மாங்கனோசைட்டு

ஆக்சைடு கனிமம்

மாங்கனோசைட்டு (Manganosite) என்பது MnO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரியவகை கனிமமாகும். மாங்கனீசு(II) ஆக்சைடு என்ற சேர்மத்தால் இக்கனிமம் ஆக்கப்பட்டுள்ளது. முதன்முதலில் 1817 ஆம் ஆண்டு செருமனியிலுள்ள சேக்சோனி மாநிலத்தின் ஆர்சு மலைகளில் மாங்கனோசைட்டு கண்டறியப்பட்டு விவரிக்கப்பட்டது [3]. சுவீடனின் லேங்பேன், நார்துமார்க் என்ற சுரங்கப்பகுதியிலும் அமெரிக்காவின் நியூ செர்சியிலுள்ள பிராங்க்ளின் சுரங்கத்திலும், சப்பான், கிர்கிசுத்தான், மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினோ பாசோ போன்ற இடங்களிலும் இக்கனிமம் கிடைப்பதாக அறியப்படுகிறது [4].

மாங்கனோசைட்டு
Manganosite
கருப்பு நிற மாங்கனோசட்டு கனிம்ம் சிங்கைட்டு மற்றூம் சோனோலைட்டுடன்
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடுமாங்கனீசு ஆக்சைடு, MnO
இனங்காணல்
நிறம்மரகதப்பச்சை, காற்ரில் பட்டால் கருப்பு நிறமாகும்
படிக இயல்புமணிகளாகவும் பொதியாகவும்; எண்முகப் படிகங்கள்
படிக அமைப்புகனசதுரம்
பிளப்பு[100], [010] மற்றும் [001] இல் சரிபிளவு
முறிவுஇழைமம்
மோவின் அளவுகோல் வலிமை5 - 6
மிளிர்வுவிடாப்பிடியான பளபளப்பு
கீற்றுவண்ணம்பழுப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும் மற்றும் கசியும்
ஒப்படர்த்தி5.364
ஒளியியல் பண்புகள்சமதிருப்பம்
ஒளிவிலகல் எண்n = 2.16–2.17
மேற்கோள்கள்[1][2][3][4]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் மாங்கனோசைட்டு Mng[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

பொதுவாக மாங்கனீசு பாறை முடிச்சுகளில் மாங்கனோசைட்டு தோன்றுகிறது. ரோடோகுரோசைட்டு போன்ற மாங்கனீசு கனிமங்கள் குறைவு ஆக்சிசன் வளருருமாற்றத்தின் போதும், நீர்வெப்ப உருமாற்றத்தின் போதும் மாங்கனோசைட்டாக மாற்றமடைகின்றன ref name=Handbook/>.

மேற்கோள்கள்

தொகு
  1. Mineralienatlas
  2. Manganosite data on Webmineral
  3. 3.0 3.1 Manganosite data from Mindat.org
  4. 4.0 4.1 Manganosite in the Handbook of Mineralogy
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கனோசைட்டு&oldid=4095056" இலிருந்து மீள்விக்கப்பட்டது