மலேசியாவில் சிங்கப்பூரர்கள்

மலேசியாவில் வாழும் சிங்கப்பூர் நாட்டவர்கள்

மலேசியாவில் சிங்கப்பூரர்கள் (Singaporeans in Malaysia) சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள் அல்லது சிங்கப்பூர் வம்சாவளியைச் சேர்ந்த மலேசியாவில் வசிப்பவர்கள் அல்லது பிறந்தவர்களை குறிக்கிறது. 2019 ஆம் ஆண்டில் இத்தகையவர்கள் 91,002 பேர் என்ற மக்கள்தொகையை கொண்டிருந்தனர். ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையின்படி, இவர்கள் வெளிநாட்டு சிங்கப்பூரர்களின் மிகப்பெரிய சமூகமாக உள்ளனர்.[1]

கண்ணோட்டம்

தொகு

மலேசியாவில் வசிக்கும் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் பொதுவாக தொழில் வல்லுநர்களாக வெளிநாட்டில் வாழ்கிறார்கள். ஏனெனில் தொழில் வல்லுநர்கள் மலேசிய நாட்டிற்குள் பல்வேறு தொழில்களில் ஒரு முக்கிய நிபுணத்துவத்திற்காக தேடப்படுகிறார்கள். பெரும்பாலான சிங்கப்பூர் வாசிகள் பொதுவாக கோலாலம்பூர், சிலாங்கூர், மலாக்கா மற்றும் இயோக்கூர் பாரு போன்ற பெரிய நகர்ப்புற மையங்களுக்கு அருகில் குவிந்திருப்பதால், அவர்கள் பொதுவாக உயர் நிர்வாக அல்லது நடுத்தர நிர்வாகத்தில் பதவிகளைக் கொண்ட தொழிலாளர்களாக உள்ளனர்.[2]

இயோக்கூர் -சிங்கப்பூர் சமூக பராமரிப்பு சங்கத்தின் 2014 மதிப்பீட்டின்படி, இயோக்கூரில் சுமார் 5,000 சிங்கப்பூர் குடும்பங்கள் வாழ்கின்றன.[3] மலேசியா எனது இரண்டாவது வீடு திட்டத்தின் கீழ், சிங்கப்பூரில் பணிபுரியும் அல்லது படிக்கும் சிங்கப்பூரர்களும் குறைந்த வாழ்க்கைச் செலவு காரணமாக இயோக்கூரை வசிக்குமிடமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். மலேசியாவிற்கு ஒரு காரை இறக்குமதி செய்யவும் அல்லது உள்ளூர் தயாரிப்பு காரை வாங்கிக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகின்றனர். சிங்கப்பூரர்கள் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட கார்களை சிங்கப்பூரில் ஓட்ட முடியாது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "International migrant stock 2019". United Nations. பார்க்கப்பட்ட நாள் June 25, 2020.
  2. "Going the other way: Some Singaporeans thrive in Malaysia". The Straits Times. 23 May 2013. பார்க்கப்பட்ட நாள் 30 June 2019.
  3. "How feasible is it to move to Johor Baru and drive back and forth for work and school?". The Straits Times. 28 May 2016. பார்க்கப்பட்ட நாள் 30 June 2019.
  4. "About 5,000 Singaporean families have set up home in Johor". AsiaOne. 28 May 2016. பார்க்கப்பட்ட நாள் 30 June 2019.