மறைசுடுவீரன்

நெடுந்தூர இலக்குகளை துல்லியமாக நீள்துப்பாக்கியால் சுடும் திறன்கொண்ட மனிதன்

மறைசுடுதல் என்பது நெடுந்தூர இலக்குகளை மறைந்திருந்து துல்லியமாக நீள்துப்பாக்கியால் சுடும் வல்லமை. மறைசுடுதலில் தேர்ச்சிபெற்ற நபரை 'மறைசுடுநர்'அல்லது குறிசுடுநர் (ஆங்கிலம்: Sniper, Sharpshooter, Marksman) என்று குறிப்பிடுவர்.

இராணுவத்தில், காலட்படையுடன் மறைசுடுவீரர்களை இணைப்பதால், தேவையான மதிப்புமிக்க மனிதஇலக்குகள் மீது துல்லியமாக நெடுந்தூர குண்டெறிவை செயல்படுத்த முடியும். இது காலாட்படையின் ஆதிக்க எல்லையை விரிவுபடுத்தும்.

ஆங்கிலச்சொற்கலான மார்க்சஸ்மேனுக்கும்(Marksman) ஸ்னைபெருக்கும் (sniper) உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால்:

  • மார்க்சஸ்மேன் - இராணுவவீரர்களின் ஓர் அங்கமான மறைசுடுவீரன்.
  • ஸ்னைபெர் - தன்னிச்சையாக செயல்படும் மறைசுடுவீரன்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறைசுடுவீரன்&oldid=3092611" இலிருந்து மீள்விக்கப்பட்டது