மஸ்கட் மோதீஸ்வரர் கோயில்
மஸ்கட் மோதீஸ்வர் கோயில், ஓமன் நாட்டின் தலைநகரமான மஸ்கட் நகரத்தின் அருகில் உள்ள பழைய மஸ்கட் நகரத்தின் மத்திராப் பகுதியில் அமைந்த 125 ஆண்டுகளுக்கு மேலான மோதீஸ்வர் கோயிலாகும்.
மஸ்கட் மோதீஸ்வரர் கோயில் | |
---|---|
பழைய மஸ்கட் நகரத்தின் சிவன் கோயில் | |
அமைவிடம் | |
நாடு: | ஓமன் |
மாகாணம்: | மஸ்கட் மாகாணம் |
அமைவு: | முத்தரயா, பழைய மஸ்கட் |
ஆள்கூறுகள்: | 23°36′35″N 58°35′18″E / 23.609729°N 58.588217°E |
கோயில் தகவல்கள் |
அமைவிடம்
தொகுமோதீஸ்வர் கோயில், பழைய மஸ்கட் நகரத்தின் சுல்தான் அரண்மனைக்கு அருகிலும், சீப் வானூர்தி நிலையத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
வரலாறு
தொகுஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட் நகரத்தின் அருகில் உள்ள பழைய மஸ்கட் நகரத்தின் மத்திராப் பகுதியில் அமைந்த மோதீஸ்வரர் சிவன் கோயிலை, ஓமன் நாட்டின் பழைய மஸ்கட் நகரத்தில் பல நூற்றாண்டுகளாக வாழும் இந்தியாவின் குஜராத் மாநில வணிகர்கள் இணைந்து 125 ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பியதாகும். 1999ம் ஆண்டில் மோதீஸ்வரர் கோயில் புதுப்பித்துக் கட்டப்பட்டது. இக்கோயில் வளாகத்தில் ஆதிமோதீஸ்வர் மகாதேவர் சன்னதி, மோதீஸ்வரர் சன்னதி மற்றும் அனுமான் சன்னதி என மூன்று சன்னதிகள் உள்ளது. [1]
மகா சிவராத்திரி, தீபாவளி போன்ற சிறப்பு நாட்களில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வர். ஓமன் நாட்டிற்கு அரசுப் பயணமான சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 12 பிப்ரவரி 2018 அன்று மஸ்கட் நகரத்தின் அருகில் உள்ள மோதீஸ்வரர் கோயிலுகுச் சென்று வழிபட்டார். [2] [3]