மாதேசுவரன் மலை

(மலை மாதேஸ்வர கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாதேசுவரன் கோயில் என்கிற தலம் மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ளது. இம்மலை தெற்கு கர்நாடகாவிலுள்ள சாம்ராஜ்நாகர் மாவட்டத்தில் உள்ளது. மலை மாதேஸ்வரன் கோயிலுக்கு மைசூரிலிருந்து 150கீ.மீ மற்றும் பெங்களுரிலிருந்து 210கி.மீ தூரம் இருக்கிறது. ஸ்ரீ மலை மாதேஸ்வரன் கோயில் மிகவும் பிரபலமான பாரம்பரியமிக்க திருத்தலம். கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து நிறைய திருப்பயணிகள் இத்திருத்தலத்திற்கு வருகிறார்கள். இந்த திருத்தலத்தின் பரப்பளவு 155.57 ஏக்கர் ஆகும். மாதேஸ்வரன் மலையில் தலபேட்டா, கலவவூர், இந்திகநாதா, போன்ற மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கே வரும் மக்கள் கோயிலுக்கு வருவதோடு இங்கேயுள்ள இயற்கையை ரசிக்கவும் வருகிறார்கள். இந்த மலையின் உயரம் 3000 அடி ஆகும். மாதேசுவரன் கோவிலைக் கட்டியவர் ஜீன்சே கெளடா, மற்றும் குருபா கெளடா என்ற ஜமின்தார்கள் ஆவர். ஸ்ரீ மாதேஸ்வர கடவுளை, சிவனின் ஒரு அவதாரம் என மக்கள் கருதுகிறார்கள். புனித மாதேஸ்வரா அவர்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறனர். 600 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீ மாதேஸ்வரன் இத்திருத்தலத்திற்கு வந்து அவர் தன் பாவத்திற்குப் பரிகாரம் பெற்றார். இப்பொழுதும் அவர் பரிகாரம் தருகிறார் என மக்கள் நம்புகிறார்கள்.மலை மாதேஸ்வரன் புலியின் மேலிருந்து பயணம் செய்தார். அந்த வாகனத்தைச் சில பேர் குழி வாகனா எனவும் கூறுவார்கள். மலை மாதேஸ்வரன் பல அற்புதங்கள் செய்து மக்களைக் காப்பாற்றியதால் `இங்கே உள்ள மக்கள் இன்னும் மலை மதேஸ்வரன் அந்த மலையின் பகுதியிலே வசிக்கிறார் என நம்புகிறார்கள். கிராமத்து மக்கள் மலை மாதேஸ்வரனின் அற்புதங்களைப் பாட்டாக பாடுகின்றனர். அதை ஜனபத காவியம் அல்லது நாட்டுப்புறக்காப்பியம் எனக் கூறுவார்கள்.

மாதேசுவரன் மலை
ಮಲೆ ಮಹದೇಶ್ವರ ಬೆಟ್ಟ
Male Mahadeshwara Hills
புனித்தலம்
மாதேசுவரன் மலையில் அமைந்துள்ள மாதேசுவரன் கோயில்
மாதேசுவரன் மலையில் அமைந்துள்ள மாதேசுவரன் கோயில்
Country இந்தியா
மாநிலம்கர்நாடகம்
மாவட்டம்சாமராஜ்நகர்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அருகில் உள்ள ஊர்கொல்லேகல்
இணையதளம்www.mmhills.com

மலை மாதேஸ்வரனின் கதை

தொகு

மலை மாதேஸ்வரன் கலியுகத்தில் பிறந்தார். அவர் வெள்ளையாக இருப்பார். இவரின் அம்மையாரின் பெயர் யுட்ராஜமா. இவரை சிறுபிள்ளையில் வழிநடத்தியவர்கள் சுட்டூர்மூட் மற்றும் குன்டூர்மூட் ஆவார்கள். இவர் ஸ்ரீ கையிலா என்ற பகுதியில் இருந்து வந்தவர் என நம்பப்படுகிறது. இவர் சிறு வயதியிலே பல அற்புதங்களைச் செய்திருக்கிறார். பிறகு தான் இவர் மலைப் பகுதிக்கு வந்துள்ளார் என நம்பப்படுகிறது. அந்தக் காட்டுப் பகுதியில் 77 மலைகள் உள்ளன. அது மிகவும் ஆபத்தான பகுதி எனக் கருதப்படுகிறது. அவர் ஆறாம் நூற்றாண்டில் அவர் காட்டுப் பகுதிக்குச் சென்றதாக வரலாறு கூறுகிறது. 50 வருடத்திற்கு முன்பு இந்த மலைக்குச் சாலை வசதி இல்லை. அதனால் இங்கே வரும் பக்தர்கள் பெரும்பாலும் நடந்து தான் வந்தார்கள். ஆனால் இப்போது சாலைகள், தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளால் போடப்பட்டுள்ளது. அதனால் இப்போது அந்த வழியில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் செல்கின்றன.

உசாத்துணை

தொகு

இந்திய நாட்டுப்புறக் காவியங்கள்-மலை மாதேஸ்வரனின் வாழ்க்கை(டாக்டர்.சி.என்.ராமசந்தரன்)_ Indian Folk Epics- The Story Of Mahadeshwara(D.R.C.N.Ramachandran) கம்சாளே-ஜனபத லோகா (Kamsaale-Janapada Loka)

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதேசுவரன்_மலை&oldid=2442657" இலிருந்து மீள்விக்கப்பட்டது