மாக்கேடா
மாக்கேடா (Makeda) அல்லது சேபாவின் அரசி (எபிரேயம்:מלכת שבא, அரபு மொழி:ملكة سبأ) பழங்கால இராச்சியமான சேபாவினை ஆட்சி செய்த அரசியாவார். வரலாற்றில், எபிரேய விவிலியம், புதிய ஏற்பாடு, குரான், யாமன் மற்றும் எத்தியோப்பிய வரலாறு, ஜொசீபஸ், யோரூபா முதலியவைகளில் இவர் குறிப்பிடப்படுகின்றார். குரானில் அபேசா என்று அறியப்படுகிறார். இவர் ஆட்சி புரிந்த அரசியாக கருதப்பட்டாலும், இதற்கான வரலாற்றுச் சான்று எங்கும் இல்லை[1]. அரசரின் துணைவியாகவும் இருந்திருக்கலாம்.[1] இவரது இராச்சியம் தற்கால ஏமன் அல்லது எத்தியோப்பியாவாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது[2].
சாலமனின் செல்வச்செழிப்பையும் புகழையும் அறிவுகூர்மையையும் அறிந்து செபாவின் அரசி பெரும் கூட்டமாக தன்னிடம் உள்ள நறுமண சமையல் பொருட்கள், தங்கம், விலையுயர் கற்கள் இவற்றுடன் அவனிடம் வந்து தனது மனதைத் திறந்து பேசுகிறாள்:(1 Kings 10:2).
அவள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சாலமன் பதிலளிக்கிறான்; அவளது விடுகதைகளையும் புதிர்களையும் சரியான அறிவோடு சுவையாக மறுமொழிகிறான்; கனிவாக பழகுகிறான். அவனது போக்கால் கவரப்பட்டு சேபாவின் அரசி தான் கொண்டுவந்த உயர்ந்த சமையல் சேர்க்கைகள், தங்கம் மற்றும் வைடூரியக் கற்களை அவனுக்குப் பரிசாக அளிக்கிறாள்(1 Kings 10:10). அதற்கு தகுந்தமுறையில் எதிர்பரிசுகளை சாலமன் தருகிறான் (1 Kings 10:13)[3].
எத்தியோப்பிய வடிவம்
தொகுஎத்தியோப்பியாவின் அரசவம்சம் சாலமன் அரசருக்கும் செபா அரசிக்கும் பிறந்த மகனிடமிருந்து துவங்குவதாக கூறுகிறது[4]. செபாவின் அரசி மாக்கேடா (Makeda) என்று எத்தியோப்பியாவில் அழைக்கப்படுகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 K.A. Kitchen, "On the Reliability of the Old Testament", (Cambridge, U.K.: Wm. B. Eerdmans Publishing, 2003) p. 117.
- ↑ "Canadians uncover 'Queen of Sheba' temple". CBC News. November 10, 2000 இம் மூலத்தில் இருந்து மே 12, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110512002214/http://www.cbc.ca/health/story/2000/09/12/sheba000912.html.
- ↑ Maranatha NIV worship Bible, 1 Kings chapter 10 p. 438
- ↑ Comay, Joan; Brownrigg, Ronald (1993). Who's Who in the Bible: The Old Testament and the Apocrypha, The New Testament. New York: Wing Books. pp. Old Testament, 351. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-517-32170-X.