மாகாளியம் ராமசுவாமி கோயில்
மாகாளியம் ராமசுவாமி கோயில் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கொச்சியில் உள்ள ராமரின் புகழ்பெற்ற கோயிலாகும். இது ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயில் சீபோர்ட்-விமான நிலைய சாலையில் இரும்பனத்தில் அமைந்துள்ளது.
வரலாறு
தொகுஇக்கோயில் சேர வம்சத்தால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. [1]பல ஆண்டுகளுக்கு முன்பு, கோயிலில் ஒரு பெரிய தீ விபத்து நிகழ்ந்ததாகவும் அதில்கிட்டத்தட்ட அனைத்து கோபுரங்களும் பல கட்டுமானங்களும் அதிகமாக சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. நாளடைவில் பக்தர்களால் இந்த புதிய கோயில் கட்டப்பட்டது. தற்போது இது கொச்சி தேவசம் போர்டுக்கு சொந்தமானது. சமீபத்தில் மறுபடியும் கோயில் புதுப்பிக்கப்பட்டது. கூரையில் செப்புத்தகடுகள் வேயப்பட்டன.
இக்கோயிலில் விநாயகர், ஐயப்பன் உள்ளிட்ட துணைத்தெய்வங்கள் உள்ளன. இங்கு அனுமன் சிலை இல்லாமல் வழிபடப்படுகிறார்.
புராணம்
தொகுராமர் மிகவும் சக்திவாய்ந்த வடிவில் இங்கு கருதப்படுகிறார். மூலவரானவர் விஷ்ணு, சிவனின் ஒருங்கிணைந்த சக்தியாகக் கருதப்படுகிறார். இது கேரளாவின் முக்கியமான வைணவ கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.