எமானுவேல் சார்ப்பெந்தியே

எமானுவேல் மாரி சார்ப்பெந்தியே (Emmanuelle Marie Charpentier, பிறப்பு: 11 திசம்பர் 1968) பிரான்சிய பேராசிரியரும் ஆய்வாளரும் ஆவார். இவர் நுண்ணுயிரியியல், மரபணுவியல், உயிர்வேதியியல் துறைகளில் ஆய்வு செய்பவர்[1]. இவர் 2020 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை பேராசிரியர் செனிபர் தௌதுனா அவர்களுடன் சேர்ந்து மரபணுத்தொகுதியை துல்லியமாக நறுக்கிப்பிணைக்கும் கிரிசிப்பர் (CRISPR/Cas9) நுட்பத்தைக் கண்டுபிடித்தமைக்காக வென்றார்[2]. 2015 முதல் இடாய்ச்சுலாந்தில் பெரிலினில் உள்ள மாக்சு பிளாங்கு கழகத்தின் தொற்று உயிரியல் துறையின் இயக்குனராக உள்ளார். 2018 இல் இவர் நோயூட்டிகள் பற்றிய அறிவியலுக்கான தனித்தியங்கும் ஆய்வுக் கழகம் ஒன்றை மாக்சு பிளாங்கு கழகத்தில் உருவாக்கினார்.[3]

எமானுவேல் சார்ப்பெந்தியே
Emmanuelle Charpentier
பிறப்புஎமானுவேல் மாரி சார்ப்பெந்தியே
11 திசம்பர் 1968 (1968-12-11) (அகவை 56)
சூவிசி-சியூர்-ஓர்சு, பிரான்சு
துறை
பணியிடங்கள்அம்போல்ட் பல்கலைக்கழகம்
உமியோ பல்கலைக்கழகம்
மாக்சு பிளாங்கு குமுகம்
கல்விபியேர், மரீ கியூரி பல்கலைக்க்ழகம் (BSc MSc, DPhil)
பாசுச்சர் கல்விக்கழகம் (முனைவர் பயிற்சி)
ஆய்வேடுAntibiotic resistance in Listeria spp (1995)
ஆய்வு நெறியாளர்பத்திரிசு கூர்வாலின்
அறியப்படுவதுCRISPR[1]
விருதுகள்
  • உயிர் அறிவியலில் சாதனைப் பரிசு (2015)
  • கனடா கைட்னர் பன்னாட்டு விருது (2016)
  • லைப்னீசு பரிசு (2016)
  • Pour le Mérite (2017)
  • சப்பான் பரிசு (2017)
  • மீநுண்ணறிவியலில் காவ்லி பரிசு (2018)
  • மருத்துவத்தில் ஊல்ஃபு பரிசு (2020)
  • வேதியியலுக்கான நோபல் பரிசு (2020)
இணையதளம்
Official website

கல்வி

தொகு

பிரான்சில் 1968 ஆம் ஆண்டு இழுவிசி-சூர்-ஓர்கே (Juvisy-sur-Orge) என்னும் ஊரில், பியேர்-மாரி பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியியல், மரபணுவியல், உயிர்வேதியியல் ஆகியவற்றைப் பற்றிய கல்வியை சார்ப்பெந்தியே பெற்றார் [4] இவர் இலூயி பாசுச்சர் கழகத்தில் 1992 முதல் 1995 வரை மேற்பட்டப்படிப்பு மாணவராக இருந்தார். அஙே ஆய்வுப்பத்தம் பெற்றார். இவருடைய முனைவர்ப்பட்ட ஆய்வுரையில் நுண்ணுயிரி எதிர்ப்பை எதிர்க்கும் வினையில் மூலக்கூற்றியிய செயற்பாடுகளைப் பற்றி ஆய்வுகளைப் பதிவு செய்திருந்தார். [5]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. 1.0 1.1 Abbott, Alison (2016). "The quiet revolutionary: How the co-discovery of CRISPR explosively changed Emmanuelle Charpentier's life". Nature 532 (7600): 432–434. doi:10.1038/532432a. பப்மெட்:27121823. Bibcode: 2016Natur.532..432A. 
  2. "Press release: The Nobel Prize in Chemistry 2020". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 7 October 2020.
  3. "CRISPR discoverer gets own research institute". 19 April 2017. பார்க்கப்பட்ட நாள் 14 December 2018.
  4. "Charpentier, Emmanuelle – Vita". Max Planck Society. பார்க்கப்பட்ட நாள் 3 May 2017.
  5. "Emmanuelle Charpentier". www.mpg.de (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-10.

வெளியிணைப்புகள்

தொகு