மலாயா மலைகள்

தென்னிந்தியாவில் இருந்ததாகக் கூறப்படும் புராண மலை

மலாயா மலைகள் (Malaya Mountains) என்பது மச்ச புராணம், கூர்ம புராணம், விஷ்ணு புராணம்[1] போன்ற இந்து நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள இன்றைய கேரளாவிலுள்ள மலைத்தொடர்களின் வரிசை ஆகும். மேலும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற காவியங்களிலும் இம்மலை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.[2][3]

விஷ்ணு புராணம் குறிப்பாக பாரதத்தில் உள்ள ஏழு முக்கிய மலைகளின் சங்கிலிகளில் (மகேந்திரகிரி, மலாயா, சக்யா, சுக்திமட், இரிக்சா, விந்திய மலை மற்றும் பரியாத்ரா) இதைக் குறிப்பிடுகிறது.[4] பிரளயத்தின் போது பெருங்கடலிருந்து படகுடன் வைவஸ்தமனு மற்றும் சப்தரிசிகளையும், மச்ச அவதாரம் எடுத்து திருமால் மீட்டு இந்த மலையில் தங்க வைத்ததாக என மச்ச புராணம் கூறுகிறது..[5]

இந்த மலைகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதியை (மங்களூர் பகுதியிலிருந்து தொடங்கி தெற்கே) தற்கால கேரளாவை உருவாக்கியதாக நம்பப்படுகிறது. அதே சமயம் வடக்கு பகுதி சக்யா மலை என்று அழைக்கப்பட்டது. இந்த மலாயா மலைகளின் சிகரங்கள் சகயா மலையைவிட உயர்ந்தவை என்று கூறப்பட்டது. சங்க இலக்கியம் இந்த மலைகளை பொதியம் என்று அழைக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "The Vishnu Purana: Book II: Chapter III". p. 174. பார்க்கப்பட்ட நாள் 2014-03-26.
  2. D.C. Sircar (1 January 1990). Studies in the Geography of Ancient and Medieval India. Motilal Banarsidass. pp. 243–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0690-0.
  3. Diana L Eck (2012). India: A Sacred Geography. Crown Publishing Group. pp. 125–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-385-53191-7.
  4. "The Vishnu Purana: Book II: Chapter III". p. 174. பார்க்கப்பட்ட நாள் 2014-03-26.
  5. "The Matsya Purana" (PDF). Archived from the original (PDF) on 26 March 2014. பார்க்கப்பட்ட நாள் 26 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாயா_மலைகள்&oldid=4131193" இலிருந்து மீள்விக்கப்பட்டது