மல்யாலா ராஜய்யா
மல்யாலா ராஜய்யா (Malyala Rajaiah) [4] (25 பிப்ரவரி 1944 - 15 அக்டோபர் 2018) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். 1998 முதல் 2004 வரை சித்திப்பேட்டை நாடாளுமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும் 1985 இல் ஆந்தோல் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் 1998 வரை பணியாற்றினார். பின்னர், இந்தியாவின் பன்னிரண்டாவது மக்களவைக்கும் , பதின்மூன்றாவது மக்களவைக்கும் போட்டியிட்டார். [5] [6] [7]
மல்யாலா ராஜய்யா | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1985–1989 | |
தொகுதி | ஆந்தோல் |
மாநில அமைச்சர், நிதிதுறை, ஆந்திரப் பிரதேச அரசு | |
பதவியில் பிப்ரவரி 1989 – நவம்பர் 1989 | |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1994–1998 | |
தொகுதி | ஆந்தோல் |
மாநில minister,வீட்டுவசதித் துறை, ஆந்திரப் பிரதேச அரசு | |
பதவியில் 1996–1998 | |
பன்னிரண்டாவது மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1998–1999 | |
தொகுதி | சித்திப்பேட்டை[1] |
பதின்மூன்றாவது மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1999–2004 | |
தொகுதி | சித்திப்பேட்டை[2] |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 பிப்ரவரி 1944 வேதிரா, கரீம்நகர், ஆந்திரப் பிரதேசம் |
இறப்பு | 15 அக்டோபர் 2018 வரசிகுடா |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி[3] |
துணைவர் | எம். அனுசுயாதேவி |
பிள்ளைகள் | 4 |
வாழ்க்கை
தொகுமல்யாலா ராஜய்யா, 1944 பிப்ரவரி 25 அன்று தெலங்காணா மாநிலம் கரீம்நகரில் உள்ள வேதிரா கிராமத்தில் பிறந்தார். ஐதராபாத்தில் ஒரு கல்லூரியில் இளங்கலை மற்றும் உசுமானியா பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டம் பட்டம் பெற்றார். பின்னர், சிக்கந்தராபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். [5]
தொழில் வாழ்க்கை
தொகுஇவர் அரசியலில் சேருவதற்கு முன்பு, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், தெற்கு மத்திய ரயில்வேயிலும் 8 ஆண்டுகள் பணியாற்றினார். 1975 முதல் 1979 வரை வழக்கறிஞராகவும், பின்னர், 1979 முதல் 1985 வரை நீதிபதியாகவும் பணியாற்றினார். 1985 இல் இவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். 1989 வரை 4 ஆண்டுகள் மதிப்பீடுகள் சட்டமன்றக் குழுவின் தலைவராகவும், பிப்ரவரி முதல் நவம்பர் வரை நிதி மற்றும் மின்துறை அமைச்சராகவும் என். டி. ராமராவ் அமைச்சரவையில் நியமிக்கப்பட்டார். 1994 இல், மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது பட்டியல் சாதியினரின் சட்டமன்றக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1994 இல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1996 முதல் 1998 வரை மாநில வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் 12வது பொதுத் தேர்தலில் சித்திப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு 1999 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் பதின்மூன்றாவது மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் அதிக பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 வரை பதவியில் இருந்தார். இந்த காலகட்டத்தில் இவர் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினருக்கான பாதுகாப்பு, தொழில்துறைக்கான நாடாளுமன்றக் குழு மற்றும் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராக இருந்தார். [8]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுராஜய்யா 25 பிப்ரவரி 1944 இல் மல்லையா மற்றும் துர்கம்மா ஆகியோருக்குப் பிறந்தார். 23 மே 1964 இல் அனசுயாதேவி என்பவரை மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சீனிவாசன், ரவீந்தர் என்ற இரு மகன்களும், சாரதா, சரோஜா என்ற இரு மகள்களும் இருந்தனர். [9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Malyala Rajaiah, Siddipet Lok Sabha Elections 1998 in India LIVE Results - Latest News, Articles & Statistics". LatestLY. 2018-01-15. பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.
- ↑ "Members : Lok Sabha". Parliament of India, Lok Sabha. 2018-02-26. பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.
- ↑ "MALYALA RAJAIAH Lok Sabha Candidate : Search Result". Lok Sabha elections, Vidhan Sabha elections. பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.
- ↑ "Regarding Need To Restore Vacancy Based Roster In Place Of Post Based ... on 19 March, 2001". பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.
- ↑ 5.0 5.1 "Members : Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.
- ↑ "Malyala Rajaiah passes away". பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.
- ↑ "మాజీ మంత్రి రాజయ్య మృతి". பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.
- ↑ "Shri Malyala Rajaiah MP biodata Siddipet-SC". 2018-12-28. பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.
- ↑ "Biographical Sketch of Member of XII Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.