மலைநாடு (கர்நாடகம்)
மலைநாடு தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி ஆகும். மலைநாடு என்பது மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு, மேற்குச் சரிவுகளை உள்ளடக்கிய பகுதியாகும். இதன் கிழக்குப் பகுதியில் தக்காணப் பீடபூமியும் தெற்கில் குடகுப் பகுதியும் மேற்கில் அரபிக் கடலும் எல்லைகளாக உள்ளன.
மலைநாடு ஷிமோகா, சிக்மகளூர், உத்தர கன்னடா, ஹஸன் மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.