மலையின் மாண்பு

மலையின் மாண்பு என்று நன்னூல் மலைக்குரிய பண்புகளைக் குறிப்பிட்டு அப்பண்புகள் ஓர் ஆசிரியருக்கும் இருந்தால் தான் அவர் நல்லாசிரியர் என்ப்படுவார் என்கிறது.

அளந்து அறிய முடியாத அளவுக்கு வடிவத்தால் விரிந்தும், எண்ணிக்கையில் அடங்காத அளவுக்குப் பொருள்களைத் தன்னகத்தே கொண்டிருப்பதும், உயர்ந்த தோற்றமும், அசைக்க முடியாத அளவுக்கு வலிமையும், மழையில்லாமல் வறண்டு நிற்கும் காலத்திலும் நீர்வளம் தரும் வள்ளற்பண்பும் மலைக்குரிய சிறப்புப் பண்புகளாகும்.

அம்மலைக்குரிய பண்புகள் யாவும் நல்லாசிரியருக்கும் அமைந்திருக்கும் என்று நன்னூல் விளக்கம் தருகிறது. அளந்து அறிய முடியாத அளவுக்கு கல்வியில் சிறந்தும், அளந்தறிய முடியாத அளவுக்கு எண்ணிக்கை கொண்ட பல் துறை அறிவும், எவராலும் அசைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு ஆழ்ந்த பாடப்புலமையும், நெடுந்தொலைவிற்கு அப்பால் இருப்பவருக்கும் புகழால் உயர்ந்த தோற்றமளித்தலும், பொருள் கிடைக்காத வறண்ட காலத்திலுங்கூடத் தம்மாணவருக்குக் கல்வியை வாரிவழங்கும் வள்ளல் தன்மையும் ஓர் ஆசிரியருக்கு இருந்தால் அவர் நல்லாசிரியர் ஆவார்.[1]

அடிக்குறிப்புகள் தொகு

  1. அளக்கல் ஆகா அளவும் பொருளும்
    துளக்க ஆகா நிலையும் தோற்றமும்
    வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே.- நன்னூல் 28

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையின்_மாண்பு&oldid=3224217" இலிருந்து மீள்விக்கப்பட்டது