மரெங்கோ குகை
மரெங்கோ குகை (Marengo cave) ஐக்கிய அமெரிக்காவின் தேசிய இயற்கை அடையாளச் சின்னங்களில் (National Natural Landmark) ஒன்றாகும். இக்குகை இண்டியானா மாநிலத்திலுள்ள மரெங்கோ எனும் ஊரில் அமைந்துள்ளது. இண்டியானாவின் நான்கு காட்சிக் குகைகளுள் ஒன்றான இக்குகையைப் பொதுமக்கள் சுற்றிப் பார்ப்பதற்கு 1883 முதல் அனுமதியளிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு நாட்களிலிருந்தே இதைக் காண பார்வையாளர்கள் வரத் தொடங்கினர். 1984 முதல் அமெரிக்காவின் தேசிய இயற்கை அடையாளச் சின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.[1]
1883 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 தேதியன்று இக்குகை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.[2][3] ஆனால் இது கண்டுபிடிக்கப்பட்ட விதம் மற்றும் தேதி குறித்து மாறுபட்டக் கருத்துகள் உள்ளன. மரெங்கோ குகை அமைந்துள்ள மலைக்காட்டுப்பகுதிக்குள் சென்ற ஒரு சிறுவனும் அவனது சகோதரியும் முதலில் இக்குகையைக் கண்டனர் என்ற கருத்து பொதுவாக வழக்கத்தில் உள்ளது. [4][5][6]
இக்குகை ஆண்டு முழுவதும் பார்வையாளர்களுக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது. இங்கு வழிகாட்டிகளின் துணையோடு இருவகையான நடைப்பயணங்கள் அளிக்கப்படுகின்றன. அவற்றுள் டிரிப்ஸ்டோன் தடப் பயணம், குகையினுள் ஒரு மைல் தொலைவிற்கு, கிட்டத்தட்ட 60–70 நிமிடங்கள் நீடிக்கிறது. கிரிஸ்டல் பேலஸ் பயணம், 35–40 நிமிடங்கள் நீடிக்கிறது. இருவகைப் பயணங்களும் குகையின் வெவ்வேறு பகுதிகளுக்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்கின்றன. குகையின் உட்புறத்தில் பல்விதமான கனிமப்படிவ வடிவுகள் காணப்படுகின்றன.
படத்தொகுப்பு
தொகு-
-
மேற்கோள்கள்
தொகு- ↑ "Marengo Cave". National Park Service. Archived from the original on 2013-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-03-14.
- ↑ Marengo Cavern by H.C. Hovey in Scientific American, Cambridge City Tribune, Cambridge City, Indiana, Thursday, December 27, 1883, Page 4.
- ↑ An early description of Marengo Cave, Annual Report by Indiana Dept. of Geology and Natural Resources, 1897, Volume 21, page 144-149.
- ↑ Marengo Cave National Landmark
- ↑ Hoosier Farmer by Indiana Farm Bureau, issued August, 1919. Marengo Cave (Crawford Co.) discovered and entered by Orris S. Hiestand and sister, 1883.
- ↑ Orris S. Hiestand's Tombstone
வெளி இணைப்புகள்
தொகு- Official website
- showcaves.com - Marengo Cave
- Marengo Cave பரணிடப்பட்டது 2013-03-05 at the வந்தவழி இயந்திரம் National Park Service