அல்பானி மருத்துவ நிறுவனப் பரிசு

மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சிக்கான அல்பானி மருத்துவ நிறுவனப் பரிசு[1] (Albany Medical Center Prize in Medicine and Biomedical Research) என்பது மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியில் அமெரிக்காவின் இரண்டாவது மிக உயர்ந்த மதிப்புள்ள பரிசாகும். இது அல்பானி மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள மருத்துவத்திற்கான பரிசுகளில், அல்பானி மருத்துவ நிறுவனப் பரிசு நான்காவது மிகவும் உயரிய விருதாகும் (உயிர் அறிவியலுக்கான $3 மில்லியன் திருப்புமுனை பரிசு, மருத்துவத்திற்கான $1.2 மில்லியன் நோபல் பரிசு மற்றும் வாழ்க்கை அறிவியல் மற்றும் மருத்துவத்திற்கான $1 மில்லியன் ஷா பரிசுக்குப் பிறகு).[2]

இந்தப் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படும். இதன் மதிப்பு $500,000 டாலர் ஆகும். இந்தப் பரிசு மருத்துவர் அல்லது விஞ்ஞானி அல்லது குழுவிற்கு வழங்கப்படுகிறது. இவர்களின் மேம்பட்ட நோயாளி பராமரிப்பு, மருத்துவ சுகாதார பராமரிப்பு மற்றும் மருத்துவ ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்குப் பங்காற்றியவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது.

இந்தப் பரிசு இதன் நிறுவனர், மறைந்த மோரிசு "மார்டி" சில்வர்மேனின் சிறப்பு திட்டமாகும். மார்ச் 2001-ல் அல்பானி, நியூயார்கில் நடந்த தொடக்க விருது வழங்கும் விழாவில், சில்வர்மேன் பாரம்பரியமாக மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றித் தொடங்கிவைத்தார். இப்பரிசு காலம் காலமாக நூறு ஆண்டுகளாகத் தொடர வேண்டும் என்பது இவரின் விருப்பம். ஒவ்வொரு வருடமும் மெழுகுவர்த்தியை ஏற்றி விருது பெறுபவரைக் கௌரவிப்பதாக சில்வர்மேனின் வாக்குறுதி இருந்தது.

பரிசு பெற்றவர்கள் தொகு

2021: பத்திரிகை வெளியீடு [3]

  • பார்னி கிரஹாம்
  • கடலின் கரிகோ
  • ட்ரூ வைஸ்மேன்

2020:

  • விருது வழங்கப்படவில்லை

2019: பத்திரிகை வெளியீடு

  • பெர்ட் வோகெல்ஸ்டீன்
  • இர்விங் வெய்ஸ்மேன்

2018: பத்திரிகை வெளியீடு

2017: பத்திரிகை வெளியீடு

2016: பத்திரிகை வெளியீடு

  • எஃப். உல்ரிச் ஹார்ட்ல்
  • ஆர்தர் எல். ஹார்விச்
  • சூசன் எல். லிண்ட்கிஸ்ட்

2015: பத்திரிகை வெளியீடு

  • கார்ல் டீசரோத்
  • சியோலியாங் சியே

2014: பத்திரிகை வெளியீடு

  • அலெக்சாண்டர் வர்ஷவ்ஸ்கி

2013: பத்திரிகை வெளியீடு

  • பிரையன் ஜே. ட்ரூக்கர்
  • பீட்டர் சி. நோவெல்
  • ஜேனட் டி. ரௌலி

2012: பத்திரிகை வெளியீடு

  • ஜேம்சு ஈ. டார்னெல் இளையோர்
  • ராபர்ட் ஜி. ரோடர்

2011: பத்திரிகை வெளியீடு

2010: பத்திரிகை வெளியீடு

  • டேவிட் போட்ஸ்டீன்
  • பிரான்சிஸ் எஸ். காலின்ஸ்
  • எரிக் எஸ். லேண்டர்

2009: பத்திரிகை வெளியீடு

2008: பத்திரிகை வெளியீடு

2007: பத்திரிகை வெளியீடு

2006: பத்திரிகை வெளியீடு

  • சீமோர் பென்சர்

2005: பத்திரிகை வெளியீடு

  • இராபர்ட் எஸ். லாங்கர்

2004:

  • ஸ்டான்லி என். கோஹன்
  • ஹெர்பர்ட் டபிள்யூ. போயர்

2003:

  • மைக்கேல் எஸ். பிரவுன்
  • ஜோசப் எல். கோல்ட்ஸ்டைன்

2002:

  • அந்தோனி ஃபாசி

2001:

  • அர்னால்ட் ஜே. லெவின்

மேலும் பார்க்கவும் தொகு

  • மருத்துவ விருதுகளின் பட்டியல்

மேற்கோள்கள் தொகு