மறுசுழற்சிக் கூடை
கணித்தலில், மறுசுழற்சிக் கூடை என்பது, அழிக்கப்பட்ட கோப்புகளைத் தற்காலிகமாகச் சேமிக்க உதவும் இடமாகும். இது ஒரு சிறப்பு அடைவாகும். தவறுதலாக அழிக்கப்பட்ட கோப்புகளையும், அடைவுகளையும், இச்சிறப்பு அடைவானது சேமித்து வைக்கும். இங்குள்ள கோப்புகளையும், அடைவுகளையும் மீளமைக்க இயலும்.
வரலாறு
தொகு1982ஆம் ஆண்டு, ஆப்பிள் லிசா இடைமுகப்பானது, இந்த மறுசுழற்சிக் கூடையை, "வேசுட்டுபேசுகட்" என்ற பெயரில் அறிமுகம் செய்தது. இது மேக் இயங்குதளத்தில் டிராசு என்றழைக்கப்பட்டது.[1] ஒன்பதாம் பதிப்பில் உலகளாவிய ஆங்கில இடத்தகு மாற்றத்தில் இது திரும்பவும், வேசுட்டுபேசுகட் என்ற பெயரை பெற்றது. [2]
ஆப்பிள் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் இலச்சினையைக் காப்புரிமை செய்துள்ளது. இது பிற நிறுவனங்கள் அந்த இலச்சினையைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது.[3] பிற நிறுவனங்கள் மறுசுழற்சிக்கூடையின் வேறு பெயர்களில் இலச்சினையை உருவாக்கி உள்ளன. [4]
எம்எஸ்-டொஸ் இயங்குதளத்தில் இம்மறுசுழற்சி முறை, "டெலிட் சென்ட்ரி" என்ற பெயரில் அறிமுகமானது. அழிக்கப்படும் கோப்புகள் மூல அடைவில் உள்ள "சென்ட்ரி" என்ற அடைவொன்றில் சேமிக்கப்பட்டது.[5][6]] மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போதுள்ள மறுசுழற்சிக் கூடையை வின்டோசு 95 இயங்குதளத்தில் அறிமுகம் செய்தது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Macintosh Stories: Busy Being Born".
- ↑ "GUIdebook > Extras > Trivia".
- ↑ "APPLE COMPUTER, INC. v. பரணிடப்பட்டது 2007-12-14 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Lewis, Peter H. (27 August 1991). "PERSONAL COMPUTERS; Norton Desktop for Windows". The New York Times.
- ↑ "Delete Sentry Automatically Purges Files When Necessary".
- ↑ "Now You Delete It, Now You Don't".
- ↑ "How the Recycle Bin Stores Files".