பெரிய பொன்முதுகு மரங்கொத்தி
பெரிய பொன்முதுகு மரங்கொத்தி | |
---|---|
ஆண் கோத்தகிரி, இந்தியா | |
பெண் மேற்கு தொடர்ச்சி மலைகள் greater flameback (C. l. socialis) at கர்நாடகா (இந்தியா) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | |
உள்வகுப்பு: | |
பெருவரிசை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
சிற்றினம்: | |
பேரினம்: | |
இனம்: | C. guttacristatus
|
இருசொற் பெயரீடு | |
Chrysocolaptes guttacristatus (Tickell, 1833) |
பெரிய பொன்முதுகு மரங்கொத்தி (Greater Flameback) பெரும்பாலும் இந்திய துணைக்கண்டத்தில் காணப்படுகிறது. மேலும் தென்சீனா, சுமத்திரா, மலாய் தீபகற்ப பகுதிகளிலும் காணப்படுகிறது.
பெயர்கள்
தொகுதமிழில் :பெரிய பொன்முதுகு மரங்கொத்தி
ஆங்கிலப்பெயர் :greater goldenback, large golden-backed woodpecker
அறிவியல் பெயர் :Chrysocolaptes guttacristatus [2]
உடலமைப்பு
தொகு31 செ.மீ- குங்குமச் சிவப்பு உச்சந்தலையும் கொண்டையும் கொண்ட இதன் பிடரியும் பின்கழுத்தும் வெண்மைநிறம், முதுகும் இறக்கைகளும் பொன்நிறமாக இருக்கும். பிட்டம் உச்சந்தலைபோலவே சிவப்பாக இருக்கும். உடலின் கீழ்ப்பகுதி வெளிர்மஞ்சள் நிறமாகக் கருநிறச் செதிள் அமைப்புடையது. கண்களிலிருந்து கன்னங்கள் வழியே செல்லும் கருப்புப் பட்டைகள் இதன் தனித்த அடையாளம்.
காணப்படும் பகுதிகள், உணவு
தொகுதமிழ்நாட்டின் மேற்கு மலைத்தொடர் சார்ந்த வட்டாரங்களில் காணப்படும். இது சேர்வராயன் மலையிலும் இருக்கக் கூடும். இன்னமும் அதுபற்றிய உறுதியான தகவல் இல்லை. அடிமரங்களில் தொத்தி, பட்டைகளைத் தட்டிப் பூச்சிகளை வெளிப்படுத்திப் பிடித்துத் தின்னும். இது பார்ப்பவர் கண்களில் படாதபடி திறமையாக மறைந்து கொள்ளும். பூச்சிகளோடு மலர்ந்தேன். இலுப்பைப்பூ ஆகியனவற்றையும் உணவாகக் கொள்ளும். கீறிச்சிட்டுச் சிரிப்பது போலக் கத்தும். [3]
இனப்பெருக்கம்
தொகுடிசம்பர் முதல் மார்ச் வரை அடி மரத்தைக் குடைந்து ஒரே ஒரு முட்டையிடும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chrysocolaptes guttacristatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ "பெரிய பொன்முதுகு மரங்கொத்திGreater_flameback". பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2017.
- ↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:97