தடுப்பூசிகள் பறவைகளில் இருந்தும் விலங்குகளினால் ஏற்படும் கோராேனா வைரசுத் தடுப்பூசிள் இருக்கின்றன. [2]

மனிதர்களைப் பாதிக்கும் கொரோனவிரிடே (Coronaviridae) வைரசுகளுக்கான தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான முந்தைய முயற்சிகள் தீவிர கடிய மூச்சியக்க கூட்டறிகுறி (Severe acute respiratory syndrome என்பதன் ஆங்கிலச் சுருக்கம் சார்சு) மற்றும் அரபுநாடுகளில் அறியப்பட்ட சுவாச நோய்க்குறி (MERS) [3] மற்றும் சார்சு [4] க்கு எதிரான தடுப்பூசிகள் மனிதரல்லாத விலங்கு மாதிரிகளில் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, சார்சுக்கு முழுமையாக குணமடைய செய்யும் அல்லது பாதுகாப்பு தடுப்பூசியும் இல்லை. அனால் மனிதர்களுக்கு பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. [5] [6]

2020 முயற்சிகள் தொகு

சார்சு SARS-CoV-2 2019 ஆண்டின் இறுதியில் கோவிட்-19 என்று பெயரிடப்பட்டது. [7] 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் மிகப்பெரிய தொற்றுநோயாக பரவியது. அதன் காரணமாக தடுப்பூசியை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கோவிட்-19 கொரோனாவைரசுத் தொற்று 2019 தடுப்பூசிகளை உருவாக்க பல நிறுவனங்கள் சுமார் 35 நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன, மார்ச் 2020 நிலவரப்படி சுமார் 300 மருத்துவ ஆய்வுகள் நடந்து வருகின்றன. கோவிஷீல்டு, கொரோனாவேக், சைனோபார்மின் 2 தடுப்பூசிகள், மார்டர்னா-1273, பிஎன்டி162பி2 ஆகிய தடுப்பூசிகள் மூன்றாவது கட்ட சோதனையில் இருக்கின்றன. இந்தத் தடுப்பூசிகள் வெற்றிகரமாக 2கட்டம் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியும் டி செல்களும் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் பேருக்கு செலுத்தி சோதிக்கிற மூன்றாம் கட்ட சோதனையும் வெற்றி கண்டுவிட்டால் போதும் கொரோனா வைரஸ் தொற்றை விரட்டியடிக்கும் நிலைக்கு நெருங்கி விட்டதாக பொருள் [8]

மருத்துவ பரிசோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன தொகு

முன்கூட்டிய ஆராய்ச்சிகள் தொகு

மரபணு வரிசைகள் பகுப்பாய்வு தொகு

கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி முயற்சியில் 'பிரண்டியர்ஸ் இன் மைக்ரோபயாஜி' பத்திரிக்கையில் வெளியாகியுள்ள தகவல்:- உலகமெங்கும் இருந்து பல்வேறு பரிசோதனைக் கூடங்களில் பிரித்தெடுக்கப்பட்ட 48 ஆயிரத்து 635 கொரோனா வைரஸ் மரபணு வரிசைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. உலகின் அனைத்து கண்டங்களுக்கும் பயணித்து பரவியுள்ள இந்த வைரஸ் மாற்றங்களை இத்தாலி நாட்டில் உள்ள போலோக்னா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வரைபடமாக்கியுள்ளனர். இதுபற்றி அந்த விஞ்ஞானிகள் கூறும்போது தங்களது பகுப்பாய்வில் இந்த கொரோனா வைரஸ்கள் சிறிய மாற்றம் அடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. ஒரு மாதிரியில் 7 மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுவான காய்ச்சல் இரு மடங்குக்கும் அதிகமாகிற மாறுபடுகின்ற விகிதத்தை கொண்டுள்ளன என்று அந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். போலோக்னா பல்கலைக்கழக பேராசிரியர் பெடரிகோ ஜியோர்கி இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் கொரோனா வைரஸ் ஏற்கனவே மனிதர்களை பாதிக்கும் வகையில் உகந்ததாக உள்ளது. மேலும் இது அதன் குறைந்த பரிணாம மாற்றத்தை கொண்டிருக்கிறது. இதன் அர்த்தம் கொரோனா வைரஸ்க்கு எதிராக உருவாக்குகிற தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகள் அனைத்து கொரோனா வைரஸ் திரிபுகளுக்கும் எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் [9]

சில நிறுவனங்களின் பெயர்கள் தொகு

உலகின் முதல் கோவிட்-19 தடுப்பூசி தொகு

12 ஆகத்து 2020 அன்று உலகின் முதல் கோவிட்-19 தடுப்பூசியை உருசியா கண்டுபிடித்து பதிவு செய்ததாக தெரிவித்துள்ளது. முதல் தடுப்பூசியை உருசியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கமலேயா ஆராய்ச்சி நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. [18]

வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள் தொகு

சமூக வலைதளங்களில் கோவிட்-19 2019–20 கொரோனாவைரசுத் தொற்று தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடித்ததாகவும் அது மருந்துகள் கிடைப்பதாகவும் பதிவுகள் செய்யப்படுகிறது. [19] [20]

