மறைவான கிறிஸ்தவம்

மறைவான கிறிஸ்தவம் என்பது கிறித்துவ மக்களின் ஒரு இரகசிய நடைமுறை ஆகும். மற்ற மதங்களின் ஆட்சியாளர்கள் அல்லது சமூகம் கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தபோது இந்த நடைமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. கிரிப்டோ கிறிஸ்தவர்கள் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக இருக்கும்போது, அவர்கள் அந்த நாட்டின் கடவுளை ஏற்றுக்கொண்டு, மனதளவிலும், இரகசியமாகவும் கிறித்துவத்தை கடைபிடிக்கின்றனர். அந்நாட்டில் கிறித்தவர்கள் எண்ணிக்கையில் அதிகமாகும்போது, வெளிப்படையாக கிறிஸ்தவத்தை அறிவிக்கத் தொடங்குகிறார்கள்.

வரலாறு

தொகு

இரகசிய கிறிஸ்தவத்தின் ஆரம்ப எடுத்துக்காட்டுகள் ரோமானியப் பேரரசில் காணப்படுகின்றன. கிறிஸ்தவம் முதலில் ரோமில் காலடி எடுத்து வைத்தது. ரோமானிய பேரரசர் டிராஜன் உடனடியாக கிறிஸ்தவத்தை ரோமன் கலாச்சாரத்திற்கு அச்சுறுத்தலாகக் கண்டார். எனவே கிறிஸ்தவர்களாக மாறிய அனைத்து ரோமானியர்களும் கிறிஸ்தவத்தை கைவிடாவிட்டால் மரண தண்டனையை எதிர்கொள்ளவும் கட்டளையிட்டார். ரோமன் கிறிஸ்தவர்கள் மரண தண்டனையைத் தவிர்ப்பதற்காக கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறுவது போல் நடித்தனர். அவர்கள் ரோமானிய தெய்வங்களை மேல் எழுந்த வாரியாக வழிபட்டாலும்ம், மனதில் உள்ளே இருந்து கிறிஸ்தவத்தை நம்பினர். பின்னர் இரகசிய-கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை ரோமானிய சமயத்தினரை விட அதிகமாக இருந்த போது, அவர்கள் ரோமானிய கடவுள்களையும் தெய்வங்களையும் அவமதிக்கத் தொடங்கினர்.[1]

புனித சேவியர் 1550-இல் ஜப்பானிய மக்களை மதம் மாறுவதற்காக ஜப்பானுக்குச் சென்று பல ஆயிரம் ஜப்பானியர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினார். 1643 ஆம் ஆண்டில், ஜப்பானிய அரசர் ஷோகன் கிறித்துவத்தை பரப்புவது, ஜப்பானின் சமூக ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாகக் கருதினார். இதனால் ஜப்பானில் கிறித்துவ தேவாலயங்கள் இடிக்கப்பட்டது. இயேசு-மேரியின் சிலைகள் அகற்றப்பட்டது. விவிலியம் உட்பட கிறிஸ்தவத்தின் பல புத்தகங்கள் வெளிப்படையாக எரிக்கப்பட்டன. கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய அனைத்து ஜப்பானியர்களும் துன்புறுத்தப்பட்டனர். கிறிஸ்துவத்திலிருந்து மீண்டும் புத்த மதத்திற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மறுத்தவர்களின் தலைகள் வெட்டப்பட்டன. பல கிறிஸ்தவர்கள் புத்த மதத்திற்குத் திரும்பினாலும், மனதளவிலும், வீட்டிலும் இரகசியமாக கிறித்துவத்தை பின்பற்றி வாழ்ந்தனர். ஜப்பானில் இந்த ரகசிய கிறிஸ்தவர்கள் காகுரே கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர். காகுரே கிறிஸ்தவர்கள் புத்த மதத்திற்கு பயந்து கிறிஸ்தவம் தொடர்பான எந்த புத்தகங்களையும் வைத்திருப்பதை நிறுத்தினர். இயேசு மற்றும் மேரியை வணங்க, அவர்கள் இரகசிய பிரார்த்தனையை உருவாக்கினார். அது பௌத்த மந்திரங்கள் போல் இருந்தது. ஆனால் அதில் விவிலியம் சொற்கள் இருந்தது. இந்த கிறிஸ்தவ பிரார்த்தனைகள் காகுரே-கிறிஸ்தவர்களால் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு வாய்-காது வழியாக அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டது. அவர்கள் கௌதம புத்தர் போன்ற ஒரு சிலையை வணங்கினார்கள். ஆனால் அது உண்மையில் அன்னை மரியாளின் சிலையாகும். 1550 முதல் அடுத்த 400 ஆண்டுகள் வரை, கக்குரே கிறிஸ்தவர்கள் பௌத்தததின் உருமறைப்பின் கீழ் வாழ்ந்தனர். 20-ஆம் நூற்றாண்டில், ஜப்பான் தொழில்மயமாக்கலை நோக்கிச் சென்றபோது, பௌத்த மத அடிப்படைவாதம் வீழ்ச்சியடைந்தது. இதனால் இந்த காகுரே இரகசியக் கிறிஸ்தவர்கள் புத்த மதத்தின் முகமூடிக்கு வெளியே வந்து, தங்களின் கிறிஸ்தவ அடையாளத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.

பிற நாடுகளில்

தொகு

பால்கன்[2][3] மற்றும் அனத்தோலியா, மத்திய கிழக்கு, சோவியத் ரஷ்யா, சீனா, நாஜி ஜெர்மனி உட்பட இந்தியாவிலும் ஏராளமான இரகசியக் கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர். இரகசியக் கிறிஸ்தவர்களை செர்பியாவில் ட்ரோவ்ட்ஸ்வோ என்றும், சைப்ரஸில் பாட்ஸ்லோய் என்றும், அல்பேனியாவில் லாராம்னோய் என்றும், லெபனானில் கிரிப்டோ மரோனைட்ஸ் என்றும் மற்றும் எகிப்தில் கிரிப்டோ கோப்ட்ஸ் என்று அழைக்கப்பட்டனர்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறைவான_கிறிஸ்தவம்&oldid=3905117" இலிருந்து மீள்விக்கப்பட்டது