குறியாக்கவியல்
மறையீட்டியல், குறியாக்கவியல், மறைப்பியல் அல்லது கமுக்கவியல் (cryptography) என்பது எவ்வாறு தகவலை மறைத்து பரிமாறி, மீட்டெடுப்பது என்பது பற்றியதன் இயல் ஆகும். இவ்வியல் கணிதம், கணினியியல், பொறியியல் துறைகளின் ஒரு கூட்டுத் துறையாக இருக்கிறது. கணினி கடவுச்சொல், இணைய வணிகம், கணினி பாதுகாப்பு, தன்னியக்க வங்கி இயந்திரம் போன்றவை மறையிட்டியலின் பயன்பாடுகளில் அடங்கும்.
சொல் விளக்கம்
தொகுமறையீட்டியல் என்பது ஒரு செய்தியை மறைத்து சங்கேத வார்த்தையாக்கி பிறகு மீண்டும் பழயபடி செய்தியை கொண்டுவரும் முறையாகும். இதனை ஆங்கிலத்தில் encryption மற்றும் decryption என்று அழைப்பர். தகவல் மறைத்த சங்கேத குறியீடுகள் cipher எனப்படும் அவை படிக்கமுடியாதவையாக இருக்கும். இதனை உடைக்கும் முறைக்கு மறையீட்டியல் பகுப்பு அதாவது Cryptanalysis ஆகும்.
வரலாறு
தொகுபண்டைய மறையீட்டியல்
தொகுபண்டையக் காலங்களில்யிருந்தே சங்கேத குறியீடு பகிர்வு மூலமாக மறையீட்டியல் பயன்பட்டு வருகிறது. இவை போர்க்களங்களில் செய்திகளை தனது படைகளுடன் பரிமாறிக்கொள்ள உதவின. இம்முறையை கிரேக்கர்கள் பயன்படுத்தியற்கான சான்றுகள் உள்ளன. சீசர் ரகசிய எழுத்துகள் முறை (Ceaser cipher) மிகவும் எளிதான மறையீட்டியல் முறையாகும். ஆங்கில எழுத்துகளின் வரிசைகளை களைத்து இவை எழுதப்பட்டன. இதன் மூலம் 25 வகையான சொல் வரிசையை அமைக்கமுடியும். உதாரணமாக,
Plaintext(p): the quick brown fox jumps over the lazy dog
Ciphertext(C): WKH TXLFN EURZQ IRA MXPSV RYHU WKH ODCB GRJ
இங்கு சீசர் படிமுறைத்தீர்வு C = p + 3 என்ற முறைப்படி மாற்றப்பட்டுள்ளது.
கணினியின் பங்கு
தொகுகணினி கண்டுபிடிப்புக்கு பிறகு இவற்றின் பயன்பாடு உச்சத்தை அடைந்துள்ளது. இன்று பாதுகாப்பான பண பரிமாற்றம், கணினி தகவல் பரிமாற்றம் மற்றும் இன்னும் பல இவற்றின் முக்கிய பங்களிப்பு. இதனால் மறையீட்டு பொறியியல், கணினி பாதுகாப்பு பொறியியல் என புதிய கல்வி முறைகள் உருவாகியுள்ளன
நவீன மறையீட்டியல்
தொகுநவீன மறையீட்டியலில் கணினியின் பங்கு மிகப்பெரியது. இன்று எழுத்துகளுக்கு பதிலாக பைனரி கோடுகளை (0,1) பயன்படுத்தபடுகிறது. அது அவற்றின் நீளத்தை பொறுத்து 32 பிட், 56 பிட், 128 பிட் மற்றும் 168 பிட்டுகளாக கமுக்கம் செய்யப்படுகிறது. அவற்றை பகுப்பது சிரமம் என்றாலும் கணினி ஹக்கெர்கள் சில மென்பொருட்களை பயன்படுத்தி பொது மறையீட்டியல் படிமுறைத் தீர்வு மூலம் உடைத்து பிரித்துவிடுகின்றனர்.
வெளியிணைப்புகள்
தொகு- Cryptography and Network Security – Prins and Pract. 5th ed – W. Stallings (Pearson, 2011) BBS
- NSA's CryptoKids பரணிடப்பட்டது 2006-03-05 at the வந்தவழி இயந்திரம்.
- Overview and Applications of Cryptology பரணிடப்பட்டது 2014-04-03 at the வந்தவழி இயந்திரம் by the CrypTool Team; PDF; 3.8 MB—July 2008
- Introduction to Modern Cryptography – J. Katz, Y. Lindell (Chapman and Hall, 2008) WW