மாங்கனீசு மூவாக்சைடு புளோரைடு

வேதிச் சேர்மம்

மாங்கனீசு மூவாக்சைடு புளோரைடு (Manganese trioxide fluoride) என்பது MnO3F என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பச்சை நிறத்தில் எதிர்காந்தப் பண்பு கொண்ட நீர்மமாக இது காணப்படுகிறது. சேர்மத்தின் பயன்பாடுகள் இல்லை ஆனால் இது ஒரு உலோக மூவாக்சைடு புளோரைடுக்கு ஓர் அரிய உதாரணம் என்பதால் சில கல்வியியல் ஆர்வத்தை கொண்டுள்ளது.

மாங்கனீசு மூவாக்சைடு புளோரைடு
இனங்காட்டிகள்
15586-97-7
ChemSpider 57450402
InChI
  • InChI=1S/FH.Mn.3O/h1H;;;;/q;+1;;;/p-1
    Key: JWSFKFAINKAKTR-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
  • O=[Mn](F)(=O)=O
பண்புகள்
FMnO3
வாய்ப்பாட்டு எடை 121.93 g·mol−1
தோற்றம் பச்சை நிற நீர்மம்
அடர்த்தி 6.042 கி/செ.மீ3
உருகுநிலை −45 °C (−49 °F; 228 K)
கொதிநிலை உருகுநிலைக்கு மேல் சிதைவடையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மாங்கனீசு மூவாக்சைடு புளோரைடு சேர்மம் 1880 ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்டது, ஆனால் மிக சமீபத்தில்தான் சுத்திகரிக்கப்பட்டு படிகமாக்கப்பட்டது.[1] புளோரோகந்தக அமிலம் மற்றும் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு சேர்மங்களை வினைபுரியச் செய்து இதை தயாரிக்கலாம்:

KMnO4 + 2HF -> MnO3F + KF + H2O

மாங்கனீசு மூவாக்சைடு புளோரைடு ஓர் ஒருமமாகப் படிகமாகிறது. எக்சு கதிர் படிகவியல் சோதனை மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நான்முகி வடிவத்தில் உள்ள மூலக்கூறுகள் Mn-O மற்றும் Mn-F பிணைப்புகள் முறையே 1.59 மற்றும் 1.72 Å பிணைப்பு இடைவெளியைக் கொண்டிருக்கின்றன.

மாங்கனீசு மூவாக்சைடு புளோரைடு சேர்மத்திற்கு மாறாக TcO3F மற்றும் ReO3F ஆகியவை திண்ம நிலையில் மிகவும் சிக்கலான கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. இரேனியம் மூவாக்சைடு புளோரைடு சேர்மத்தில் எண்முக புளோரைடு பாலங்களுடன் சங்கிலி அல்லது வளையங்களாகப் படிகமாகிறது. TcO3F சேர்மம் புளோரைடு பாலத்துடன் இருமமாகப் படிகமாகிறது.[2] இரேனியம் சேர்மம் லூயிசு காரங்களுடன் சேர்ந்து நிலையான சேர்மங்களை உருவாக்குகிறது.[3] அதேசமயம் லூயிசு காரங்களின் முன்னிலையில் மாங்கனீசு மூவாக்சைடு புளோரைடு நிலைப்புத்தன்மை அற்றதாக உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Schmidbaur, Hubert; Schwarz, W. H. Eugen (2021). "Permanganyl Fluoride: A Brief History of the Molecule MnO3F and of Those Who Cared for It". Chemistry – A European Journal 27 (23): 6848–6859. doi:10.1002/chem.202004759. பப்மெட்:33219726. 
  2. Supeł, Joanna; Abram, Ulrich; Hagenbach, Adelheid; Seppelt, Konrad (2007). "Technetium Fluoride Trioxide, TcO3F, Preparation and Properties". Inorganic Chemistry 46 (14): 5591–5595. doi:10.1021/ic070333y. பப்மெட்:17547395. 
  3. Supeł, Joanna; Marx, Rupert; Seppelt, Konrad (2005). "Preparation and Structure of Rhenium Fluoride Trioxide ReO3F, and the Polymorphism of Rhenium Trifluoride Dioxide, ReO2F3". Zeitschrift für anorganische und allgemeine Chemie 631 (15): 2979–2986. doi:10.1002/zaac.200500239.