பொன்முதுகு மரங்கொத்தி

மரங்கொத்தி சிற்றினம்
பொன்முதுகு மரங்கொத்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. benghalense
இருசொற் பெயரீடு
Dinopium benghalense
(லின்னேயஸ், 1758)
வேறு பெயர்கள்
  • Picus benghalensis Linnaeus, 1758
  • Brachypternus benghalensis (Linnaeus, 1758)
  • Brachypternus aurantius

பொன்முதுகு மரங்கொத்தி (Black-rumped flameback, lesser golden-backed woodpecker, Dinopium benghalense) இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாகக் காணப்படும் பறவை.[2] இது மரங்கொத்தி குடும்பத்தைச் சேர்ந்தது. நகர்ப்புறங்களில் காணப்படும் ஒரு சில மரங்கொத்திகளில் இதுவும் ஒன்று. தனித்துவமான ஓசையெழுப்பும் இப்பறவை அசைந்து அசைந்து பறக்கும் தன்மையுடைது. கருப்பு நிற கழுத்தும், பிட்டமும் கொண்டது.

இந்தியாவின் கல்கத்தா அருகில் எடுக்கப்பட்ட படம்

மரங்களில் செங்குத்தாக ஏறும் தகவமைப்பைப் பெற்றுள்ள ஒரே பறவை இதுவாகும். இப்பறவை பட்டுப்போன மரங்களிலிருந்து பூச்சிகளை பிடித்து உண்ணும்.

வகைப்பாடு

தொகு

பொன்முதுகு மரங்கொத்தியில் ஐந்து துணையினங்கள் அங்கீகரிக்கபட்டுள்ளன:[3]

உடலமைப்பு

தொகு

பொன்முதுகு மரங்கொத்தி 26-29 செ.மீ நீளம் கொண்ட பெரிய இனமாகும். இது பொதுவான மரங்கொத்தியின் வடிவத்தைக் கொண்டது என்றாலும் பொன்நிற மஞ்சள் இறக்கைகள் இதன் தனித்துவமான நிறமாகும். பின் முதுகும் பிட்டமும் கருப்புநிறமாக இருக்கும் இப்பறவையை குங்குமச் சிவப்புக் கொண்ட பின் முதுகும் பிட்டமும் கொண்ட பெரிய பொன்முதுகு மரங்கொத்தியிலிருந்து வேறுபடுத்தி அறியலாம். இதன் மார்பும் வயிறும் வெண்மையானது, அதில் கருப்புக் கீற்றுகள் கொண்டது. வெள்ளைக் கீற்றுகளும் காணப்படும் இதன் கறுப்புத் தொண்டையானது, இந்தியப் பகுதியில் உள்ள மற்ற பொன் முதுகு மரங்கொத்திகளிலிருந்து இதைப் பிரிக்கிறது. இதன் தொண்டையும் தலையின் பக்கங்களும் கறுப்பாகச் சிறு வெண் புள்ளிகளோடு காட்சியளிக்கும். பெரிய பொன்முதுகு மரங்கொத்தியைப் போல இதற்கு இருண்ட மீசைக் கோடுகள் இல்லை.[4][5] முதிர்ந்த ஆண் பறவையின் உச்சியும் கொண்டையும் சிவப்பாக இருக்கும். பெண் பறவைகளின் தலை உச்சியின் முன்புறம் வெள்ளைப் புள்ளிகளுடன் கருப்பாக இருக்கும் பின்புற உச்சி மட்டும் சிவப்பாக இருக்கும். இளம் பறவைகளின் தோற்றம் பெண் பறவைகளைப் போல இருக்கும், ஆனால் மங்கிய நிறத்தில் இருக்கும்.[4]

பரவலும் வாழிடமும்

தொகு

பொன்முதுகு மரங்கொத்தி முக்கியமாக பாக்கித்தான், இமயமலைக்கு தெற்கேயுள்ள இந்தியா மற்றும் மேற்கு அசாம் பள்ளத்தாக்கு மற்றும் மேகாலயா, வங்கதேசம் மற்றும் இலங்கை வரை சுமார் 1200 மீட்டர் உயரம் வரையிலான உயரத்திலும் சமவெளிகளிலும் காணப்படுகிறது. இது அடர்த்தியற்ற காடுகள் மற்றும் சிற்றூர் தோப்புகள் விளைநிலங்களில் காணப்படுகிறது. இவை பெரும்பாலும் நகர்ப்புறங்களில் சாலை ஓர மரங்களில் காணப்படுகின்றது.[6] இராசத்தானின் கட்ச் மற்றும் பாலைவனப் பகுதியில் இது சற்று அரிதாகும்.[7]

நடத்தையும் சூழலியலும்

தொகு

பொன்முதுகு மரங்கொத்தியானது பொதுவாக இணையாகவோ அல்லது சிறு குழுவாகவோ காணப்படும். சில சமயங்களில் பூச்சி புழுக்களைத் தின்னும் பிற பறவைகளோடு மரத்துக்கு மரம் தாவிப்பறந்து மேல்நோக்கித் தொத்தி ஏறியபடி சுற்றிச் சுற்றி வந்து இரை தேடும். அலைபோல் எழுந்தும் தாழ்ந்தும் பறக்கும். இது பறக்கும் போது கிறீச்சிட்டு சிரிப்பது போலக் கத்தும். தரையிலும் இறங்கி எறும்பு முதலியவற்றைத் தின்னும். பழங்கள், மலர்த்தேன் ஆகியவற்றைத் தேடி விரும்பி உண்ணும். [8]

இனப்பெருக்கம்

தொகு

பிப்ரவரி முதல் சூலை முடிய மா, வாகை, முருங்கு ஆகிய மரங்களில் வங்கு குடைந்து மூன்று முட்டைகள் வரை இடும்.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Dinopium benghalense". IUCN Red List of Threatened Species 2016: e.T61517196A95169889. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T61517196A95169889.en. https://www.iucnredlist.org/species/61517196/95169889. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Phenotypic and Genetic Analysis support Distinct Species Status of the Red-backed Woodpecker (Lesser Sri Lanka Flameback: Dinopium psarodes) of Sri Lanka". Novataxa. 29 June 2016. பார்க்கப்பட்ட நாள் 3 February 2019.
  3. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Woodpeckers". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 26 May 2020.
  4. 4.0 4.1 4.2 Rasmussen, Pamela C.; Anderton, John C. (2012). Birds of South Asia. The Ripley Guide. Vol. 2: Attributes and Status (2nd ed.). Washington D.C. and Barcelona: Smithsonian National Museum of Natural History and Lynx Edicions. p. 289. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-96553-87-3.
  5. Blanford, WT (1895). The Fauna of British India, Including Ceylon and Burma. Birds. Volume 3. Taylor and Francis, London. pp. 58–60.
  6. Whistler, Hugh (1949). Popular handbook of Indian birds (4th ed.). Gurney and Jackson, London. pp. 285–287. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4067-4576-6.
  7. Himmatsinhji, MK (1979). "Unexpected occurrence of the Goldenbacked Woodpecker Dinopium benghalense (Linnaeus) in Kutch". J. Bombay Nat. Hist. Soc. 76 (3): 514–515. https://biodiversitylibrary.org/page/48240913. 
  8. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:98

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dinopium benghalense
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்முதுகு_மரங்கொத்தி&oldid=3790371" இலிருந்து மீள்விக்கப்பட்டது