மலபார் கழுத்துப்பட்டை மீன்கொத்தி

பறவை துணையினம்

மலபார் கழுத்துப்பட்டை மீன்கொத்தி அல்லது மலபார் வெள்ளை கழுத்துப்பட்டை மீன்கொத்தி (அறிவியல் பெயர்: Todiramphus chloris vidali) என்பது கழுத்துப்பட்டை மீன்கொத்தியின் ஒரு துணையினம் ஆகும்.[1] [2] இது மேற்கு இந்தியாவின் இரத்தினகிரி முதல் கேரளம் வரை காணப்படுகிறது.

விளக்கம் தொகு

மைனா அளவுள்ள மலபார் கழுத்துப்பட்டை மீன்கொத்தியானது சுமார் 30 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு முனை கருப்பாகவும் அடிப்பாகம் வெளிர் மஞ்சளாகவும் இருக்கும். விழிபடலம் ஆழ்ந்த பழுப்பு நிறத்திலும், கால்கள் சிலேட் கறுப்பு நிறத்திலும் இருக்கும். உச்சந்தலை, பிடரி, தலைப்பக்கங்கள் ஆகியன நீலங்கலந்த பசுமை நிறத்தில் இருக்கும். கழுத்தின் பக்கங்களும் கழுத்தின் மேல் பகுதியில் ஒரு பெரிய வெண்பட்டை இருக்கும். மேல் முதுகு பசுமை கலந்த நீல நிறமாகவும், கீழ் முதுகு, பிட்டம், வால் மேல் இறகுகள் ஆகியன நல்ல நீல நிறத்திலும் இருக்கும். வால் பசுமை தோய்ந்த கரு நீல நிறத்திலும், உடலின் அடிப்பகுதி வெண்மையாகவும் இருக்கும்.[3]

வாழிடம் தொகு

இது இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இரத்தினகிரி முதல் கேரளம் வரை காணப்படுகிறது. [4]

மேற்கோள்கள் தொகு

  1. "Collared Kingfisher (Todiramphus chloris)". Internet Bird Collection (HBW 6, p.219). Lynx Editions. பார்க்கப்பட்ட நாள் 2012-06-03.
  2. D. Donsker, ed. (2020). "IOC World Bird List (v 10.1)". doi:10.14344/IOC.ML.10.1. பார்க்கப்பட்ட நாள் 2020-07-06. {{cite web}}: Missing |editor1= (help)
  3. க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 301. 
  4. Woodall, P. F. (2020).