மேற்கோள்கள் தொகு

 1. Grenfell, Rob; Drew, Trevor (17 February 2020). "Here's Why It's Taking So Long to Develop a Vaccine for the New Coronavirus". ScienceAlert. 28 February 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 February 2020 அன்று பார்க்கப்பட்டது.
 2. Cavanagh, Dave (2003). "Severe acute respiratory syndrome vaccine development: Experiences of vaccination against avian infectious bronchitis coronavirus". Avian Pathology 32 (6): 567–582. doi:10.1080/03079450310001621198. பப்மெட்:14676007. 
 3. Gao, Wentao; Tamin, Azaibi; Soloff, Adam; d'Aiuto, Leonardo; Nwanegbo, Edward; Robbins, Paul D.; Bellini, William J.; Barratt-Boyes, Simon et al. (2003). "Effects of a SARS-associated coronavirus vaccine in monkeys". The Lancet 362 (9399): 1895–1896. doi:10.1016/S0140-6736(03)14962-8. பப்மெட்:14667748. 
 4. Kim, Eun; Okada, Kaori; Kenniston, Tom; Raj, V. Stalin; Alhajri, Mohd M.; Farag, Elmoubasher A.B.A.; Alhajri, Farhoud; Osterhaus, Albert D.M.E. et al. (2014). "Immunogenicity of an adenoviral-based Middle East Respiratory Syndrome coronavirus vaccine in BALB/C mice". Vaccine 32 (45): 5975–5982. doi:10.1016/j.vaccine.2014.08.058. பப்மெட்:25192975. 
 5. Jiang, Shibo; Lu, Lu; Du, Lanying (2013). "Development of SARS vaccines and therapeutics is still needed". Future Virology 8 (1): 1–2. doi:10.2217/fvl.12.126. 
 6. "SARS (severe acute respiratory syndrome)". National Health Service. 5 March 2020. 9 March 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 31 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
 7. Fauci, Anthony S.; Lane, H. Clifford; Redfield, Robert R. (28 February 2020). "Covid-19 — Navigating the Uncharted". New England Journal of Medicine. doi:10.1056/nejme2002387. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-4793. https://www.nejm.org/doi/full/10.1056/NEJMe2002387. 
 8. தினத்தந்தி செய்தி- 5.8.2020- ஈரோடு பதிப்பு-பக்கம் 6
 9. தினத்தந்தி செய்தி- 5.8.2020- பக்கம் 6 - ஈரோடு பதிப்பு
 10. Devlin, Hannah (24 January 2020). "Lessons from SARS outbreak help in race for coronavirus vaccine". தி கார்டியன். https://www.theguardian.com/science/2020/jan/24/lessons-from-sars-outbreak-help-in-race-for-coronavirus-vaccine. 
 11. "Saskatchewan lab joins global effort to develop coronavirus vaccine". 24 January 2020. https://www.cbc.ca/news/canada/saskatchewan/vido-intervac-working-on-coronavirus-vaccine-1.5439118. 
 12. Vescera, Zak (6 March 2020). "U of S team gets federal dollars to develop COVID-19 vaccine". Saskatoon StarPhoenix. https://thestarphoenix.com/news/local-news/u-of-s-team-gets-federal-dollars-to-develop-covid-19-vaccine. 
 13. Jeong-ho, Lee (26 January 2020). "Chinese scientists race to develop vaccine as coronavirus death toll jumps". South China Morning Post. https://www.scmp.com/news/china/society/article/3047676/number-coronavirus-cases-china-doubles-spread-rate-accelerates. 
 14. Cheung, Elizabeth (28 January 2020). "Hong Kong researchers have developed coronavirus vaccine, expert reveals". South China Morning Post. https://www.scmp.com/news/hong-kong/health-environment/article/3047956/china-coronavirus-hong-kong-researchers-have. 
 15. Ross Lydall (February 7, 2020). "Two groups of British scientists in race to develop coronavirus vaccine". Evening Standard. March 19, 2020 அன்று பார்க்கப்பட்டது.
 16. Chen, Eli (5 March 2020). "Wash U Scientists Are Developing A Coronavirus Vaccine". news.stlpublicradio.org (ஆங்கிலம்). 19 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
 17. "KU-forskere får EU-bevilling til vaccine mod coronavirus" (டேனிஷ்). University of Copenhagen. 6 March 2020. 19 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
 18. "உலகின் முதல் கோவிட்-19 தடுப்பூசி: அசுர வேகத்தில் ரஷ்யா!". தமிழ் சமயம். 8 August 2020. 14 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
 19. Kertscher, Tom (23 சனவரி 2020). "இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை". url-status=live. 7 February 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 பிப்ரவரி 2020 அன்று பார்க்கப்பட்டது. Missing pipe in: |website= (உதவி)
 20. McDonald, Jessica (24 January 2020). "Social Media Posts Spread Bogus Coronavirus Conspiracy Theory". FactCheck.org. Annenberg Public Policy Center. 6 February 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 8 February 2020 அன்று பார்க்கப்பட்டது.