புரூஸ் பொய்ட்லர்
புரூஸ் அலன் பொய்ட்லர் (Bruce Alan Beutler, பிறப்பு: டிசம்பர் 29, 1957) அமெரிக்க நோய்த்தடுப்பாற்றல் மருத்துவரும், மரபுவியலரும்[1] ஆவார். இவரும், ரால்ஃப் ஸ்டைன்மனும், சூல்ஸ் ஹொஃப்மனும் இணைந்து 2011 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டனர்[2]. ஒரு நோய்க் கிருமி உடலுக்குள் நுழைந்த பின்னர் அதனை உணர்ந்து நோயெதிர்ப்பு ஆற்றல் எவ்வாறு செயல்பட ஆரம்பிக்கிறது, கிருமியை அழிக்க என்னென்ன முதற்கட்ட நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதை பேராசிரியர்கள் பொய்ட்லரும், ஹொஃப்மனும் கண்டறிந்திருந்தனர். நோபல் பரிசின் மற்றைய பாதி கனடாவைச் சேர்ந்த ரால்ஃப் ஸ்டைன்மன் என்பவருக்கு "புதிய அச்சுறுத்தல்கள் வர வர அவற்றுக்கேற்ப நோய் எதிர்ப்புக் கட்டமைப்பின் ஒரு பிரிவு எப்படி உருமாறிக்கொள்கிறது" என்பதைக் கண்டுபிடித்தமைக்காகக் கொடுக்கப்பட்டது[3].
புரூஸ் பொய்ட்லர் Bruce Beutler | |
---|---|
பிறப்பு | திசம்பர் 29, 1957 சிக்காகோ, இலினோய், ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | நோய்த் தடுப்பாற்றல் |
பணியிடங்கள் | டெக்சாசு பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | சிக்காகோ பல்கலைக்கழகம் |
விருதுகள் | 2011 மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு |
விருதுகள்
தொகு- மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2011)[3]
- ஷா பரிசு (2011)
- பல்சான் பரிசு (2007)
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.jinfo.org/Nobels_Medicine.html.
- ↑ ""Bruce A. Beutler - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ 3.0 3.1 நோபல் நிறுவனம்(3 அக்டோபர் 2011). "Nobel Prize in Physiology or Medicine 2011". செய்திக் குறிப்பு.
வெளி இணைப்புகள்
தொகு- The Bruce Beutler Laboratory பரணிடப்பட்டது 2011-10-05 at the வந்தவழி இயந்திரம் – Official site
- Scientific Publications – All publications of articles by Bruce A. Beutler listed in PubMed.
- How we sense microbes: Genetic dissection of innate immunity in insects and mammals – Brief review of recent work, written with Jules A. Hoffmann.