மலேசிய இந்திய அமைச்சர்கள்

1957 ஆம் ஆண்டு மலாயா சுதந்திரம் அடைந்தது. எட்டு ஆண்டுகள் கழித்து 1963-இல் மலேசியாவாக மாற்றம் கண்டது. கடந்த 54 ஆண்டுகளில் மலேசிய அமைச்சரவையில் 2011 ஆம் ஆண்டு வரையில், ஆறு இந்தியர்கள் முழு அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்துள்ளனர்.

முழு அமைச்சர் பதவிகள்

தொகு

ஆனால், துன் சம்பந்தன் காலத்திலும் சரி, டான்ஸ்ரீ வி. மாணிக்கவாசகம் காலத்திலும் சரி, இரு இந்தியர்கள் முழு அமைச்சர்களாகப் பதவி வகித்து உள்ளனர். 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலு தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

அதன் பிறகு, டத்தோ ஜி. பழனிவேல் ம.இ.காவின் புதியத் தலைவராகப் பதவி ஏற்றார். இவர் தலைவரான பின்னர் தான் மலேசிய இந்தியர்களுக்கு மறுபடியும் இரு முழு அமைச்சர் பதவிகள் கிடைத்தன.

(1955 ஆகஸ்டு – 1974 செப்டம்பர்)

மலேசிய இந்தியர்களில் மிக முக்கியமானவர் துன் சம்பந்தன். ஒரு கோடீஸ்வரராக அரசியலில் நுழைந்தார். ஆனால், ஓர் ஏழையாக அரசியலில் இருந்து விலகினார். தன்னுடைய பணம், பொருள், செல்வம் அனைத்தையும் மலேசிய இந்திய மக்களுக்காக அர்ப்பணிப்பு செய்தார்.

மலாயா சுதந்திரம் அடைவதற்கு முன்னர், இந்திய மக்களின் பிரதிநிதியாக லண்டன் சென்று சுதந்திரப் பிரகடனத்தில் கையொப்பமிட்டு வந்த தலைவர்களில் துன் சம்பந்தனும் ஒருவராவார். மலாய்க்காரர்களைப் பிரதிநிதித்து பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான், சீனர்களைப் பிரதிநிதித்து துன் டான் சியூ சின் கையெழுத்திட்டனர்.

மலாயா சுதந்திரம் அடைவதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்,மத்திய கூட்டரசு சட்டமன்றத்திற்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. மலாயாவின் முதல் பொதுத் தேர்தல் 1955 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது.

தோட்டம் தோட்டமாகச் சென்ற துன் சம்பந்தன்

தொகு

அப்போதைய ம.இ.காவின் தேசியத் தலைவர் துன் வீ.தி. சமபந்தனுக்கு ஈப்போ, கிந்தா உத்தாரா தொகுதி வழங்கப் பட்டது. அதில் வெற்றி பெற்ற துன் சம்பந்தன் மலேசிய அமைச்சரவையில் 1955 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9 ஆம் தேதி தொழிலாளர் அமைச்சர் ஆனார். 1970 களில் துன் வீ.தி.சம்பந்தன் வீடு வீடாக, தோட்டம் தோட்டமாகச் சென்று தோட்டத் தொழிலாளர்களிடம் பத்து பத்து வெள்ளியாகச் சேகரித்து தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தை (National Land Finance Cooperative Society - NLFCS) [1] உருவாக்கிக் கொடுத்தார்.

(1979 அக்டோபர் முதல் 2008 மார்ச்சு வரை)

1974 ஆம் ஆண்டு சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1978 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்று ஊராட்சி வீடமைப்புத் துறை அமைச்சரானார். 1979 அக்டோபர் 12-இல் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் காலமானதும் ம.இ.காவின் தலைமைப் பதவிக்கு வந்தார். பொதுப்பணி அமைச்சராக 2008 ஆம் ஆண்டு வரை 28 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.

(2008 மார்ச்சு 19 முதல் தற்சமயம் வரை)

2004 ஆம் ஆண்டு முதல் முறையாகப் பொதுத் தேர்தலில் சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வீடைப்பு ஊராட்சித்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராக பொறுப்பேற்றார். 2008 ஆம் ஆண்டு தேர்தலில் அதே சிகாமட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மனிதவள அமைச்சராக நியமனம் பெற்று தற்சமயம் வரை பதவியில் இருக்கிறார்.

(2013 மே 16 முதல் தற்சமயம் வரை)

டத்தோ ஜி. பழனிவேல் மலேசியாவின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரும், மலேசிய இந்திய காங்கிரஸ் 8வது தலைவரும் ஆவார். இவர் மலேசியாவின் பகாங் மாநிலத்தின் கேமரன் மலை நகரிண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "National Land Finance Co Operative Society (NLFCS". NLFCS இம் மூலத்தில் இருந்து 2011-11-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111117023255/http://www.nlfcs.com.my/nlfcs.html. பார்த்த நாள்: 30.07.2011@4.43pm.  The society has 49682 members with a share capital of RM 109 million as at 31.12.2009.

வெளி இணைப்புகள்

தொகு