மலபார் பொன்முதுகு மூன்று விரல் மரங்கொத்தி

பறவை துணையினம்

மலபார் பொன்முதுகு மூன்று விரல் மரங்கொத்தி (அறிவியல் பெயர்: Dinopium javanense malabaricum) என்பது மேற்கத்திய பொன்முதுகு மரங்கொத்தியின் துணையினம் ஆகும்.[1] இப்பறவை தென்னிந்தியாவின் மேற்குப் பகுதிகளில் கேரளத்திலும், கருநாடகத்திலும் காணப்படுகிறது.[2]

விளக்கம்

தொகு

மலபார் பொன்முதுகு மூன்று விரல் மரங்கொத்தியானது மைனாவை விடச் சற்றுப் பெரியதாக சுமார் 28 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு சிலேட் பழுப்பு நிறத்திலும், விழிப்படலம் சிவந்த பழுப்பு நிறத்திலும், கால்கள் சாம்பல் தோய்ந்த பச்சை நிறத்திலும் இருக்கும். பெண் பறவைகளின் உச்சந்தலையும் கொண்டையும் கறுப்பு நிறத்தில் இருக்கும். பொதுவாக பொன்முதுகு மரங்கொத்தியை ஒத்த தோற்றம் கொண்ட மலபார் பொன்முதுகு மூன்று விரல் மரங்கொத்தியின் முதுகின் பொன்மஞ்சள் நிறத்தில் ஆழ்ந்த சிவப்புத் தோய்ந்திருக்கக் காணலாம். இதன் கீழ்முதுகும் பிட்டமும் ஆழ்ந்த சிவப்பாக இருக்கும். ஆனால் பொன்முதுகு மரங்கொத்தியின் கீழ்முதுகும் பிட்டமும் கறுப்பாக வேறுபட்டு இருக்கும்.[3]

இதன் பழக்கவழகங்களும் இனப்பெருக்கமும் பொன்முதுகு மரங்கொத்திக்கு உரியதைப் போலவே இருக்கும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Woodpeckers – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
  2. Winkler, Hans; Christie, David (2020-03-04), "Common Flameback (Dinopium javanense)", Birds of the World, Cornell Lab of Ornithology, பார்க்கப்பட்ட நாள் 2021-11-12
  3. 3.0 3.1 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 325–326.