மாங்கனீசு(II) ஐதராக்சைடு
மாங்கனீசு(II) ஐதராக்சைடு ( Manganese(II) hydroxide) என்பது Mn(OH)2.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத் திண்மமாக இச்சேர்மம் காணப்பட்டாலும் காற்றில் வெளிப்பட நேர்ந்தால் மாதிரிகள் உடனடியாக ஆக்சிசனேற்றம் அடைந்து கருத்து விடுகின்றன. தண்ணீரில் மாங்கனீசு(II) ஐதராக்சைடு சிறிதட்ளவே கரைகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
மாங்கனீசு டையைதராக்சைடு, மாங்கனீசு ஐதராக்சைடு, மாங்கனசு ஐதராக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
18933-05-6 | |
பண்புகள் | |
H2MnO2 | |
வாய்ப்பாட்டு எடை | 88.95 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | 3.258 கிராம்/செ.மீ3 |
உருகுநிலை | சிதைவடையும் |
18 பாகை செல்சியசில் 0.00034 கிராம்/100 மி.லி.[1] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஒரு கார உலோக ஐதராக்சைடுடன் மாங்கனீசு (Mn2+) உப்பின் நீரிய கரைசலை சேர்த்தால் மாங்கனீசு(II) ஐதராக்சைடு திண்மமாக வீழ்படிவாகிறது :[2].
- Mn2+ + 2 NaOH → Mn(OH)2 + 2 Na+.
வினைகள்
தொகுகாற்றில் பட நேர்ந்தால் மாங்கனீசு(II) ஐதராக்சைடு உடனடியாக ஆக்சிசனேற்றம் அடைகிறது. நிற மாற்றம் ஏற்படுவது இதற்கான அடையாளமாகும்.
கட்டமைப்பு
தொகுமாங்கனீசு(II) ஐதராக்சைடு மற்ற உலோக டையைதராக்சைடுகள் போல புரூசைட்டு கட்டமைப்பில் படிகமாகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R., ed. (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ed.). Boca Raton, FL: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0487-3.
- ↑ H. Lux "Manganese(II) Hydroxide" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 1456.